விரைவில் சூர்யாவின் 24 ! | vikram K Kumar, surya, 24, விக்ரம் கே. குமார், 24, சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான்

வெளியிடப்பட்ட நேரம்: 12:34 (10/02/2015)

கடைசி தொடர்பு:12:34 (10/02/2015)

விரைவில் சூர்யாவின் 24 !

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, பிரணிதா நடித்து வரும் ஹாரர் படம் ‘மாஸ்’ . இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்நிலையில் அடுத்து சூர்யா ‘மனம்’ படத்தை இயக்கிய விக்ரம் கே குமார் இயக்கத்தில் '24' என்ற படத்தில் நடிக்க உள்ளார். 

இந்த படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தி்ற்கு பிறகு 9 வருடங்கள் கழித்து சூர்யா படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஏ.ஆர் இந்த படத்திற்கான இசையமைப்பை துவங்கிவிட்டார்.

விக்ரம் கே குமார் இயக்கத்தில் வெளியான ‘யாவரும் நலம்’ மற்றும் தெலுங்கில் ‘மனம்’ என இரண்டுமே வித்யாசமான கதையம்சத்தில் அமைந்த படங்கள் என்பதால் இந்த படமும் வித்யாசமான கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படம் ஃபேண்டசி கதை என நெருங்கிய வட்டங்கள் தெரிவித்துள்ளன. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்