கிசுகிசு வரத்தானே செய்யும்! | priya anand, ப்ரியா ஆனந்த்

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (04/08/2014)

கடைசி தொடர்பு:13:40 (04/08/2014)

கிசுகிசு வரத்தானே செய்யும்!

'அரிமா நம்பி’ வெற்றியில் குஷியாக இருக்கும் ப்ரியா ஆனந்த் தமிழில் கணிசமான படங்கள் கைவசம் வைத்துள்ள கதாநாயகிகளில் ஒருவர். 'வை ராஜா வை’ , 'இரும்புக் குதிரை’, 'ஒரு ஊருல ரெண்டு ராஜா’ என்று அடுத்தடுத்து ரிலீஸ் தேதியை எதிர்நோக்கிக்கொண்டிருப்பவரிடம் பேசினேன்.

 

''சினிமாவில் உங்க லட்சியம் என்ன?''

''வேறென்ன, நிறைய ஹிட் படங்கள் கொடுக்கணும்கிறதுதான். ஆனா அது நம்ம கையில இல்லையே. கதை கேட்கும்போது பிடிச்சு, ஒரு படத்தை ஒத்துக்கிறோம். அப்புறம் அது எடுக்கப்படும் விதம், வெளியாகும் நேரம், ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் இதையெல்லாம் வெச்சுதான் வெற்றி தோல்வி முடிவாகுது. நல்லா நடிச்சுக் கொடுக்கணும். நம்மால அதுதானே முடியும்.''

''சினிமா உலகில் பெஸ்ட் ஃப்ரெண்ட்?''

'' 'கண்ணா லட்டு திங்க ஆசையா’ படத்துல ஹீரோயினா நடிச்ச விசாகா. 'சுப்க்ரே’ என்ற இந்திப் படத்துல நடிக்கும்போது பழக்கம். நான் கேட்டுக்கிட்டதுக்காக என் கூட ஒரு படத்துல சேர்ந்து நடிக்கிறாங்க. ரொம்ப ஃப்ரெண்ட்லி.''

''உங்களுக்கு ரொம்ப ஃப்ரெண்ட்லியான ஹீரோ யார்?''

''நிஜமாவே சொல்றேன். நான் நடிச்ச, நடிக்கிற எல்லா ஹீரோவுமே என்கிட்ட ஃப்ரெண்ட்லியாதான் இருந்தாங்க, இருக்காங்க. யாருமே ஈகோ பார்க்கல. உதவியா இருந்தாங்க. நான் அவங்க கிட்ட நிறைய கத்துக்கிட் டேன்.''

''நடிச்ச கேரக்டர்ல ரொம்பப் புடிச்சது?''

'' 'வணக்கம் சென்னை’ படத்துல இயக்குநர் கிருத்திகா உதயநிதி கொடுத்த ஹீரோயின் கேரக்டர்தான். அதுக்காக அவங்களுக்கு நான் ஸ்பெஷலா நன்றி சொல்லணும். அந்தக் கதையே என் கேரக்டரோட கோணத்தில்தான் சொல்லப்பட்டு இருக்கும். தவிர அனிருத் மியூஸிக், ரிச்சர்டு நாதன் கேமரா எல்லாம் சூப்பரா இருக்கும்.''

''எந்த மொழியில் டயலாக் பேசுறது உங்களுக்குப் பிடிச்சு இருக்கு?''

''தெலுங்குதான். இத்தனைக்கும் என் அம்மா தமிழ்தான். ஆக்சுவலா 'லீடர்’ படத்துல நடிக்கும்போதுதான் தெலுங்கே எனக்கு அறிமுகம்.

கத்துக்கிட்டு அப்புறம் நல்லா பேச ஆரம்பிச்சுட்டேன்.''

''ரொம்ப ரசிக்கும் ஹாலிடே ஸ்பாட்?''

''அமெரிக்காவில் அப்ஸ்டேட் நியூயார்க்கில் என் அப்பா அம்மா எல்லோரும் இருக்கும் எங்க வீடுதான். ஆனா அங்கே போகத்தான் நேரமே கிடைக்கலை. ரொம்ப ஏக்கமா இருக்கு.''

''அடிக்கடி வரும் கனவு?''

''தினமும் அஞ்சு மணி நேரம் தூங்கினாலே பெருசு. அதுல கனவு. நோ சான்ஸ்.''

''எதுக்கு யோசிக்காம செலவு பண்ணுவீங்க?''

''சாப்பாடு! டிரெஸ் பிடிச்சுப்போச்சுனா விலையைப் பத்திக் கவலைப்படவே மாட்டேன். இது நல்ல பழக்கம்தானே?''

''சாப்பிடப் பிடிச்சது எது? சமைக்கப் பிடிச்சது எது?''

''சாப்பிடப் பிடிச்சது பிரியாணி. சமைக்கப் பிடிச்சது கேக்.''

''உங்களைப் பத்தி நிறைய கிசுகிசு வருதே?''

''நிறையப் படங்கள் பண்றேன். அப்புறம் வரத்தானே செய்யும்!''

விவரம்தான்!

- சு.செ.குமரன்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்