என் மூக்கு ப்ளஸ் பாயிண்ட்! | vikram prabhu, விக்ரம் பிரபு

வெளியிடப்பட்ட நேரம்: 12:59 (21/07/2014)

கடைசி தொடர்பு:12:59 (21/07/2014)

என் மூக்கு ப்ளஸ் பாயிண்ட்!

தனக்குத்தானே கேள்வி கேட்டு, பதிலும் சொல்வது தி.மு.க. தலைவர் கருணாநிதி யின் பாணி. அதே பாணியில் 'கேள்வியும் நானே, பதிலும் நானே’ என்று களம் இறங்குகிறார் விக்ரம் பிரபு.

 

''விக்ரம் என்ற பேர் உனக்கு எந்த அளவுக்குப் பிடிக்கும்?''

''அளவே கிடையாதுப்பா... ஏன்னா அது அப்பாவோட செலக்ஷன். 'உத்தமபுத்திரன்’ படத்துல தாத்தா நடிச்ச விக்ரமன் என்ற கேரக்டர்ல அப்பா இம்ப்ரெஸ் ஆகி வெச்ச பேர் அது.''

''உன்னோட மூக்கைப் பார்க்கும்போது என்ன தோணுது?''

''ஒவ்வொருத்தருக்கும் ஒரு வித்தியாசமான அம்சம் இருக்கும். எனக்கு இந்த மூக்கு. 'உணர்ச்சிகளை வெளிக்காட்டி நடிக்கும்போது உன் மூக்கு உனக்கு பெருசா உதவி பண்ணுதுப்பா’னு தாணு சாரைச் சொல்ல வெச்ச மூக்கு இது.''

''தாத்தாவைப் பற்றி உன் மனசுக்குள் இருக்கும் ரொம்பப் பழமையான ஞாபகம்?''

''பொதுவா தாத்தா ஷூட்டிங் இல்லாத நாட்கள்லகூட காலைல சீக்கிரமா எழுந்து குளிச்சு ரெடியாகி எட்டு மணிக்கு ஹாலுக்கு வந்துடுவாங்க. நாங்க மேல மாடியில இருப்போம். கீழே இருந்து ஒரு உறுமல் கேட்கும். அப்படினா நாங்க கீழே சாப்பிட வரணும்னு அர்த்தம். வந்துடுவோம். அப்புறம் தாத்தா வாக்கிங் போகும்போது வெங்கடாச்சலம்னு ஒரு மாஸ்டர் கூடவே இருப்பார். ஒரு நாள் அவரைக் கூப்பிட்டு 'இந்தப் பசங்களுக்கு எல்லாம் சிலம்பம் கத்துக் குடுறா’னு சொன்னாங்க. ஒரு நாள் நான் சீரியஸா ஒரு நீண்ட வரிசை சிலம்பம் ஆடி முடிச்சதும் ஜன்னலுக்குள் இருந்து கைதட்டல் கேட்டது. அப்போதான் தாத்தா அங்கே நிக்கிறதே தெரிஞ்சுது. அந்தக் கைதட்டல் ரொம்ப சந்தோஷமா இருந்தது.''

''அப்பா கொடுக்கும் டஃப் ஃபைட்?''

''ஷூட்டிங்ல டான்ஸ் ஆடுற சீன்ஸ் வந்தாலே எல்லா டான்ஸ் மாஸ்டர்ஸும் அப்பாவோட டான்ஸ் திறமையைப் பாராட்டிப் பேச ஆரம்பிச்சுடுவாங்க. அதுதான் பெரிய டஃப் ஃபைட்.  நல்லா ஆடலைனா அப்பா என் எதிர்ல நின்னு  கிண்டல் பண்ணி சிரிக்கிற மாதிரியே தோணும்.''

''போர் அடிக்கும்போது என்ன செய்வே?''

''பேசாம நமக்குப் பிடிச்ச டிஷ்ஷை சமைச்சு சாப்பிட்டுட்டுத் தூங்குவேன். கலிபோர்னியாவுல படிச்சப்போ சிக்கன், பர்கர்னு செய்யக் கத்துகிட்ட  சமையலை இப்பவும் செஞ்சு க்ளோஸ் ஃப்ரெண்டஸ்கூட சேர்ந்து சாப்பிடும் இன்ட்ரஸ்ட் இருக்கே, அது தனி சுகம்தான்!''  

'' 'கும்கி’ முதல் நாள் ஷூட்டிங் போறதுக்கு முதல் நாள் இரவு நடந்த கூத்து...''

''யப்பா... தூக்கமே வரலை. கண்ணை மூடி படுத்துகிட்டு பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை  முழிச்சு முழிச்சு 'விடிஞ்சிருச்சா?'னு பாத்துக்கிட்டு, விடிஞ்ச பிறகுதான் ரிலாக்ஸ் ஆச்சு.''

''தாத்தா நடிச்ச படங்களில் பிடிச்ச ஒரு படம்?''

'' 'உத்தம புத்திரன்’.'தெய்வ மகன்’. ஒண்ணோ ரெண்டோ சொல்லி முடிக்க முடியுமா என்ன?''

''பிடிச்ச டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்....?''

''ஹாங்காங், லண்டன், நியூயார்க்.''

''பப்புக்குப் போற பழக்கமே இல்லையாமே?''

ஃப்ரெண்ட்ஸ்கூட ரிலாக்ஸ்டா பேசிட்டு இருக்கறதை விடவா பப் பெரிசு?''

ஃப்ரெண்ட்ஸ்கூட சண்டை வந்தால்?''

''பேசித் தீர்த்துக்கலாம். அப்படித் தீர்க்க முடிஞ்சாதான் அவங்க ஃப்ரெண்ட்ஸ்!''

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்