வெளியிடப்பட்ட நேரம்: 17:58 (20/09/2014)

கடைசி தொடர்பு:17:58 (20/09/2014)

ரசிகர்கள் கேள்விகளுக்கு குஷ்பு தந்த சுவாரஸ்ய பதில்கள்!

சற்று நேரம் முன்பு குஷ்பு தனது ட்விட்டர் கணக்கில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பத்து நிமிடம் இடைவிடாது பதில் அளித்து வந்தார்.

ரசிகர்கள் அவரிடம் கேட்ட சுவாரஸ்யமான கேள்விகளும் சின்னச் சின்ன பதில்களும் இதோ:

உங்கள் வயது மற்றும் விஜய், அஜித் இருவரில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? தெலுங்கில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?

பிறந்த நாள்: 29/09/1970

தமிழில் நடிகர் கார்த்திக்கைப் பிடிக்கும். தெலுங்கில் பிரபாஸைப் பிடிக்கும்.

அம்மா, அக்கா, குணச்சித்திர நடிகை என எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா?

கண்டிப்பாக இல்லை.

அஜித் , விஜய்யை வைத்து படம் தயாரிப்பு மற்றும் இயக்கும் எண்ணம் உள்ளதா?

இப்போதைக்கு இல்லை.

உங்கள் குடும்ப நபர்களைத் தவிர்த்து உங்களது இன்ஸ்பிரேஷன் பெண் யார்?

பிரச்னைகளிலிருந்து தன்னை காத்துக்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் எனது இன்ஸ்பிரேஷன்தான்.

பொதுவாக ஒரு முடிவை எப்படி எடுப்பீர்கள்? இதுவரை நீங்கள் எடுத்த முடிவில் எது மிகக் கடினமான ஒன்று?

மனதுக்கு நன்மை என பட்டால் அந்த முடிவை எடுப்பேன். கடினமான முடிவு இனிமேல் தான் எடுக்க வேண்டும்.

நீங்கள் LGBT (Lesbian, Gay, Bisexual, and Transgender) மனிதர்களுக்கு சப்போட் செய்வீர்களா?

ஒவ்வொரு மனிதனுக்கும் தனது விருப்பப்படி வாழும் உரிமை இருக்கிறது.

அரண்மனை படம் பார்த்து விட்டீர்களா? பிடித்திருந்ததா? அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஹன்சிகாவை யார் தேர்வு செய்தார்கள்?

கண்டிப்பாக பிடித்திருக்கிறது. படத்தின் கதாபாத்திர தேர்வு அனைத்தும் இயக்குநர் சாய்ஸ்.

 இதயப்பூர்வமான மூன்று விஷயங்கள்?

நண்பர்கள், எனது குடும்பம், மற்றும் என் சுயமரியாதை.

ஐ டீஸர் பார்த்து விட்டீர்களா, விக்ரம் குறித்து உங்கள் கருத்து?

இனிமேல் தான் பார்க்க வேண்டும்.

நீங்கள் நடிக்க விரும்பிய மற்றும் வாய்ப்பு தவறிப்  போன படம் எது?

தெலுங்கு சின்னத்தம்பி (சண்டி)

சுந்தர்.சிக்கு பிடித்த நடிகர் யார்?

இப்போது வரை மோகன்லால்.

சுந்தர்.சி இயக்கத்தில் உங்களுக்கு பிடித்த படம் எது?

 உள்ளத்தை அள்ளித்தா, அன்பே சிவம்.

உங்கள் மனம் கவர்ந்த பாடகர் யார்?

SPB மற்றும் ஹரிஹரன்

இந்தியாவிலேயே ஸ்டைலான நடிகர் என்றால் யாரை சொல்வீர்கள்? இந்தியாவிலேயே சிறந்த நடிகர் என யாரை சொல்வீர்கள்? 

ஹ்ருத்திக் ரோஷன்.

சிறந்த நடிகர்கள்: கமல், அமீர் 

உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்?

ஏழு மொழிகள் பேசத் தெரியும் , அதில் நான்கு மொழிகள் எழுதவும் தெரியும்

உங்கள் குழந்தைகளும் சினிமாவிற்கு வந்தால் ஓகே சொல்வீர்களா?

முதலில் அவர்கள் படிப்பை முடிக்க வேண்டும்.

உங்கள் ரசிகர்களுக்கு ஏதேனும் கருத்து?

வெற்றி பெற குறுக்கு வழியை தேர்ந்தெடுக்காதீர்கள்.

யார் முதலில் காதலை சொன்னது நீங்களா ? இல்லை சுந்தர்.சி யா?

அவர்தான் .1995 பிப்ரவரி 22ம் தேதி.

அரசியலில் எப்போது பெரிய ஆளாக வருவீர்கள்?

ஐடியா இல்லை..

 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்