டான்ஸ் மாஸ்டர் இயக்குநர் ,கதாநாயகி தாயரிப்பாளர் - இது ‘யாளி’ ஸ்பெஷல்!

‘முழுக்க முழுக்க இது ஹீரோயின் சப்ஜெக்ட்’ என்ற அறிவிப்புடன் பட பூஜைமுடித்து இனிதே துவங்கி இருக்கிறது ‘யாளி’ திரைப்பட வேலைகள்.

‘அதென்னங்க‘யாளி’?’ என்கிற கேள்விக்குத் தீவிரமாய் பதில் சொல்கிறார், புதுமுக இயக்குநரும் பழகிய டான்ஸ் மாஸ்டருமான காதல் கந்தாஸ்.

‘‘யானை, சிங்கம், குதிரை இந்த மூணு உருவங்களும் சேர்ந்த சிற்பங்களை கோவில்களில் பார்த்திருப்பீங்க. இதுக்குப் பேரு தான், யாளி. ‘கலாபக்காதலன்’ படத்துல ஆர்யாவுக்கு மச்சினி ரோல்ல நடிச்ச அயாவை ஞாபகம் இருக்கா? அந்த துறுதுறு பொண்ணு தான் ‘யாளி’ ஹீரோயின். இது முழுக்கமுழுக்க ஹீரோயின் சப்ஜெக்ட், அதனால இந்தப் படத்துல ஹீரோயின் தான் கெத்து.

படத்துக்கு அக்‌ஷயா ஹீரோயின் மட்டுமில்ல; தயாரிப்பாளரும் கூட. ‘யாளி’கதைக்கான முடிச்சு எங்கிருந்து வந்ததுன்னு கேட்கிறவங்களுக்கு ஒரு போனஸ் தகவலும் இருக்கு. இந்தப் படம், அக்ஷயாவோட நிஜ வாழ்க்கைக் கதை.

ஏற்கனவே கன்னடத்துல நான் இயக்கிய ‘நீனாதே நா’ படம் மூணு வாரங்களைத் தாண்டி நல்லா ஓடுச்சு. டான்ஸ் மாஸ்டரா ‘காதல்’, ‘அங்காடித் தெரு’, ‘வெயில்’, ‘எம்மகன்’, ‘அறவான்’, ‘நான் மகான் அல்ல’, ‘டார்லிங்’னு நிறைய படங்களுக்கு கொரியோகிராஃபி பண்ணியாச்சு. இந்த டான்ஸ் மாஸ்டர் அனுபவம்தான் என்னை ஒரு இயக்குநரா மாத்தியிருக்கு.

சத்யன் இசை, வைரமுத்து பாடல்கள்னு ‘யாளி’ நிச்சயமா ஜெயிக்கும். ‘யாளி’யில இருக்கும் குதிரை- ஹீரோயின், சிங்கம்- வில்லன்,  யானை- டிவிஸ்ட்னு முக்கோண பலத்தோட படம் ரெடியாகிட்டு இருக்கு. நீங்க ரெடியா மக்களே?’’ என  பரபரவென ஷூட்டுக்குக் கிளம்புகிறார், காதல் கந்தாஸ்.

-பொன்.விமலா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!