வில்லனா நடிக்கணும் பாஸ் ! | rio, sun music, ரியோ, சன் மியூசிக்

வெளியிடப்பட்ட நேரம்: 13:56 (31/01/2015)

கடைசி தொடர்பு:13:56 (31/01/2015)

வில்லனா நடிக்கணும் பாஸ் !

‘‘ஈரோடு எனக்கு சொந்த ஊர். டிப்ளமோ இன்ஜினீயரிங் படிக்கிறப்போ வாலிபால், ஷட்டில் கார்க்னு விளையாட்டுலேயும் ஆர்வம். அதுக்காக, ‘ஓவரா சேட்டை பண்றான்; எப்போ பார்த்தாலும் கிரவுண்டுலேயே கெடக்குறான்’னு சொல்லி டி.சியைக் கிழிக்கப் பார்த்தாரு பிரின்ஸிபால். நான்தான் வான்ட்டடா போய், ‘உங்களுக்கு எதுக்கு சார் சிரமம்.

 நானே கிழிச்சிக்கிறேன்’னு கௌம்பி, உள்ளூர் சேனல்ல காம்பியரா இருந்தேன். அப்புறம் ஒரு ‘மல்டி டேலன்ட் ஷோ’வுல அரை இறுதிவரை போயிட்டு எலிமினேட் ஆனேன். மீடியா ஆசையோட சினிமாவிலேயும் நடிக்கிற ஐடியா இருந்ததனால சென்னைக்கு வண்டியேறிட்டேன். முதல்ல விஜய் டி.வி-யோட ‘புதுமுகம்’ நிகழ்ச்சி, ‘கனாகாணும் காலங்கள்’ சீரியல். இப்போ சன்மியூசிக்ல ‘சுடச் சுட சென்னை’ தட்ஸ் ஆல்’’ - நிகழ்ச்சியில் பேசுவது போலவே கேப் விடாமல் பேசுகிறார் ரியோ ராஜ். 

‘‘அப்போ, ‘கனாகாணும் காலங்கள்’ல நடிக்கும்போது உங்களுக்கு இருந்த கனவு இதுதானா?’’

“எனக்கு சினிமாவுல வில்லனா நடிக்கணும்னு ஆசை. ‘கனாகாணும் காலங்கள்’ல அமைதியா நடிச்ச என் கேரக்டரைப் பார்த்து அதுக்கெல்லாம் நீ செட் ஆக மாட்டேனு சொல்லிட்டாங்க. முதல்ல இந்த இமேஜை உடைக்கணும்னுதான் வீ.ஜே-வா டிரை பண்ணேன். அதுக்கும் ‘உடம்பை ஏத்தணும்; ஹேர் கலரிங் பண்ணணும்’னு ஏகப்பட்ட கண்டிஷன். எதையும் ஃபாலோ பண்ணாம ‘நல்லா பேசணும், பேசுறதை எல்லோரும் ரசிக்கணும்’னு எனக்கு நானே ஒரு கண்டிஷன் போட்டுக்கிட்டு காம்பியர் ஆகிட்டேன். கூடிய சீக்கிரம் சினிமாவுல என்னை வில்லனா பார்க்கலாம்!”

‘‘எல்லோரும் ‘நடிச்சா ஹீரோதான்’னு இருப்பாங்க. நீங்க எதிர்மறையா இருக்கீங்களே?’’

“நான் ஹீரோவா நடிச்சா அது எனக்கே சிரிப்பா இருக்கும் பாஸ். சில பேர் என் படத்துல நீங்க ஹீரோவா நடிக்கிறீங்களானு கேட்டாங்க. சினிமாவில நல்ல கேரக்டர்ல நடிக்கணும்ங்கிறது என் ஆசை. ஃபைட் பண்ணி, டூயட் பாடுற ஹீரோவா இருக்கிறது எனக்கு செட் ஆகாது. ஸோ... வில்லன்தான் என்னோட சாய்ஸ்!”

‘‘பல்பு வாங்கின அனுபவம்?’’

‘‘ ‘சுடச் சுட சென்னை’ நிகழ்ச்சியில் டெய்லி வாங்கிக்கிட்டு இருக்கேனே. ஒரு பொண்ணு, ஒரே ஒரு பொண்ணு ‘நான் உங்க தீவிர ரசிகை சார்...’னு பேச ஆரம்பிச்சுட்டா, அடுத்த நிமிடமே லைனை கட் பண்ணி விட்டுடுவாங்க எங்க டீம் மெம்பர்ஸ். அதே சமயம் பொண்ணுங்க ‘ஹாய்... அண்ணா’னு ஆரம்பிச்சா மட்டும் டீமோட சேர்ந்து டீ சாப்பிடப் போயிடுவாங்க. அப்புறமென்ன? ‘பாசமலர்’ சிவாஜி சாருக்கு நன்றி சொல்லிட்டு, நிகழ்ச்சியைத் தொடர வேண்டியதுதான்!”

‘‘நேர்ல எத்தனை பொண்ணுங்ககிட்ட புரொபோஸ் பண்ணியிருக்கீங்க?’’

“சொல்லிடுவேன். அப்புறம் பொறாமைப்படக் கூடாது. நான் யாருக்கும் ரோஜாப்பூ நீட்டினது இல்லை. ஆனா, நிறைய பொண்ணுங்க என்கிட்ட ‘ஐ லவ் யூ’ சொல்லியிருக்காங்க. நானும் ஜாலியா ‘ஸேம் டு யூ’னு சொல்லிடுவேன். கண்டிப்பா எனக்கும் லவ் மேரேஜ் பண்ணிக்கணும்னுதான் ஆசை. ஆனா, எனக்கான தேவதையை இன்னும் மீட் பண்ணலை!”

‘‘எப்போ மீட் பண்ணுவீங்க?’’

‘‘ஏன் இந்தக் கொலவெறி? என்னோடது கூட்டுக் குடும்பம். சின்ன விஷயம்னாகூட பத்து, பதினைஞ்சு பேர் சுத்தி உட்கார்ந்துக்கிட்டு சுண்ணாம்பு அடிப்பாங்க. பஞ்சாயத்தைக் கூட்ட வெச்சுடாதீங்க!”

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்