Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிழலும், நிஜமும் ஒண்ணு கிடையாதுங்க - லட்சுமி மேனன் சிறப்பு பேட்டி!

கொம்பன்' படம் ரிலீஸுக்காக காத்திருக்கு நம்ம லட்சுமி மேனன் பொண்ணு. ஆங், அவங்கள ஒரு பேட்டி எடுத்தா என்னனு என் மண்டை மேல ஒரு பல்ப் எரிய, போன் போட்டேன். 'ஆராணும்..?' - லட்சுமி மேனன் அம்மா உஷா கேட்டாங்க. இன்னார்னு சொல்லவும், அடுத்த நிமிஷம் போன் லட்சுமி மேனன் காதில். பொண்ணு டான் டான்னு பதில் சொல்லுச்சு. 'ப்ளஸ் டூ எக்ஸாம நல்லபடியா எழுதறதுக்கு அட்வான்ஸா ஆல் தி பெஸ்ட்' சொல்லி, பேட்டியை ஸ்டார்ட் பண்ணேன்.

''கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, மஞ்சப்பைனு ஹோம்லி கேரக்டர்ல வந்து மக்கள் மனசுல இடம் பிடிச்சிட்டீங்க, இதற்கான காரணம்?''

''வேற யாரு நாந்தான்.''

''ஹோம்லி கேரக்டர் ரோல் உங்களுக்கு ரொம்ப செட் ஆகியிருக்கு. இத இப்படியே மெயிண்டெயின் பண்ணுவீங்களா?''

''கண்டிப்பா இல்ல. நான் எல்லாருக்கும் ஒண்ணு சொல்ல ஆசைப்படுறேன். படத்துல வர்ற ஒரு கேரக்டர் ரோலை பார்த்துட்டு, இதுதான் அவங்க ஒரிஜினல் ரோல்னு தயவு செய்து முடிவு செய்யாதீங்க. நான் படத்துல வர்ற கேரக்டர் மாதிரி கிடையாது. டோட்டலா வேற மாதிரி. நிழலும், நிஜமும் ஒண்ணு கிடையாதுங்க.''

''உங்களுடைய ரசிகர் பற்றிய உங்களோட அபிப்ராயம்?''

''ரசிகர்களைப் பொறுத்தவரை நல்லா இருக்கும்போதுதான் ஆஹா ஓஹோனு கொண்டாடுவாங்க. கொஞ்சம் அந்த இடத்துல இருந்து நகர்ந்தாலும், வேற மாதிரி பேச ஆரம்பிச்சுடுவாங்க. அதனால என்னப் பொருத்தவரைக்கும் ரசிகர்கள் பாராட்டறது நிரந்தரம் இல்ல.''

''உங்களுக்கு பிடித்த ஹீரோ? எந்த ஹீரோ கூட நடிக்கணும்னு ஆசை?''

''ஓப்பனா சொல்லணும்னா, எனக்கு எந்த ஐடியாவும் இல்ல. ஏன்னா, சினிமாவ பத்தி எனக்கு அவ்வளவு பெருசா தெரியாது. சினிமாவுக்கான சான்ஸ் கிடைச்சுது. உள்ளே வந்தேன். நடிச்சுட்டு இருக்கேன், அவ்வளவுதான். எனக்கு இதுதான்னு எந்த ஒரு ஆசையும் கனவும் இல்ல. அடுத்தடுத்து என்ன நடக்குதோ அதை அப்படியே ஏத்துக்கிட்டுப் போயிட்டிருக்கேன்.''

 

''பிடிச்ச ஹீரோயின்?''

''எனக்கு நஸ் ரியா ரொம்ப பிடிக்கும். ஒவ்வொரு சீன்லயும் அவங்க எப்பவும் பிரஷ்ஷா இருக்கிற மாதிரியே இருப்பாங்க.''

''ஒரு ஊர்ல ரெண்டு ராஜா.. படத்துல ‘குக்குறு குக்குறு’ பாடல் பாடியிருக்கீங்க? பாடலுக்கான வாய்ப்புப் பத்தி?''

''நான் சும்மா எங்கயோ பாடிட்டு இருக்கறத பார்த்துட்டு இமான் சார் கூப்பிட்டு பாடுறியானு கேட்டார். ஒப்புக்கிட்டுப் பாடினேன். இப்போ, பிரசாந்த் நடிச்சிருக்கிற ‘சாகசம்' படத்துலயும் ஒரு பாடல் பாடியிருக்கேன். எனக்குப் பொதுவா மியூசிக்னா ரொம்ப பிடிக்கும். ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர்ராஜா, ஹாரீஸ் ஜெயராஜ் பாடல்கள்னா மெய்மறந்து கேட்டுட்டே இருப்பேன்.''

''உங்களோட சில ஃபேவ்ரெட்ஸ் பத்தி சொல்லுங்களேன்?''

''பிளாக் கலர்னா ரொம்ப பிடிக்கும். சாப்பாட்டுல கேரளா ஃபுட்ஸ். நானே வெளியில போய் சாப்பிடுறது ரொம்ப பிடிக்கும். ஜூவல்ஸ்னா அலர்ஜி. ஃபிக்ஷன் புக்ஸ் படிக்க ரொம்ப ரொம்ப பிடிக்கும். ப்ளஸ்டூவுக்கு அப்புறம் பி.ஏ. லிட்டரேச்சர் அல்லது பி.காம்.தான் என்னோட சாய்ஸ்.''

''கொம்பன் படத்தோட எக்ஸ்பீரியன்ஸ் பத்திச் சொல்லுங்க?''

''ராமநாதபுரத்துல ஷூட்டிங் நடந்துச்சு. எனக்கு டிராவலிங் பிடிக்கவே பிடிக்காது. அதுவும் இல்லாம ரொம்ப இன்ட்டீரியர்ல ஷூட்டிங் நடந்துச்சு. அதனால எனக்கு அந்த இடமும் பிடிக்கல. மத்தபடி எங்க டீம் பிடிச்சுருந்தது. கார்த்திக்கை முன்னையே மீட்பண்ணியிருக்கேன். பட் அவ்வளவு நல்லா பழகினது கிடையாது. நல்ல ஹியூமன்பீயிங். எனக்கு அனிமேஷன் மூவீஸ் ரொம்ப பிடிக்கும். அவருக்கும் ரொம்ப பிடிக்கும்கறதால அதைப்பத்தி ரொம்ப ஜாலியா பேசிட்டு இருப்போம். அவ்வளவு பர்ஃபெக்டான ஆள சத்தியமா பார்த்ததே கிடையாதுங்க.

மஞ்சப்பை படத்துல நான் ராஜ்கிரண் சாரை எதிர்க்கிற நெகட்டிவ் ரோல். நிறைய பேர் ஏன் அப்படி ஒரு கேரக்டரல நடிச்சேனு கேட்டாங்க. அதை ஈடுகட்டற வகையில அவரோட பாஸிட்டிவ் ரோல் வாய்ப்பு கிடைக்குமானு எதிர்பார்த்தேன். கொம்பன்ல அவர்தான் எனக்கு அப்பா.

ராஜ்கிரண் சார், தான் ஹீரோவா வந்த காலத்துல இருந்த சினிமா பத்தி அவ்வளவு ஃபிராங்கா பேசுவாரு. புரடியூசர், டைரக்டர், ஆக்டர்னு எக்கச்சக்க எக்ஸ்பீரியன்ஸ் அவருக்கு. அந்த ஷூட்டிங் ஸ்பாட்ல நிறைய விஷயங்கள தெரிஞ்சுக்கிட்டேன்.''

''உங்கள் பர்த்டே..?''

மே 26

''சினிமாவுல இதுவரைக்கும் என்ன கத்துக்கிட்டீங்க?''

''வீட்ல எல்லாருமே ரொம்ப பாசமா இருப்பாங்க. அப்படியே வெளியிலயும் பழக முடியாது. வெளியில இருக்கற ஆட்கள் யார், யார் எப்படிங்கற விஷயத்த என்னால நல்லா தெரிஞ்சுக்க முடியுது. ரொம்ப சின்னவயசுலயே சினிமாவுக்குள்ள வந்துட்டேன். எட்டாம் வகுப்பு படிக்கும்போதே சினிமா வாய்ப்பு வந்துச்சு. 9ஆம் வகுப்பு படிக்கும்போதுதான் கும்கி படம் நடிச்சேன். அடுத்தடுத்து நான் ரொம்ப பிஸி.''

''உங்களோட அடுத்த படம்?''

''தமிழ், கன்னடம், மலையாளம் தெலுங்குனு ஆஃபர்ஸ் வந்துட்டே இருக்கு. பட் எனக்கு இப்போதைய கடமைனா அது ப்ளஸ்டூ எக்ஸாம்தான். அதையும் கடமையேனுதான் படிச்சிட்டு இருக்கேன் (ஹூம், படிப்பை ஏனோதானோதான் படிக்கிறாராம். படிப்பில் பெரிய ஈடுபாடு இல்லையாம்.) எக்ஸாம் முடிச்சவுடனே காலேஜ்ல அட்மிஷன் போடணும். இப்போதைக்கு இவ்ளோதான்.''

நல்லா படி கண்ணு!

-வே. கிருஷ்ணவேணி-

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்