“பார்த்திபன் பெரிய டைரக்டர்னு தெரியாது!” | அகிலா கிஷோர், பார்த்திபன், கதை திரைக்கதை வசனம் இயக்கம், akhila kishore, parthiban, kathai thiraikathai vasanam iyakkam

வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (30/08/2014)

கடைசி தொடர்பு:10:45 (30/08/2014)

“பார்த்திபன் பெரிய டைரக்டர்னு தெரியாது!”

சப்பில் பார்த்தால் நயன்தாரா போலவே இருக்கிறார். ''ஆமா, இப்படி நிறைய பேர் சொல்றாங்க. நான் ரொம்ப ஹேப்பி. 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் பல பேர் என் நடிப்பைப் பாராட்டிக் குவிக்கிறாங்க. அதில் டபுள் ஹேப்பி' என்கிறார் அகிலா கிஷோர். இந்த மாதிரிப் பெண்ணிடம் கடலை வறுப்பது நமக்கு ட்ரிபிள் ஹேப்பி!

''நான் நடிச்ச முதல் கன்னடப் படமான 'பதே பதே’, சிறந்த புதுமுக நடிகைக்கான தேர்வுப் பட்டியலில் இருக்கு. அப்புறம் 'கால பைரவா’, 'பர்த்தா’னு  ரெண்டு படங்கள் பண்ணிட்டேன். அடுத்த கட்டமா தமிழுக்கும் முயற்சி பண்ணினேன். பார்த்திபன் என்னை நடிக்கக் கூப்பிட்டப்போ, அவர் தமிழில் பெரிய டைரக்டர்னு தெரியாது. அப்புறம் அவர் ஹீரோயின் கேரக்டருக்கு முக்கியம் கொடுத்துப் படம் பண்றவர்னு தெரிய வந்தப்போ, வாய்ப்பு மிஸ்ஸாகாம இருக்கணுமேனு தோணுச்சு. ஆனா இங்கதான் ஒரு ட்விஸ்ட்'' என்று க.தி.வ.இ படம் மாதிரியே ட்விஸ்ட் வைக்கிறார் அகிலா.

'எனக்குப் பதிலா வேற யாரையாவது நடிக்கவைககும் எண்ணத்துக்குப் போயிட்டார் பார்த்திபன். காரணம் படத்தில் என் கேரக்டருக்கு நிறைய வசனம். ஆனால் எனக்குதான் தமிழே தெரியாதே. 'நீ தமிழ் கத்துக்கிட்டா நடிக்கலாம்’னு சொன்னார். 'நீங்களே கத்துக்கொடுங்க’னு சொன்னேன். அடிக்கடி போன்ல என்கிட்டே தமிழ்லதான் பேசுவார். ஆனா அவர் பேசுற ஸ்பீடுக்கு எனக்கு ஒண்ணுமே புரியாது. இது சரிவராதுனு பெங்களூர்ல எங்க பக்கத்து வீட்ல ஒரு தமிழ் ஆன்ட்டியிடம் தமிழ் பேசக் கத்துகிட்டேன்.

ஆனா கிளைமாக்ஸ் சீன்ல மாட்டிக்கிட்டேன். பொதுவா டயலாக்கை முன்னமே வாங்கிட்டுப் போய் மனப்பாடம் பண்ணி அடுத்த நாள் பேசிடுவேன். ஆனா பார்த்திபன் சார் ஷூட்டிங் ஸ்பாட்ல டயலாக்கை இம்ப்ரூவ் பண்றதுக்காக மாத்திக்கிட்டே இருப்பார். கிளைமாக்ஸ்ல அடிக்கடி மாத்தினதில், நான் காலி. ஆனாலும், படத்தில் நான் நல்லாத்தானே நடிச்சிருக்கேன்''

''ஆமா சினிமாவில் இருந்துக்கிட்டே சினிமாக்காரங்களை திட்டுற ஒரு நெகடிவ் கேரக்டர். நடிக்கும்போது யோசிச்சீங்களா?'

''இல்லை. முதல் காரணம் பார்த்திபன் சாரும் சினிமாக்காரர்தானே. அவர் சினிமாவுக்கு எதிரா எழுதிட மாட்டார். ஆனா ஆரம்பத்துல எனக்கு இது நெகடிவ் கேரக்டர்னு தோணுச்சு. இருந்தாலும் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன். காரணம் முன்னமே சொன்னமாதிரி பார்த்திபன் சார் படங்கள்ல ஹீரோயின்களுக்கு இருந்த முக்கியத்துவம்.''

''கன்னட சினிமாப் பிரமுகர்கள் படம் பார்த்துட்டு என்ன சொன்னாங்க?''

''பெங்களூர்ல ஒரு ஷோ அரேஞ்ச் பண்ணி பார்க்கவெச்சேன். அவங்களுக்கு எல்லாம் ரொம்ப சந்தோஷம். நல்ல படம், நல்லாப் பண்ணி இருக்கேனு பாராட்டினாங்க.''

''தமிழ்ல வேற படங்கள் நடிக்கிறீங்களா?''

''மூணு படங்கள்ல கேட்டு இருக்காங்க. நான் இன்னும் முடிவு பண்ணலை.'

சீக்கிரம் நல்ல முடிவா எடுங்க!

சு.செ.குமரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்