Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

“நான் எதையும் மிஸ் பண்ண மாட்டேன்!”

ஸ்ருதி ஹாசனுடன் சில நிமிடங்கள் பேசினாலே, 'வாட் எ சேஞ்ச் ஓவர்’ என ஆச்சர்யப்படுத்துகிறார். 'மியூசிக் ஆல்பம்தான் என் ஆர்வம்’ என்று மீடியா முன்பு சின்னக் கூச்சத்துடன் பேசிய 'டீன் ஏஜ்’ ஸ்ருதி இல்லை இவர். 'ரேஸ் குர்ரம்’ தெலுங்குப் படத்தில் செம ஆட்டம் போட்ட, தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டெட் பொண்ணு!

''எந்த விஷயம் பத்தி பேசினாலும் கடைசியில காதல் பத்தி நிச்சயம் கேட்பீங்க. அதனால நானே அதைப் பத்தி முதல்லயே சொல்லிடுறேன். போன ரெண்டு வருஷத்துல ஒரு நாள்கூட எனக்கு ஹாலிடே இல்லை. பிறந்த நாளுக்கு மட்டும்தான் லீவு எடுத்திருக்கேன். மூணு நாட்களுக்கு முன்னாடி நீங்க பேசினப்போ, முசோரியில் இருந்தேன்; ஸ்டில்ஸ் அனுப்பிச்சப்ப, டேராடூன்ல இருந்தேன்; இப்ப, காரைக்குடியில் இருக்கேன். பேட்டி முடிச்சதும் மும்பை பறக்கணும். இதுக்கு நடுவுல காதலிக்க எங்கே நேரம்? இப்போதைக்கு யாரையாவது காதலிக்கணும்னா... ஒரு பைலட்டைத்தான் நான் காதலிக்க முடியும். ஓ.கே.!''

'' 'ஏழாம் அறிவு’ ஸ்ருதிக்கும் 'பூஜை’ ஸ்ருதிக்கும் ஏகப்பட்ட சேஞ்ச். என்ன பண்ணீங்க?''

''ஹா... நோட் பண்ணிட்டீங்களா? தேங்க் காட். உண்மைதான். ஒவ்வொரு நிமிஷமும் என் கவனம் அதில்தான் இருக்கு. நமக்கே நமக்குனு ஒரு ஐடென்ட்டி தேவைப்படும் சூழ்நிலை வர்றப்போ, எல்லாருமே மாறுவோம்ல. அந்த மாற்றங்கள்தான். நான் கத்துக்கிட்டே இருக்கேன். நிறைய அனுபவங்கள் கிடைச்சிருக்கு. யெஸ்... கொஞ்சம் வளர்ந்திருக்கேன். கடவுளும் அம்மா-அப்பாவும் கொடுத்த பிளெஸ்ஸிங்க்ஸும் ஒரு காரணம்!''

''தெலுங்கு சினிமால உங்களைக் கொண்டாடுறாங்களே..!''

''நான் ஒரு தமிழ் பொண்ணு. தெலுங்கில் நடிக்க ஆரம்பிச்சப்ப, தெலுங்கு சுத்தமாப் பேசவே வராது. ஆனா, அங்கே என்னை அவங்க வீட்டுப் பொண்ணு போல செலிப்ரேட் பண்றாங்க. அங்கே கிடைக்கிற பாசம், மரியாதை எல்லாம் பிரமாதம். அதுக்காகவே கொஞ்சம் கொஞ்சம் தெலுங்கு கத்துக்கிட்டு இருக்கேன்!''

''இவ்வளவு பரபரப்புல எதையெல்லாம் மிஸ் பண்றீங்க?''

''என்னைப் பத்தி தெரிஞ்சவங்களுக்கு, 'நான் எதையுமே மிஸ் பண்ற ஆளு இல்லை’னு தெரியும். எனக்கு ஏதாவது தேவைனா, என்ன செஞ்சாவது அதை நிச்சயம் அடைஞ்சுடுவேன். அதுதான் என் கேரக்டர். ரொம்ப அழுத்திக் கேட்டா, தூக்கத்தை மிஸ் பண்றேன்னு சொல்லலாம். ஒரு நாள் லீவ் கிடைச்சாலும், நாள் முழுக்கத் தூங்கிட்டுத்தான் இருப்பேன்!''

''இந்தி, தெலுங்குல அன்லிமிடெட், தமிழ்ல அண்டர்ப்ளே... இதுதான் உங்க கிளாமர் ஃபார்முலாவா?''

''கேரக்டருக்கு ஏத்த மாதிரி, டைரக்டர் சொல்ற மாதிரி நடிக்கிறது மட்டும்தான் என் ஃபார்முலா. 'ஏழாம் அறிவு’ சுபாவோ, '3’ ஜனனியோ கிளாமரா இருக்க மாட்டாங்க. ஆனா, 'ரேஸ் குர்ரம்’ ஸ்பந்தனா செம ஜாலி கேர்ள். அவ அப்படித்தான் இருப்பா. இந்திப் படம் 'டி-டே’வில் மொத்தமே

25 நிமிஷம்தான் என் போர்ஷன். 'ரெண்டு மணி நேரப் படத்தில் அரை மணி நேரம் மட்டும் வர்ற ரோலை ஏன் கமிட் பண்ணினே?’னு பலர் கேட்டாங்க. ஆனா, படம் பார்த்த பிறகு 'ரொம்ப நல்ல கேரக்டர்’னு பாராட்டினாங்க. அப்படி கேரக்டர்கள்தான் என் பாடி லாங்வேஜ், கிளாமர் லுக் எல்லாத்தையும் முடிவு பண்ணும்!''

''அப்புறம் ஏன் 'டி-டே’வை தமிழ் டப்பிங் பண்ணக் கூடாதுனு சொன்னீங்க?''

''நான் தமிழ், தெலுங்கு, இந்தினு மூணு பவர்ஃபுல் ஏரியாக்களில் படங்கள் பண்றேன். 'டி-டே’ ஏற்கெனவே சென்னை, ஹைதராபாத்னு எல்லா ஏரியாவிலும் இந்தியிலேயே ரிலீஸ் ஆச்சு. எல்லாரும் பார்த்துட்டாங்க. அப்புறம் எதுக்குத் திரும்ப தமிழ் டப்? 'கிட்டத்தட்ட எல்லாரும் பார்த்த படத்தை ஏன் தேவை இல்லாம டப் பண்ணி ரிஸ்க் எடுக்கிறீங்க?’னு கேட்டேன். அதை ஒரு சர்ச்சை ஆக்கிட்டாங்க!''

''தங்கச்சி அக்ஷராவும் நடிக்க வந்துட்டாங்களே... டிப்ஸ் எதுவும் கொடுத்தீங்களா?''

''நானா? அவதான் எனக்கு நிறைய டிப்ஸ் கொடுப்பா. பால்கி சார் டைரக்ஷன், அமிதாப் சார்கூட நடிக்கிறதுனு முதல் பட வாய்ப்பே இப்படி அமைவது பெரிய விஷயம். எதிலும் அக்ஷரா பெர்ஃபெக்ட். அவ பயணத்தை அவளே டிசைன் பண்ணிக்குவா!''

''நீங்களே ஒரு கம்போஸர். சமீபத்தில் யார் மியூசிக் உங்களுக்குப் பிடிச்சது?''

''தமிழ்ல இப்போ எனக்கு ரொம்பப் பிடிச்ச கம்போஸர் அனிருத். ஏகப்பட்ட வெரைட்டி தர்றார். ரொம்பத் திறமையானவர்!''

''உங்ககிட்ட உங்களுக்குப் பிடிச்ச, பிடிக்காத விஷயங்கள் என்ன?''

''பிடிச்சது... எனக்குச் சரினு முடிவு பண்ண விஷயத்தில் உறுதியா இருப்பது. பிடிக்காதது... நினைச்ச விஷயம் உடனே, இன்னைக்கே, இப்பவே நடக்கணும்னு நினைக்கிறது!''

''சித்தார்த், தனுஷ், சுரேஷ் ரெய்னா... இவங்கள்லாம் உங்க ஃப்ரெண்ட்ஸ்தானே..? இவங்ககிட்ட இருந்து நீங்க கத்துக்கிட்ட ஒரு நல்ல விஷயம் சொல்லுங்க..?''

பதில் சொல்லாமல் குறும்பாகச் சிரிக்கிறார்.

''இதுவரைக்கும் பேசினதுல இருந்து ஏதாவது ஒரு தலைப்பு ஃபிக்ஸ் பண்ணிக்கங்களேன். இந்தக் கேள்விக்கு என்கிட்ட இருந்து நீங்க பதில் வாங்கவே முடியாது!''

கடைசிப் பந்தில் 'கிளீன் போல்டு’!

- ம.கா.செந்தில்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement