டிஷ்யூம் வேட்டை... டாட்டூ சேட்டை! | டிஷ்யூம் வேட்டை, டாட்டூ சேட்டை, த்ரிஷா, பூலோகம், கல்யாண கிருஷ் ணன், 'ஜெயம்' ரவி

வெளியிடப்பட்ட நேரம்: 16:09 (02/09/2014)

கடைசி தொடர்பு:16:09 (02/09/2014)

டிஷ்யூம் வேட்டை... டாட்டூ சேட்டை!

யார் சொல்வது... ஹீரோயின் கள் நடிப்புக்காக மெனக்கெடுவது இல்லை என்று!? படத்தின் அழுத்தமான காதல் காட்சிகளுக்காக, தன் உடல் முழுக்க ஜெயம் ரவியின் பாக்ஸிங் படங்களை டாட்டூ குத்திக்கொண்டிருக்கிறார் த்ரிஷா. 'பூலோகம்’ படத்துக்காக தன் கைகள், தொடை, வயிறு எனப் பல பளபளப் பிரதேசங்களில் டாட்டூ பதிக்கும் ஹோம்வொர்க்கில் இருந்தார் த்ரிஷா.

''ஹலோ... ரொம்பக் கலாய்க்கக் கூடாது... சும்மா ஒரு பாட்டுக்காக இந்த டாட்டூ குத்திக்கலை. படம் முழுக்க ஆக்ஷன். நடுநடுவுல வர்ற ரொமான்ஸ் ஜில்லுனு இருக்கணுமேனு யோசிச்சு யோசிச்சுப் பிடிச்ச ஐடியா இது!'' என்கிறார் படத்தின் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன்.

''மைக்கேல் ஜாக்சன், சச்சின் உருவங்களை டாட்டூவா பதிக்கிறது அவங்க மேல் வெச்சிருக்கிற அதீத அன்பின் வெளிப்பாடு. அப்படியான ஒரு பிரியம் பாக்ஸர் ரவி மீது த்ரிஷாவுக்கு இருக்கும். அந்த டாட்டூக்கள் மூலம்தான் ரவிக்கு உங்க மேல ஒரு ஈர்ப்பே வரும்னு கதை சொல்லும்போதே த்ரிஷாகிட்ட... 'தற்காலிகமா குத்திட்டு அழிச்சுக்கிற மாடல் டாட்டூ குத்திக்கலாம்’னு சொன்னேன். உடனே சம்மதிச்சுட்டாங்க.

ஆனாலும் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட்டுக்கு டாட்டூ வரைஞ்சு டம்மி பண்ணிப் பார்த்தோம். ரவியின் விதவிதமான பாக்ஸிங் போஸ்களை வரைஞ்சோம்; அதை அழிச்சும் பார்த்தோம். அழிஞ்சது. டம்மி ரிசல்ட் திருப்தியா இருக்கவும், த்ரிஷாவுக்கு அதே மாடலில் வரைஞ்சோம். மூணு மணி நேரம் பொறுமையா இருந்தாங்க த்ரிஷா.

த்ரிஷா உடம்பில் வரைஞ்சிருக்கிற டாட்டூக்களைப் படத்தில் பார்க்க ரவி பல தடவை முயற்சி பண்ணுவார். அப்பப்போ சில டாட்டூக்களைத்தான் பார்க்க முடியும். ஒரு கட்டத்துல எல்லா டாட்டூக்களையும் காட்ட லாம்னு த்ரிஷா முடிவு பண்ணுவாங்க. ஆனா, அப்போ ரவியால் அதைப் பார்க்க முடியாது. கடைசியில் அவர் அந்த டாட்டூக்களைப் பார்க்க முடிஞ்சதா, இல்லையானு... செம ரொமான்ஸ் சேட்டையா இருக்கும்!'' என்று சிரிக்கும் கல்யாணகிருஷ்ணன், ''ஆனா, இது உற்சாகக் குறும்பா இருக்குமே தவிர, உறுத்தலா இருக்காது!'' என்று உஷாராக முடிக்கிறார்.

- க.நாகப்பன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்