நான் கோலிவுட்டின் கத்ரீனா கைஃப்! | கத்ரீனா கைஃப், பாலிவுட், கோலிவுட், கரிகாலன்

வெளியிடப்பட்ட நேரம்: 15:26 (29/09/2014)

கடைசி தொடர்பு:15:26 (29/09/2014)

நான் கோலிவுட்டின் கத்ரீனா கைஃப்!

பார்ப்பதற்கு கத்ரீனா கைஃப் போலவே இருக்கிறார் ஜரீன்கான். பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் நடிகை. தமிழில் 'நான் ராஜாவாகப் போகிறேன்' படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டவர் இப்போது இந்திப் படங்களில் ரொம்ப பிஸி.  

‘‘ஜரீன்கான் சினிமாவுக்கு வந்தது எப்படி?’’
‘‘நான் பக்கா மும்பைப் பொண்ணு. ஸ்கூல் படிக்கும்போதே படிப்புல கில்லி.  ' 90% மார்க் எடுத்திருக்கே.... டாக்டருக்கு டிரை பண்ணலாமே'ன்னு டீச்சர்ஸ் சொல்ல, அம்மாவும் அப்பாவும் 'படி படி'ன்னு என்கரேஜ் பண்ணாங்க. ப்ச்.... எனக்கு மீடியாதான் பிடிச்சிருந்தது. 100கிலோ வெயிட் மாடலிங்குக்கு மேட்ச் ஆகாதுன்னு சொன்னாங்க. சாக்லேட், ஜங்க்ஃபுட்டுக்கு நோ சொல்லி ரொம்ப கஷ்டப்பட்டு 25கிலோ வெயிட் குறைச்சேன். அப்படியே சட்டுன்னு சினிமாவுக்கு பறந்து வந்துட்டேன். சல்மான்கானுடன் ‘வீர்’ படத்துல ஹீரோயினா நடிச்சேன். அப்படியே ‘ரெடி’, ‘ஹவுஸ்ஃபுல் 2’னு பாலிவுட் நடிச்சு இப்போ 'தி லெஜண்ட் ஆஃப் மைக்கேல் மிஸ்ரா' படத்துல நடிக்குறேன்.''‘‘முதல் படத்துலயே சல்மான்கான் கூட நடிச்சீங்களே. எப்படிக் கிடைச்சது இந்த வாய்ப்பு?’’
‘‘ஒரு ரகசியம் சொல்லட்டுமா... நான் முக்தா ஆர்ட்ஸ் நடத்துன ஆடிஷன்ல கலந்துக்கும்போது சின்ன கருத்து வேறுபாடால் வெளியே வந்துட்டேன். அப்போதான் அங்கே சல்மான்கான் வந்தார். நான் அவரோட டை ஹார்ட் ஃபேன். அவசர அவசரமா போய் ஆட்டோகிராஃப் வாங்கினேன். 'ஸ்வீட் ஹார்ட்! ரொம்ப சீக்கிரத்துல நீயும் ஆட்டோகிராஃப் போடுவே' ன்னு எழுதினாரு. அப்போ அதுக்கான அர்த்தம் புரியலை. அவரோட படத்துல ஹீரோயினா நடிச்ச பிறகு நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன். பெரிய ஆர்டிஸ்ட்ங்கிற பந்தா இல்லாம நிறைய விஷயங்கள் சொல்லிக்கொடுத்தார். அவரோட நடிக்கணும்னு ஆசைப்பட்டிருக்கேன். கனவு கண்டிருக்கேன். ஆனா, அது முதல் படத்துலயே அமையும்னு நான் நெனைச்சுக்கூடப் பார்த்ததில்லை.’’

‘‘சினிமாவுல யார் கூட டச்ல இருக்கீங்க?’’
‘‘அசின் கூட ரெண்டு படங்கள்ல நடிச்சிருக்கேன். இப்போ நானும் அசினும் ரொம்ப க்ளோஸ். அதிகமா அசினுடன் நேரம் செலவழிச்சிருக்கேன். நானும் அசினும் ஒரே இடத்துல இருந்தா செட்டு சேர்ந்து மத்தவங்களை கலாய்ச்சு என்ஜாய் பண்ணுவோம். சல்மான் நல்ல ஃபிரெண்ட். எனக்கு பெரிய சப்போர்ட். அவர் இல்லைன்னா நான் இப்படி இருந்திருக்க மாட்டேன். டவுன் டூ எர்த்தா நல்லா பழகுவார். இப்போதான் படங்கள்ல கமிட் ஆகிட்டு இருக்கேன். ஒவ்வொரு படத்துல நடிக்கும்போதும் நிறைய ஃபிரெண்ட்ஸ் பிடிச்சிடுவேன். இன்னும் ரெண்டு வருஷத்துல என் ஃபிரெண்ட்ஸ் லிஸ்ட் கிலோமீட்டர் கணக்குல போகும் பாருங்க.’’ 


'' ‘ 'கரிகாலன்' என்னாச்சு?’’
‘‘ 'கரிகாலன்' ல நான் தான் ஹீரோயின். விக்ரம் ஜோடின்னு கமிட் ஆனதும் சந்தோஷப்பட்டேன். ஆனா படம் என்னாச்சு? டிராப்பா? தள்ளிப்போகுதா? நோ ஐடியா. என்ன நடக்குதுன்னே தெரியலை. அதைப்பத்தி யோசிக்காம இப்போ கோலிவுட்ல வாய்ப்பு வேட்டை நடத்துறேன்.''

‘‘அயிட்டம் சாங் ஆடுறீங்க? ஹீரோயினா நடிக்குறீங்க?உங்களைப் புரிஞ்சுக்கவே முடியலையே? ’’
‘‘ ஹீரோயினா நடிக்குறதும்,  அயிட்டம் சாங் பண்றதும் பாலிவுட்ல சாதாரணம். அயிட்டம் சாங் எனக்குப் பிடிச்சிருக்கு. ஏன்னா பரதநாட்டியம், வெஸ்டர்ன், பெல்லி, சல்சா, கதக்னு எல்லா ஃபெர்பாம்ன்ஸூக்கும் தீனி போடுற ஏரியா. இதுக்கு ஸ்கோப் தர்ற சிங்கிள் டான்ஸ்னா  அப்பீலே இல்லாம டபுள் ஓ.கே. சொல்லிடுவேன். அதே சமயம் அயிட்டம் சாங்  மட்டுமே பண்ற பொண்ணுங்கிற  முத்திரை விழுந்துடக்கூடாதுன்னு ரொம்ப கவனமா இருக்கேன். இப்போ தமிழ் சினிமாவுல ஹீரோயின் வாய்ப்பு வேட்டைக்கு ரெடியாகிட்டேன்.. இனி எந்த பெரிய கேரக்டரா இருந்தாலும் கால்ஷீட் தர நான் ரெடி! ’’ ‘‘‘பார்க்க அப்படியே கத்ரீனா கைஃப் மாதிரியே இருக்கீங்களே?’’
‘‘தேங்க்ஸ். நிறைய பேர் அப்படித்தான் சொல்றாங்க. பல இடங்கள்ல நான் தான் கத்ரீனான்னு நெனைச்சே ரசிகர்கள் பேசி இருக்காங்க. என்னையும் அவங்களையும் நிக்க வெச்சு ஏழு வித்தியாசம் கண்டுபிடிக்கச் சொன்னா கூட அது முடியுமான்னு தெரியலை. பட்... நான் இனிமே தமிழ்நாட்டு கத்ரீனா கைஃப்பா இருக்கணும்னு ஆசைப்படறேன் .'' மெல்லிய இதழ் திறந்து புன்னகை விரித்து பை சொல்கிறார் கத்ரீனா. ஸாரி... ஜரீன்கான். 

 

- க.நாகப்பன்

 
நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்