வெளியிடப்பட்ட நேரம்: 13:02 (20/09/2014)

கடைசி தொடர்பு:13:02 (20/09/2014)

லவ் பண்ணினா உதை விழும்!

ஒரே நாளில் வெளியான 'சிகரம் தொடு’ , 'வானவராயன் வல்லவராயன்’ படங்களில் கதா நாயகியாக நடித்திருக்கும் மோனல் கஜ்ஜார் உடன் ஒரு மீட்டிங்.

''எந்த ஊர் இறக்குமதி நீங்க?'

''சொந்த ஊர் குஜராத்தில் அஹமதாபாத்.  என் ஃப்ரெண்ட்ஸ் சில பேரோட ஆசை காரணமாக போட்டோ எடுத்து மாடலிங் கம்பெனிக்குக் கொடுத்தேன். அப்படியே மிஸ் அஹமதாபாத் ஆக செலக்ட் ஆனேன். அதைப் பார்த்து தெலுங்குல நடிக்க வாய்ப்பு வந்தது. முதல் படம் 'சுடிகாடு’. தெலுங்கில் இதுவரை நாலு படங்கள் முடிச்சாச்சி. அப்புறம் தமிழில் 'சிகரம் தொடு’, 'வானவராயன் வல்லவராயன்’. இடையில் 'டிராகுலா’ னு மலையாளப் படத்தில் நடிச்சேன். ஹேய்....  ஒண்ணு தெரியுமா... 'சிகரம் தொடு’ படத்துல விக்ரம் பிரபுவோட நடிக்கிறதுக்கு முன்னாடியே மலையாளத்துல அவர் அப்பா பிரபு சாரோட நடிச்சிட்டேன்.''  

''எடுத்த எடுப்பிலேயே ஒரே நாளில் தமிழில் இரண்டு படங்கள் ரிலீஸ். சந்தோஷமா?''

''போப்பா... நான் ஒரு வாரம் கேப்லயாச்சும் வரணும்னு நினைச்சேன். அப்போதானே ரெண்டு படத்தையும் எல்லோரும் பார்ப்பாங்க. 'வானவராயன் வல்லவராயன்’ வருவது கன்ஃபார்ம் ஆச்சு. 'சிகரம் தொடு’ ரிலீஸ் எப்போன்னு தெரிஞ்சுக்க யூ டி.வி இணை தயாரிப்பாளர் தனஞ்செயனோட ட்விட்டரை ஃபாலோ பண்ணிட்டே இருந்தேன். திடீர்னு பார்த்தா, அதுவும் அதே தேதி ரிலீஸ். சரி... ஒரு ரெக்கார்டு பண்ணி இருக்கோம்னு சந்தோஷப் பட்டுக்க வேண்டியதுதான்.''

''ரெண்டு படத்துலயும் லவ்சோ லவ்ஸ்... சின்ன வயசுல லவ் லெட்டர் எக்கச்சக்கமா?''

''நீங்களே சொல்லுங்க... நான் அழகுதானே... ஆனா ஒரு லவ்லெட்டர் கூட வரலை. ஏன் தெரியுமா? நான் பொதுவா பசங்களோட சண்டை போட்டுட்டே இருப்பேன். அப்புறம் எப்படி ஐ லவ் யூ சொல்வாங்க? அதும் இல்லாம அப்போ படிப்பு, கேரியர்னு சீரியஸ்னஸ்... வீட்ல தெரிஞ்சா வீடு கட்டி அடிப்பாங்க என்ற பயம். ஸோ... நோ லவ்.''

''அப்படினா இப்ப ஓகேவா?''

''இப்பவும் வீட்ல உதை விழும். நடிக்க விடுங்கப்பா''

'' 'சிகரம் தொடு’ படத்துல  பாறையின் உச்சிகளில் நின்னு  டூயட் பாடி இருக்கீங்களே... பயமா இல்லை?''

''  'பிடிக்குதே...’ பாட்டுக்கு ஒத்தையடிப் பாதை அளவுக்கு மட்டுமே இருக்கிற மிக உயரமான இடங்கள்ல ஏத்தி நிற்க வெச்சுட்டாங்க. ரெண்டு அடி தள்ளி காலை வெச்சா பாதாளத்தில் விழுந்து ஹோகயாதான். அது மட்டும் இல்ல. அந்தப் பாட்டுக்கு போட்டிருந்த காஸ்ட்யூம் ரொம்ப ஹெவி காஸ்ட்யூம். அதிலும் ஒரு காஸ்ட்யூம், பறவையோட  சிறகு மாதிரி இருந்தது. அப்படியே காத்துல தூக்கிட்டுப் போயிடுமோனு பயந்துட்டேன். அதை இழுத்துப் பிடிக்கிறதே ஒரு பெரிய எக்சர்சைஸா இருந்தது. கஷ்டப்பட்டு நடிச்சோம். ஆனா படத்துல பார்க்கும்போது ஆஹா.''

''பிரபுகூட ஒரு படம். பிரபுவின் மகன் விக்ரம் பிரபுகூட ஒரு படம். யார் ரொம்ப ஃப்ரெண்ட்லி?

''அப்கோர்ஸ்... இந்தக் கேள்விக்கு நானே காத்திருந்தேன். பிரபு சார் செம ஜாலி டைப். அவர் இருக்கிற இடமே கலகலப்பா சுவாரஸ்யமா இருக்கும். ஆனா விக்ரம் பிரபு நேர் மாறான ஷை டைப். பேசவே மாட்டார். 'சிகரம் தொடு’ பிரிமியர் ஷோ அன்னிக்கு பிரபு சார் கிட்ட 'உங்க பிள்ளை இவ்வளவு ஷை டைப்பா இருக்காரே?’னு கேட்டேன். அவர் அதுக்கும் ஜாலியா ''அதனால்தான் நான் பிரபு. அவர் விக்ரம் பிரபு'' ங்கிறார்!

சு.செ.குமரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்