ஒரு பாட்டியும் பியூட்டியும்! | ஒரு பாட்டியும் பியூட்டியும்!, வீடியோ ஜாக்கி, நடிகை , லேகா வாஷிங்டn, டிசைனர். பேட்டி

வெளியிடப்பட்ட நேரம்: 15:31 (10/10/2014)

கடைசி தொடர்பு:15:31 (10/10/2014)

ஒரு பாட்டியும் பியூட்டியும்!

மியூசிக் சேனலில் வீடியோ ஜாக்கி, பின்பு நடிகை என வளர்ந்த லேகா வாஷிங்டனின் அடுத்த அவதாரம்... டிசைனர். 'அட... இது சோபாவா?!’, 'இப்படி ஒரு விளக்கு இருக்குமா?!’ என ஆச்சர்யப்படுத்தும் அழகில் செம ஸ்டைலிஷ் டிசைனிங் செய்கிறார். சர்வதேச அளவில் அப்ளாஸ் அள்ளும் லேகாவின் பேச்சில் அவ்வளவு உற்சாகம்.

''நான் அகமதாபாத் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன் காலேஜில், ஃபிலிம் மேக்கிங்கும் டிசைனிங்கும் படிச்சேன். நடிப்பு ஆர்வம்போலவே, டிசைனிங் காதலும் உண்டு. 'வ குவார்ட்டர் கட்டிங்’ பட நேரத்திலேயே  தயாரிப்பாளர்கள் சஷியும் சித்தார்த்தும், 'உன் திறமைகளை ஏன் வேஸ்ட் பண்ற? ஒரு ஸ்டுடியோ ஆரம்பிக்கலாமே...’னு ஐடியா கொடுத்தாங்க. கொஞ்ச வருஷம் பிளான் பண்ணி இந்த ஸ்டுடியோவை ஆரம்பிச்சேன். மும்பை பாந்த்ரால பெரிய ஒரு பங்களாவில் என்னோட டிசைன் ஸ்டுடியோ இருக்கு. என் ஆபீஸே பார்க்க... செம டிசைனா இருக்கும்!''

''நீங்க டிசைன் பண்ணியிருக்கிற சேர் எல்லாம் ரொம்ப ரொம்ப வித்தியாசமா இருக்கே?''

''டிசைனிங் ஃபீல்டில், இந்தியாவை 'காப்பி - பேஸ்ட் மார்க்கெட்’னு சொல்வாங்க. இங்க புதுசா எந்த டிசைனும் உருவாகாது. இத்தாலி, ஜெர்மனினு  ஐரோப்பிய நாடுகளின் டிசைன்களை இந்தியாவில் காப்பியடிச்சு டிசைன் பண்றாங்கனு குற்றச்சாட்டுச் சொல்வாங்க. அந்தப் பேரை மாத்த நினைச்சேன். நான் என்னோட சேர் டிசைன்களுக்கு காப்பிரைட் வாங்கியிருக்கேன். நியூயார்க்ல நடந்த கண்காட்சியில் என் சேர்களைப் பார்வைக்கு வெச்சேன். 'இந்தியாவில் இப்படிப்பட்ட டிசைனர்கள் இருக்காங்களா?!’னு ஆச்சர்யப்பட்டுப் பாராட்டினாங்க. அப்பதான் படிச்ச படிப்புக்கு ஏதோ பண்ணியிருக்கோம்னு மனசுக்கு சந்தோஷமா இருந்துச்சு!''

''உங்க டிசைன் ஸ்டுடியோவுக்கு 'அஜீ’னு பேர் வெச்சிருக்கீங்க... என்ன அர்த்தம்?''

'' 'அஜீ’னா மராத்தியில் பாட்டினு அர்த்தம். எங்க பாட்டியை, எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதே மாதிரி ஸ்டுடியோ பேர் கொஞ்சம் ஜப்பான் ஸ்டைல்ல இருக்கிறதால, ஒரு இன்டர்நேஷனல் டச் கிடைச்சது. ஒன் ஸ்டோன்... டூ மேங்கோஸ்!''

''நீங்க டிசைன் பண்ணியிருக்கிற சேர், லைட்ஸோட விலை என்ன?''

''25,000 ரூபாயில் இருந்து 2.5 லட்சம் ரூபாய் வரைக்கும் இருக்கு பாஸ்.''

''சினிமா ஸ்டார்ஸ்ல யார் யாரெல்லாம் உங்கள் டிசைன்களை வாங்கியிருக்காங்க?''

''கரண் ஜோஹர் ஆன்லைன்ல என் டிசைன்ஸ் பார்த்துட்டு, போன் பண்ணிப் பாராட்டினார்; சில சேர்களை வாங்கினார். அக்ஷய்குமார், இம்ரான்கான்னு பல பேர் வாங்க ஆரம்பிச்சுருக்காங்க. ஆனா, தமிழ்நாட்டுல இருந்து இன்னும் யாரும் வாங்கலை!''

''அப்போ சினிமா அவ்வளவுதானா?''

''வருஷத்துக்கு நாலு படத்துல தலை காட்டுற நடிகை நான் இல்லை. எனக்கு ஸ்கோப் இருக்கிற படங்கள்ல மட்டும்தான் நடிப்பேன். 'கல்யாண சமையல் சாதம்’ படம் இந்தியில் ரீமேக் ஆகுது. அதில் நடிக்கப்போறேன். தவிர, இன்னொரு இந்தி படமும் கையில் இருக்கு. இப்போதைக்கு இது போதும் பாஸ்!''

 

- சார்லஸ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்