எல்லாமே மாறிப்போச்சி! | ellame maaripochi, எல்லாமே மாறிப்போச்சி, ஜீன்ஸ், jeans

வெளியிடப்பட்ட நேரம்: 12:19 (09/08/2014)

கடைசி தொடர்பு:12:19 (09/08/2014)

எல்லாமே மாறிப்போச்சி!

'லட்டுக்குள்ள பூந்தி பூந்தி’ என்ற படத்தில் ஆண்கள் எல்லோரும் பெண்களாகவும், பெண்கள் எல்லோரும் ஆண்களாகவும் நடிக்கிறார்கள். படத்தின் இயக்குநர் ஜீன்ஸ், கதாநாயகியாக(?) நடித்து இயக்குகிறார். பேட்டி என்றதுமே 'உலகிலேயே எவனும் செய்யாத முயற்சி சார் இது’ என அதிரடியைக் கிளப்பியவர், 'முதல்ல கதையைக் கேளுங்க’ என்று ஆரம்பித்தார்.

 

''மதுரை பக்கத்துல அழகான கிராமம்... வெயிட்! படத்தோட கதையைச் சொல்றேன்னு நினைச்சுடாதீங்க, இது என் கதை. படிச்சு முடிச்சுட்டு அமெரிக்கா போனவன்தான். 'இது உனக்கு செட் ஆகாதுடா... சினிமாதான் உனக்குனு சின்ன வயசுலேயே ஃபிக்ஸ் பண்ணிட்டோம்’னு கடவுளே வந்து சொன்ன மாதிரி ஒரு ஃபீலிங். யார்கிட்டவும் உதவி இயக்குநரா சேராம, நானே சினிமாவைக் கத்துக்கிட்டேன். 2008-ல் 'வேள்வி’னு ஒரு படத்தை இயக்கினேன். அது சரியாப் போகாததால 'ஏதாவது வித்தியாசமா பண்ணி, இந்த உலகத்துக்கு என்னை நிரூபிக்கணும்’னு ஒரு டீக்கடையில உட்கார்ந்து யோசிச்சுட்டு இருந்தேன். சட்டுனு வந்தது ஐடியா'' என்று கதைக்கு வந்தார் ஜீன்ஸ்.

''காலையில எந்திரிச்சதும் ஒரு டீ போடுப்பானு டீக்கடைக்காரர்கிட்ட ஆர்டர் கொடுத்துட்டு, அன்னைக்கு பேப்பர்களைப் புரட்டுறோம். அதே மாதிரி, பொண்ணுங்களும் டீக்கடை பெஞ்ச்ல கால் மேல கால் போட்டு, சூடான டீயை ஊதிக்கிட்டே, 'மோடி ஆட்சியும் டம்மியாத்தான்டி இருக்குனு பேசிக்கிட்டா எப்படி இருக்கும்?’கிற ஃப்ரேம் மைண்ட்ல வந்தது. அப்புறமென்ன? 'ஒருத்தனுக்கு ஒரு கனவு வருது. அந்தக் கனவுக்குள்ள ஆண்கள் எல்லோரும் பெண்களோட குணத்தோட, பெண்கள் செய்ற எல்லா விஷயங் களையும் செய்றாங்க. பெண்கள் எல்லோரும் ஆண்களின் குணத்தோட ஆண்கள் செய்ற அத்தனை விஷயங்களையும் செய்றாங்க’ங்கிற சுவாரஸ்யமான ஒன்லைனைத் திரைக்கதையாக்கி, 'லட்டுக்குள்ள பூந்தி பூந்தி’னு படமாக்கிட்டோம். படத்துல கோழி கூவினதும் எந்திரிக்கிறதுல ஆரம்பிச்சு, வாசல் தெளிச்சுக் கோலம் போடுறது, வயலுக்குப் போன மாமன் எப்போ வருவார்னு காத்துக்கிட்டு இருக்கிறது, தண்ணி பிடிக்க குழாயில சண்டை போடுறது... இதெல்லாம் ஆண்கள்தான் பண்ணுவாங்க. ஆனா, வேட்டி கட்டின ஆண்கள் கிடையாது. இந்த படத்துல எல்லா ஆண்களுமே சேலையோட, பாவாடை தாவணியோட, சுடிதாரோட திரிவாங்க. பெண்கள் எல்லோரும் வேட்டியை மடிச்சுக் கட்டி, வேலைக்குப் போறது, ரிக்ஷா, ஆட்டோ ஓட்டுறது, கடை நடத்துறது, வம்புதும்புக்குப் போறதுனு ரணகளப்படுத்துவாங்க. இப்போ சொல்லுங்க... எப்பூடி?''னு என்றவர்,

''நம்ம படத்தோட ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்துட்டு இருந்த ஒருத்தன், கிளாமர் டிரெஸ்ல இருந்த என்னோட முகத்தைப் பார்க்க முன்னாடி வந்தான். மீசையும் தாடியுமா நான் சிரிக்க, அப்படியே ரெண்டு ஸ்டெப் பின்னால போய், வேட்டி யோட நின்ன தேவதர்ஷினி மேடம்கிட்ட, 'இது என்ன படம் சார்?’னு சுரண்டினான். படத்துல வில்லனா நடிக்கிற அவங்க, 'என்ன கேட்டீங்க?’னு திரும்ப... அந்த ஆள் இருந்த இடம் தெரியாம எஸ்ஸாயிட்டார். இதிலேர்ந்து என்ன தெரியுது? நம்ம படம் சக்ஸஸ்!'' என்றபடியே என்னைப் பார்த்தார்.

ஒரு முடிவோடதான் இருக்கீங்க!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்