ரஜினி என்னைப் பாராட்டினார்! | நந்திதா, நடிகை, nandita, actress, rajini, ரஜினி

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (11/07/2014)

கடைசி தொடர்பு:12:50 (11/07/2014)

ரஜினி என்னைப் பாராட்டினார்!

''கன்னடத்துல நான் நடிச்ச முதல் படம் மெகாஹிட். அப்புறம் தமிழ்ல 'நளனும் நந்தினியும்’, 'அஞ்சல’, 'இடம் பொருள் ஏவல்’, 'ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி’னு தொடந்து  வாய்ப்புகள் அதிகம் கிடைக்கிறதால, வேற மொழிகள்ல நடிக்க நேரமே இல்லை'' - பிஸியாக இருந்தாலும் குஷியாகப் பேசத் தொடங்கினார் நந்திதா.

  

''பூர்ணிமா, குமுதா, கலைவாணி... நடிச்ச கேரக்டர்ல ரொம்பப் பிடிச்ச கேரக்டர் எது?''

''ரொம்ப ரசிச்சு நடிச்ச கேரக்டர் குமுதா. எப்பவும் ஜாலியா பேசிச் சிரிச்சுக்கிட்டு இருக்கிற என்னால, 'இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் முழுக்க சிடு மூஞ்சியா முறைச்சு நடிச்சது வித்தியாசமான அனுபவம். ரொம்ப ரொம்பப் பிடிச்சது 'முண்டாசுப் பட்டி’ கலைவாணி கேரக்டர்தான். சின்னப்பொண்ணா, இன்னொசென்டான கேரக்டர்ல பின்னிட்டேன்ல?''

'' 'நளனும் நந்தினியும்’ல டைட்டில் கேரக்டர் பண்ணது இன்னும் சவாலா இருந்திருக்குமே?''

'''அட்டகத்தி’ படத்துக்கு அடுத்து நான் நடிச்ச படம் இது. இதுவரை நான் நடிச்சதிலேயே மெச்சூர்டான கேரக்டர் நந்தினி. முதல் பாதியில் காலேஜ் படிக்கிற பொண்ணாவும், ரெண்டாவது பாதியில் கல்யாணம் ஆன பொண்ணாவும் வர்றேன். என் கேரியர்ல நான் பண்ண ரொம்ப பவர்ஃபுல்லான கேரக்டர். படம் பார்த்துட்டு வெளியே வரும்போது எல்லோரோட மனசுலேயும் 'நந்தினி’ கேரக்டர் அவ்வளவு அழுத்தமாப் பதியும்.''

'' 'நளனும் நந்தினியும்’, 'ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி’ படங்கள்ல கல்யாணம் ஆன பொண்ணா நடிக்கிறீங்க. வளர்ந்து வர்ற நடிகைகள் அவ்வளவு ஈஸியா இதுக்கு ஓகே சொல்லிட மாட்டாங்களே?''

''கண்டிப்பா சொல்ல மாட்டாங்கதான். ஆனா, ரெண்டு பாட்டு, நாலு வசனம்னு வழக்கமான ஹீரோயினா இருக்கப் பிடிக்கலை. 'ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு விதமாப் பண்றாங்க’னு ஆடியன்ஸ் சொல்றாங்க. இதுதான் எனக்குப் பெருமையா இருக்கு. அதனால, நல்ல கதைகள் மட்டும் இருந்தா, அடுத்த நிமிஷமே அந்தப் படத்துக்கு என் கால்ஷீட் ரெடியா இருக்கும். இப்படி இருக்கிறதனாலதான் 'நளனும் நந்தினியும்’ பார்த்துட்டு, 'ரெண்டாவது படத்திலேயே 100 சதவிகித நடிகை ஆயிட்டே’னு வெங்கட் பிரபு சாரும், வெற்றிமாறன் சாரும் பாராட்டினாங்க. 'முண்டாசுப்பட்டி’யைப் பார்த்துட்டு ரஜினி சார் பாராட்டினார். சாதாரண ஹீரோயினா இருந்திருந்தா இந்தப் பாராட்டுகளுக்காக எத்தனை வருஷம் வெயிட் பண்ணியிருக்கணும்?''

''அப்படினா, பெரிய நடிகர்களோட நடிக்கிற ஐடியாவே இல்லையா?''

''பெரிய நடிகர்களோட நடிக்கணும்கிற ஆசை எல்லா நடிகைகளுக்கும் இருக்கும். ஆனா, எனக்கான முக்கியத்துவத்தை நான் இழக்கமாட்டேன். இங்கேயேதானே இருக்கப் போறேன். இந்த வருஷமோ, அடுத்த வருஷமோ... கண்டிப்பா பெரிய ஹீரோவோட ஜோடியாகிடுவேன்.''

''தொடர்ந்து ஹோம்லி இமேஜ்லேயே இருக்கிறது போர் அடிக்கலையா?''

''நான் என்ன பண்றது? ரசிகர்கள் என்கிட்ட இதைத்தான் எதிர்பார்க்கிறாங்க. தவிர, என்னை அப்ரோச் பண்ற இயக்குநர்களும் ஹோம்லியான கேரக்டர்தான் சொல்றாங்க. எல்லா நடிகைகளுக்கும் ஹோம்லி கேரக்டர் செட் ஆகிடாது. அதுக்காக இப்படியே நடிச்சுட்டு இருப்பேனு சொல்ல வரலை. பெங்களூர்ல பொறந்து, வளர்ந்த பொண்ணு நான். கிளாமர் கேரக்டரெல்லாம் எனக்கு கஷ்டமா இருக்காது.''

''படத்துல 'டான்ஸ் ஆடக் கூடாது’னு எதுவும் ரூல்ஸ் வெச்சிருக்கீங்களா?''

''அய்யய்யோ... டான்ஸ்னா எனக்கு அவ்வளவு உயிர். ஆனா, இதுவரை நடிச்சு ரிலீஸான படங்கள்ல அந்த வாய்ப்பு வரலை. கவலைப்படாதீங்க, மொத்தமா சேர்த்து 'ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி’ படத்தில் மூணு பாட்டுக்கு ஆடியிருக்கேன். அதுல செம குத்துப்பாட்டும் இருக்கு!''

- கே.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close