என்னைப்பற்றி கிசுகிசுக்கள்! | அசோக் செல்வன், தெகிடி, ashok selvan, thegidi

வெளியிடப்பட்ட நேரம்: 11:22 (25/08/2014)

கடைசி தொடர்பு:11:22 (25/08/2014)

என்னைப்பற்றி கிசுகிசுக்கள்!

'சூது கவ்வும்’, 'வில்லா’, 'தெகிடி’ என சினிமா கிராஃப் பாதுகாப்பாகப் பயணிப்பதால், கூடுதல் பூரிப்பு அசோக் செல்வனுக்கு. ஒரு சந்திப்பில்...

''எந்தப் படத்திலும் சிரிக்கவே மாட்டேங்கிறீங் களே?'

''இதை நிறையப் பேர் சொல்லிட்டாங்க. 'சூது கவ்வும்’ படத்திலேயும் சுற்றி இருக்கிற எல்லோரும் காமெடி பண்ணிட்டு இருக்கும்போது நான் மட்டும் சீரியஸா இருக்கணும். அடுத்து 'வில்லா’, 'தெகிடி’னு நடிச்ச ரோல்களும் அப்படியே அமைஞ்சிருச்சு. கவலைப்படாதீங்க, அடுத்து 'கழுகு’ பட டைரக்டர் சத்யசிவா இயக்கத்தில் நடிக்கிற படம் முழு நீள காமெடி படம்தான். சிரீயஸான ரோல்களா பண்ணிட்டு இந்தப் பட ஷீட்டிங்கில் செட்டாகவே ரெண்டு மூணு நாள் ஆச்சு. நடிப்பில் காமெடி கஷ்டமான விஷயம்னு தெரிஞ்சுக்கிட்டேன்.'

''காலேஜ்ல இருந்து ஒரு பட்டாளமே நடிக்க வந்தீங்களாமே?'

''லயோலாவிலிருந்து வந்த எங்க டீமில் நான், வினோத், லகுபரன், விவேக் ராஜகோபால்னு நாலு பேர் நடிக்க வந்தோம். எங்க செட்ல வினோத் ஏற்கெனவே 'நந்தா’வுல சின்ன வயசு சூர்யாவா நடிச்சவன். எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன். அப்புறம் லகுபரன், எங்க டீமில் ஃபர்ஸ்ட் ஹீரோ ஆனது அவன்தான். 'ராட்டினம்’ படத்தில் நல்லா நடிச்சிருந்தான். அடுத்து விவேக் ராஜகோபால். அவனும் சில படங்கள் கமிட் ஆகிட்டான். இப்போ எனக்குப் படங்கள் வர ஆரம்பிச்சிருக்கு.'

''சமீபத்தில் எதுக்காவது விழுந்து விழுந்து சிரிச்சீங்களா?'

''அட, என்னைப்பத்திக்கூட சில கிசுகிசுக்கள் வந்துச்சு. நான் ஏதோ ஒரு சினிமா ஃபேமிலியிலேர்ந்து வந்தவன்னு ஒரு கிசுகிசு. அப்புறம் நான் தலப்பாகட்டி பிரியாணி ஓனர் பையன்னு ஒண்ணு. என் உடம்பைப் பார்த்தா, பிரியாணி கடை ஃபேமிலி மாதிரியா இருக்கு. நல்லவேளை அந்தக் கிசுகிசுக்களில் எதுவும் பொண்ணுங்க சமாசாரம் இல்லை.'

''அப்போ இன்னும் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இல்லையா?'

''என் பைக்ல நான் சிங்கிள் சீட்தான் போட்டிருக்கேன். என்னைக்கு அது டபுள் சீட் ஆகுதோ, அன்னைக்கு நான் எங்கேஜ்டுனு அர்த்தம். அதுக்கு இன்னும் நிறைய தூரம் போகணும் பாஸ்!'

செந்தில்குமார்

படங்கள்: ஜெ.தான்யராஜு

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்