“ஐ லவ் அம்மா!” | “ஐ லவ் அம்மா!”, ஹன்சிகா, ஓவியர், ஹன்சிகா பேட்டி, பேட்டி - ஹன்சிகா

வெளியிடப்பட்ட நேரம்: 10:49 (06/11/2014)

கடைசி தொடர்பு:10:49 (06/11/2014)

“ஐ லவ் அம்மா!”

பேயைப் பார்த்தால் பயம்தானே வர வேண்டும். ஆனால், பாசம் வரவைத்துவிட்டார் ஹன்சிகா. 'அரண்மனை' படத்தில் அழகான ஆவியாக ஸ்கோர் செய்தவர், இப்போது ஊட்டி குளிரில் விஷாலுடன் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தார்.

''வழக்கமாக எந்த கேரக்டர் பண்ணாலும் அதை ஷூட்டிங் ஸ்பாட்லயே மறந்துடுவேன். ஆனா, 'அரண்மனை செல்வி’யை மட்டும் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனேன்.  அதுவரை பப்ளியா சிரிச்சுட்டு மட்டும் இருந்த நான், 'அரண்மனை’ படத்தில் அத்தனை ஆர்டிஸ்ட்களையும் மீறி ஸ்கோர் பண்ணதுக்கு எனக்கு நானே ஒரு பொக்கே கொடுத்துக்கிட்டேன்!'' -அவ்வளவு அப்பாவியாகச் சிரிக்கிறார் ஹன்சி.

''சென்டிமென்ட்?''

''குருத்வாரா! நான் பஞ்சாபிப் பொண்ணு. கடவுள் பக்தி அதிகம். காலையில் எழுந்ததும் பிரேயர்; தூங்குறதுக்கு முன்னாடியும் பிரேயர்; சின்ன வேலையோ பெரிய வேலையோ, 'அது நல்லா நடக்கணும்’னு கடவுள்கிட்ட பிரேயர். ஒரு இடத்துக்குக் கிளம்பினா, 'சரியான நேரத்துக்குப் போகணும்’னு வேண்டிக்கிற அளவுக்கு கடவுள் பக்தி அதிகம். எந்தப் படத்துல நடிச்சாலும், அந்தப் படம் ரிலீஸ் ஆகிற சமயம் பஞ்சாப்ல இருக்கிற குருத்வாராவுக்கு அம்மாவோடு போவேன். இந்த சென்டிமென்ட் எனக்கு சூப்பரா ஒர்க்-அவுட் ஆகும்!''

''மறக்க முடியாத பரிசு?''

''போன வருஷம் என் பிறந்த நாளுக்கு அம்மா கொடுத்த சர்ப்ரைஸ். காலையிலேயே எழுந்து, குளிச்சுட்டு, பயபக்தியோடு சாமி கும்பிட்டு அம்மாகிட்ட ஆசீர்வாதம் வாங்கினேன். அப்ப, 'உனக்காக ஒரு கிஃப்ட் வாங்கிருக்கேன்’னு சொன்னாங்க. 'லவ் யூ ஸோ மச் மம்மி. கிஃப்ட் கொடு’னு கை நீட்டினா, அந்தக் கையைப் பிடிச்சு வெளியே கூட்டிட்டு வந்தாங்க. வாவ்... எனக்குப் பிடிச்ச பி.எம்.டபிள்யூ கார். சந்தோஷ அதிர்ச்சியில் பேச்சு வரலை. உடனே அம்மாவைக் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்து காரில் ஏத்திட்டு லாங் டிரைவ் போனேன். அந்த நாளை அடிக்கடி ரீவைண்டு பண்ணிப்பேன்!''

''நெருங்கிய தோழி?''

''தன்வி ஷா. டென்னிஸ் பிளேயர். என் ஸ்கூல் ஃப்ரெண்ட். லன்ச் சேர்ந்து சாப்பிடுறது, டென்னிஸ் விளையாடுறது, எக்ஸாம் நேரத்தில் விடிய விடிய கண்முழிச்சுப் படிக்கிறதுனு எங்கேயும் எப்போதும் சேர்ந்தே இருப்போம். இப்பவும் அப்படித்தான். நேரம் கிடைச்சு சந்திக்கிறப்ப நான் அவளோடு டென்னிஸ் விளையாட, அவ நான் நடிச்ச படம் பார்க்க... செம ஆட்டம் போடுவோம்!''

''பெருமையாக நினைப்பது?''

''என் ஓவியத் திறமையை! கடவுள் எனக்குக் கொடுத்த முக்கியமான பரிசு. ஆனா, அதை எப்பவும் விளம்பரப்படுத்த மாட்டேன். பெரும்பாலும் சாமி படங்கள்தான் வரைவேன். அப்புறம் இயற்கைக் காட்சிகளை வரையப் பிடிக்கும். சமீபத்தில் நான் வரைஞ்ச கிருஷ்ணன்- ராதை ஓவியம் 15 லட்ச ரூபாய்க்கு விலை போச்சு. இப்படி ஓவியங்கள் மூலம் வரும் வருமானத்தை வெச்சு, முதியோர் இல்லம் ஆரம்பிக்க ஆசை. இதுக்காகவே சின்னச் சின்ன ஹாலிடேலகூட ஓவியங்கள் வரையிறேன். இப்ப 100-க்கும் மேல ஓவியங்கள் சேர்ந்துடுச்சு. சீக்கிரமே ஒரு ஷோ வைக்கணும்!''

''கடைசியாக அழுதது எதற்காக?''

(சின்னதாக யோசிக்கிறார்...) ''சின்ன வயசில் அழுதிருக்கலாம். இப்போ எதுக்காகவும் நான் அழுதது இல்லை. ஏன்னா, அம்மா எப்பவும் என்கூட இருக்காங்க!''

- ஜியா உல் ஹக், படம்: ஆண்டன்தாஸ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close