''அழகான ஹீரோயின் கூட டூயட் பாடணும்'' கனா காணும் பாண்டி! | pakkada pandi, பக்கடா பாண்டி, வஜ்ரம்,

வெளியிடப்பட்ட நேரம்: 15:59 (25/02/2015)

கடைசி தொடர்பு:15:59 (25/02/2015)

''அழகான ஹீரோயின் கூட டூயட் பாடணும்'' கனா காணும் பாண்டி!

ஜ்ரம்’ திரைப்படம் ரிலீஸ் ஆகப் போகும் உற்சாகத்தில் இருக்கிறார் பாண்டி. ‘பசங்க’, ‘மெரினா’, ‘கோலிசோடா’ படங்களில், நான்கு பையன்களில் ஒருவனாக நடித்தவர் தான் இந்த ‘பாண்டிப் பய’! ‘வஜ்ரம்’ புரமோஷனுக்காக புது பேன்ட்,சட்டை எடுக்க கடைக்கு வந்திருந்தவரை அங்கேயே மடக்கிப் பிடித்தோம்!

‘‘அய்யோ சிக்கிட்டேனா..? அப்ப நானே பேச ஆரம்பிச்சுடுறேன். புதுக்கோட்டை தாங்க நமக்கு சொந்த ஊரு. அங்கதான் பிளஸ் டூ படிக்குறேன். அப்புடி இப்புடின்னு பிளஸ் டூ வரைக்கும் வந்தாச்சு. ஆனா பாஸ் பண்ணிடுவேனான்னு டவுட்டாதான் இருக்கு. எங்க அப்பா, அம்மாவுக்காகவாச்சும் பாஸ் ஆயிடணும்.

சினிமாவுல நடிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம், ஸ்கூல் பக்கம் எப்பவாச்சும் தான் போவேன். நீங்கதான் என்னைப் பேட்டி எல்லாம் எடுக்குறீங்க. ஆனா ஊருக்குள்ள நான் இப்பவும் பாண்டிதான். அதுவும் எங்க வாத்தியாரு, கிளாஸுக்கு லேட்டா போனா,‘வெளிய போடா’னு துரத்திவிட்டுருவாரு. படிப்புல நான் இம்புட்டு மோசமா இருந்தாலும், இப்போ ரிலீஸாகப் போற ‘வஜ்ரம்’படத்தோட மெசேஜ், படிப்பு தான்.

முழுக்க முழுக்க படிப்போடமுக்கியத்துவத்தைப் பேசுற படம்!’’ என்ற பாண்டி, ஒரு ஹிந்தி படத்தில் ராணி
முகர்ஜியோடு நடித்துள்ளார்.‘‘ ‘இந்தியா பாகிஸ்தான்’, ‘கமர்கட்டு’ன்னு தொடர்ந்து நான் நடிச்ச படங்கள் வரப் போகுது.

‘கோலிசோடா’வுல நடிச்ச ‘பசங்க’ டீம் இன்னும் நிறையப் படங்களிலும் டீமாவே நடிக்குறோம். ஆபீஸ் பாய், கேன்டீன் பாய், ஸ்கூல் பாயா நடிசிட்டு இருந்த எனக்கு, இப்ப ‘கமர்கட்டு’ல காலேஜ் பாய் புரமோஷன்.

அப்புறம்... ஹிந்தியில ராணிமுகர்ஜியோட ‘அய்யா’னு ஒரு ஹிந்திப் படத்துல நடிச்சேன். அவங்ககிட்ட நிறைய பேசணும்னு தோணும். ஆனா நமக்கு ஹிந்தி தெரியாதே? அவங்களோட அசிஸ்டென்ட்டு அண்ணன்கிட்ட சொல்லி ஹெல்ப் கேட்டா, அவர் நம்மளை மேலயும் கீழயும் பாப்பாரு. அமைதியாயிடுவேன். ஆனா ஹிந்தி கத்துக்கிட்டு, ‘நான் உங்க ஃபேன் மேடம்’னு அவங்ககிட்ட போய் சத்தமா சொல்லணும். ’துமாரா நாம் கியா ஹை?’ ஹிந்தி நல்லா பேசுறேனே..!’’ என்று கலகலவெனச் சிரித்த பாண்டி, இயக்குனர் பெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறார்.


‘‘இப்போ நான் காலேஜ் பையன் அளவுக்கு வளர்ந்துட்டேன். அதனால,எனக்கும் ஒரு டூயட் சாங் எல்லாம் கொடுக்கலாம்ல. அழகான ஹீரோயின் கூட டூயட் பாடணும்னு எனக்கும் கனவு இருக்கும்தானே ?!’’


-பொன்.விமலா-

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்