அனிருத்தான் என் முதல் ஃப்ரெண்ட்! | amitash, vip, anirush, dhanush, அமிதேஷ், அனிருத், ,விஐபி, தனுஷ்

வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (05/08/2014)

கடைசி தொடர்பு:14:45 (05/08/2014)

அனிருத்தான் என் முதல் ஃப்ரெண்ட்!

 

'ஹேய்... அமுல்பேபி’ என்று தனுஷால் 'வேலையில்லா பட்டதாரி’ படத்தில் அழைக்கப்பட்ட வி.ஐ.பி. வில்லன் அமிதாஷ், உண்மையிலேயே அமுல்பேபி மாதிரிதான் இருக்கிறார்.

''என் அப்பாவும் அம்மாவும் கன்னடம். ஆனா நான் பிறந்து வளர்ந்ததே சென்னைதான். எனக்கும் சினிமாவுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு. பல வருடங்களுக்கு முன்பு கார்த்திக், குஷ்பு நடித்த 'விக்னேஷ்வர்’ படத்தில் என் அப்பா ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார்.''

''அனிருத் உங்களுக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட்னு கேள்விப்பட்டோமே?''

''இந்த உலகத்துல எனக்குக் கிடைச்ச முதல் ஃப்ரெண்டே அனிருத்தான். ரெண்டு பேரும் ப்ரிகே.ஜி-ல ஸ்கூல்மேட். அப்புறம் ஸ்கூல் மாறிட்டோம். ஆனாலும் எங்க ஃப்ரெண்ட்ஷிப் தொடர்ந்தது... தொடருது.''

''அவராலதான் சினிமா ஆசை வந்ததா?''

''இல்லை. ஆனா, உண்மையைச் சொன்னா, நம்ப மாட்டீங்க. என்னோட மூணு வயசில் ஷாருக்கானை டி.வி-யில் பார்த்தபோது எனக்கு நடிப்பு ஆசை வந்தது. என் அம்மாகிட்ட அப்பவே நான் நடிகனாகணும்னு சொன்னேன். பாத்தீங்களா நம்ப மாட்டீங்கனு சொன்னேன்ல?''

''அப்புறம் எப்படி நடிக்க வந்தீங்க?''

''அண்ணா யுனிவர்சிட்டியில் மாஸ்டர் ஆஃப் எலக்ட்ரானிக் மீடியா படிச்சுட்டே நாடகங்களில் நடிச்சேன். சினிமாவில் ஹீரோவாக முயற்சி பண்ணினேன். மணிரத்னம் சார், கிருத்திகா உதயநிதினு பலரை சந்திச்சுப் பேசினேன். இந்த நேரத்துல அனிருத்தோட சிஸ்டர் கல்யாணத்துக்கு வந்த தனுஷ் சார் என்கிட்டே வந்து, என் படத்துல வில்லனா நடிக்கிறீங்களானு கேட்டார். நான் தனுஷ் சாரோட தீவிர ரசிகன். அவரோட 'ஆடுகளம்’ என்னோட ஃபேவரைட். அவரே கேட்ட அந்த நொடி ஹீரோ ஆசையைத் தள்ளி வெச்சுட்டு வில்லன் ரோலுக்குத் தலையாட்டிட்டேன்.''

''கடைசிக் காட்சியில் உங்களை வெச்சு காமெடி பண்ணிட்டாங்க போல?''

''நடிக்கும்போது எனக்கே ஒரு மாதிரிதான் இருந்தது. ஆனா ஃபேஸ்புக்ல அந்த சீனுக்கு மத்த சீன்களைவிட ஏகப்பட்ட பாராட்டுகள்.''

''ரொம்பக் கஷ்டப்பட்டு நடிச்ச காட்சி?''

''தனுஷ் சாரும் டைரக்டர் வேல்ராஜூம் ரொம்ப நல்லா சொல்லிக் கொடுத்ததால கஷ்டம்னு ஒண்ணும் இல்லை. ஆனா கடைசியில தனுஷ் சார் கூட அந்த லூனா வண்டியில பின்னாடி உட்காந்துட்டு வந்தேன் பாருங்க. அதான் பெரிய கஷ்டம். படத்துல பாத்தா அமலா பாலே கஷ்டப்பட்டிருப்பாங்க.''  

''எப்போ ஹீரோ?''

''அதுதான் சார் ஆசை. நல்ல கேரக்டர்கள் பண்ணவும் ஆசை. வில்லனாவும் பண்ணுவேன். இப்போ ஒரு படத்துல இரண்டாவது ஹீரோவா கேட்டு இருக்காங்க. சீக்கிரம் ஹீரோ ஆகணும்.''

''படத்துல அந்த கேரக்டருக்கு அவ்வளவு பொருத்தமா இருந்தீங்களே, உங்க அப்பா உண்மையிலேயே கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி எதுவும் வெச்சிருக்காரோ?''

''அய்யய்யோ. அந்தத் தொழிலுக்கும் எங்களுக்கும் சம்பந்தமே கிடையாது. இதை மறக்காமப் போட்டுடுங்க.''

ஹும்... போரூர் சம்பவத்துக்குப் பிறகு எல்லாமே இப்படித்தான்!

- சு.செ.குமரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்