ஸ்ருதியுடன் சம்திங்... சம்திங்... | ஸ்ருதியுடன் சம்திங்... சம்திங்..., ஸ்ருதி ஹாசன் பேட்டி, பேட்டி - ஸ்ருதி ஹாசன், கமல்ஹாசன், சரிகா, அக்‌ஷரா

வெளியிடப்பட்ட நேரம்: 12:26 (06/11/2014)

கடைசி தொடர்பு:12:26 (06/11/2014)

ஸ்ருதியுடன் சம்திங்... சம்திங்...

'வெல்கம் பேக்’ இந்திப் படத்தில் நஸ்ருதீன் ஷா, நானா படேகர், டிம்பிள் கபாடியா என மூன்று சூப்பர் சீனியர்களுடன் நடிக்கும் பிரமிப்பு தெரிகிறது ஸ்ருதி ஹாசனிடம். இந்தி, தமிழ், தெலுங்கு என எந்த ஸ்கிரீனிலும் அதிரடிக்கும் ஸ்ருதி, தன் 'லைக்ஸ்’ பற்றி இங்கே 'ஷேர்’ செய்கிறார்...  

சமீப சந்தோஷம்!

''நஸ்ருதீன் ஷா, நானா படேகர், டிம்பிள் கபாடியா... இவங்களோட ஒரே செட்ல நடிச்சதுதான். ப்ப்பா... என்னா மேஜிக் பெர்சனாலிட்டி ஒவ்வொருத்தரும்! சின்னச் சின்ன ரியாக்ஷன், ஒரே வார்த்தைனாலும் அசத்துறாங்க. அதுவும் டிம்பிள் மேடம்... சான்ஸே இல்லை. அவங்க டீன் ஏஜ்ல இந்திய இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்தவங்க. இப்பவும் அதே ஸ்டைலோட இருக்காங்க. பிரேக்கில் என்கிட்ட நிறைய விஷயம் பேசுவாங்க. நடிக்கும்போது உதடுகளை எப்படிப் பயன்படுத்தணும், கண் புருவத்துக்கு மேக்கப் எப்படி இருக்கணும்னு டிப்ஸ் கொடுத்தாங்க. ஷூட்டிங் ஸ்பாட்டில் மொத்த யூனிட்டும் பதற்றமா இருந்தாலும், இவங்க மூணு பேரும் அவ்வளவு ஈஸியா இருப்பாங்க. எல்லாத்தையும் தாண்டி அவங்க என் நலம்விரும்பிகள். சின்ன வயசுல இருந்தே இவங்களைப் பார்த்துட்டு இருக்கேன். அப்போ எனக்கு நிறைய சாக்லேட்ஸ் வாங்கிக் கொடுப்பாங்க. இப்பவும் அதே பாசம். ஆனால், அது சாக்லேட்டைவிட அவ்வளவு ஸ்வீட்!''

இசை ஆர்வம்!

''அடுத்த வருஷமாவது ஒரு ஆல்பம் பண்ணணும்னு உள்ளுக்குள்ள துடிச்சிட்டே இருக்கு. ஆனா, நேரம்தான் கிடைக்கலை. அதனால சின்னச் சின்னதா பாடிட்டு மட்டும் இருக்கேன். இந்தியில் 'தெவர்'னு ஒரு படத்தில், தங்கச்சி அக்ஷரா நடிக்கிற 'ஷமிதாப்' படத்தில் பாடியிருக்கேன். தமிழில் எல்லாரோட மியூசிக்கையும் கவனிச்சுட்டே இருக்கேன். எனக்கு அனிருத் மியூசிக் பிடிச்சிருக்கு. அவர் இசையில் வெஸ்டர்ன் ப்ளஸ் மெலடி பக்காவா மிக்ஸ் ஆகியிருக்கு!''

தங்கை அக்ஷரா!

'' 'அக்ஷராவோட அக்கா நான்’னு சொல்றதில் எனக்கு ரொம்பப் பெருமை. நடிக்கணும்னு ஆசைப்பட்ட உடனே, அவ சினிமாவில் நடிக்க வந்துடலை. 'ஷமிதாப்' நடிக்கிறதுக்கு முன்னாடி பாலிவுட்டில் அசோசியேட் டைரக்டரா வேலை பார்த்திருக்கா. சினிமாவைப் பத்தி இப்பவே அவளுக்கு நிறையத் தெரியும். ரொம்ப மெச்சூர்டு. சின்ன வயசுல இருந்தே அப்படித்தான். அப்ப நாங்க ரெண்டு பேரும் ஒரே பொம்மைக்காகச் சண்டை போடுவோம். 'தங்கச்சிகிட்ட  கொடும்மா’னு  சொல்லிடுவாங்க. ஆனா, கொஞ்ச நேரம் கழிச்சு பொம்மையை என்கிட்ட  கொடுத்துட்டு என்னைக் கட்டிப்பிடிச்சுக்குவா. அப்பவே என் மேல அவ்வளவு பாசம் அவளுக்கு. என் பெஸ்ட் ஃப்ரெண்ட் அவதான்!''  

 

அப்பா!

''பொதுவா நாமெல்லாம், 'ஒரு நல்ல படம் பார்த்தேன். அன்னைக்குத் தூக்கமே வரலை’னுதானே சொல்வோம். ஆனா, 'நல்ல படம் பார்த்தேன். அதனால நிம்மதியாத் தூங்கினேன்’னு அப்பா சொல்வார். அதான் அவர் ஸ்பெஷல்.இப்பவும் அவர் மூலமாத்தான் சினிமாவைத் தினம் தினம் கத்துட்டே இருக்கேன்.  புதுசா ஒரு டெக்னாலஜி வந்தா, அதைத் தெரிஞ்சுக்க தன்னையே தொலைப்பார். எங்கே, எப்படி இருந்தாலும் அந்த ஆர்வம் நமக்குள் இருக்கணும்னு, அவரோடு பேசுற ஒவ்வொரு நிமிஷமும் தோணிட்டே இருக்கும்!''

ரோல்மாடல்!

''அம்மா சரிகா. ரொம்பவே சுதந்திரமானவங்க; தைரியசாலி. எந்தப் பிரச்னையையும் சமாளிப்பாங்க. என் மும்பை வீட்டில் யாரோ அடையாளம் தெரியாத ஆள் நுழைச்சிட்டான்னு நியூஸ் வந்தப்ப, எல்லாரும் பயந்தாங்க. ஆனா, 'நீ என் பொண்ணு. எதுக்கும் பயப்பட மாட்டேனு எனக்குத் தெரியும்'னு கம்பீரமா சொன்னாங்க. அது என் தன்னம்பிக்கையை இன்னும் ஜாஸ்தி ஆக்குச்சு. அதே சமயம் எனக்கு சின்ன ஜுரம் வந்தாக்கூடப் பதறிடுவாங்க. என் கையைப் பிடிச்சிட்டு பக்கத்துலயே இருப்பாங்க. இப்போ வரை அப்படித்தான்.

அப்பா, அம்மா, அக்ஷரா... இந்த மூணு பேரும்தான் என் சொத்து. இவங்க இல்லைன்னா... இந்த ஸ்ருதி இல்லை!''

- ஜியா உல் ஹக்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்