என்னோட போலீஸ் ஹீரோ விஜய் சேதுபதி! | vijay sethupathi, arun, pannaiyarum padminiyum, விஜய் சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும்,

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (05/11/2014)

கடைசி தொடர்பு:17:20 (05/11/2014)

என்னோட போலீஸ் ஹீரோ விஜய் சேதுபதி!

திருவனந்தபுரத்தில் வரும் டிசம்பர் 12-ம் தேதியில் இருந்து 19-ம் தேதி வரை நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவிற்கு இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட 55 படங்கள் தேர்வுக்காக அனுப்பி வைக்கப்பட அதில் 7 படங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்தியில் 3, வங்காளத்தில் 2, மராத்தியில் 1 திரைப்படமும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தமிழில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே திரைப்படமாக 'பண்ணையாரும் பத்மினியும்' இந்த ஆண்டு கொடிகட்டியிருக்கிறது.

'பண்ணையாரும் பத்மினியும்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக மீடியாவின் கண்களில் சிக்காமல் இருக்கும் இயக்குநர் அருண்குமாரை விரட்டிப் பிடித்துப் பேசினோம்,

         

*பண்ணையாரும் பத்மினியும் சர்வேச தேச திரைப்பட விழாவுக்கு செலக்ட் ஆனதுக்கு எப்படி ஃபீல் பண்றீங்க?

வழக்கமா இந்த சர்வதேச திரைப்பட விழாவில் 10 படங்களை தேர்ந்தெடுப்பாங்க...இந்த முறை 7 படங்கள் தான் தேர்வாகியிருக்கு.அதுல ஒரே தமிழ்ப் படம் 'பண்னையாரும் பத்மினியும்'தான்னு நினைக்கும் போதே ரொம்ப பெருமையா இருக்கு.ஒரு படைப்பாளிக்கு தேவையானதே அங்கீகாரம் தானே ...அது இப்ப தொடர்ந்து கிடைக்கும் போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு.ஹாலிவுட் இயக்குநர்கள் பலரும் இந்த திரைப்பட விழாவுல கலந்துக்கப் போறாங்க...எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைக்கும்னு எதிர்ப்பாக்குறேன்.

*சரி..மீடியா கண்ணுல மாட்டாம எங்க போயிருந்தீங்க?

பண்ணையாரும் பத்மினியை அடுத்து ஒரு நல்ல படம் கொடுக்கணும்னா...அதுக்கு கொஞ்சம் ஹார்டுவொர்க் தேவைப்படுது.அதனால யார் கண்ணுலயும் சிக்காம மொபைலுக்கு ஒரு குட்பை சொல்லிட்டு ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பிச்சு இப்ப தான் முடிச்சிருக்கேன்

*இந்த முறையும் உங்க ஸ்கிரிப்ட் முதல்ல ஷார்ட் ஃபிலிம் ஆகப் போகுதா?

கண்டிப்பா இந்த முறை குறும்படம் கிடையாதுங்க..டைரக்டா ஃபுல்மீல்ஸ் தான்.அதுக்காக தான் நிறைய நேரத்தையும் நிறைய தனிமையையும் எடுத்துக்கிட்டேன்.யாரைப் பாத்தாலும் அருண் எங்கன்னு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க..

*உங்களை தேடுற அளவுக்கு அப்படி என்ன தான் கதையை ரெடி பண்ணியிருக்கீங்க?

அது ஒரு ஆக்‌ஷன் படம்.கதைப் படி ஹீரோ ஒரு அதிரடி போலீஸ். கதை ரொம்ப நல்லா வந்திருக்கு. அதை நல்லா யோசிச்சு செதுக்கணும்ல அதான் இந்த தேடல்.

                     

* அப்படினா அந்த போலீஸ் ஹீரோ யாருங்க?

முழுக்க முழுக்க விஜய் சேதுபதியை வச்சுதான் ஸ்கிரிப்ட் எழுதியிருக்கேன். இந்த கதை அவருக்கு செம மாஸ் கொடுக்கும்னு நம்புறேன். அவர்கிட்டயும் கதை சொல்லியாச்சு. படத்தோட கதை அவருக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னார். இன்னமும் அதிகாரப் பூர்வா அவர் இந்த படத்துல ஒப்பந்தம் ஆகல..ஆனா கண்டிப்பா ஓகே சொல்வார்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.

கலக்குங்க அருண்!

-பொன்.விமலா-

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்