வீட்லதான் அப்பா, ஷூட்டிங் ஸ்பாட்டுன்னு வந்துட்டா குரு - ஐஸ்வர்யா அர்ஜுன்!

’பட்டத்து யானை’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன். தற்போது அப்பாவின் இயக்கத்திலேயே அடுத்த படத்தில் நடிக்கிறார். அவரிடம் பேசிய போது, 

அடுத்த படம் எப்போ? 

அதற்குத் தான் தயாராகி கொண்டிருக்கிறேன். அப்பாவோட இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன் அதில் கதக் நடனமாடுகிற மாதிரியான வேடம். அதனால் கதக் நடனம் கத்து கிட்டு வரேன் ஏற்கனவே நான் நல்லா டான்ஸ் ஆடுவேன். ஆனால் கதக் தெரியாது. 

மத்த டைரக்டர்ன்னா பரவா இல்லை அப்பா டைரக்ஷன்.. அவர் உருவாக்கின காரக்டருக்கு நான் உயிர் கொடுக்கணும் இல்லன்னா திட்டு விழும்.அதுக்காக கத்துக்கறேன்.

ஒரு இடைவெளி விழுந்து விட்டது  மாதிரி தெரியிதே ?

இரண்டு ஹிந்தி படம் வந்தது. வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். நல்ல படம் வந்தால் நடிப்போம். இல்லன்னா வேற வேலையில கவனம் செலுத்தலாம்னு ஃபேஷன் டிசைனிங் கத்துகிட்டேன். இப்ப அப்பா இயக்கும் படத்திற்கு நான்தான் காஸ்டியூம் டிசைனர். லண்டன்ல போய் ஃபேஷன் டிசைனிங் படித்தது நல்லதுக்குத் தான்னு தெரிகிறது.

அப்பா இயக்குற படம்னா சில நல்லது கேட்டது இருக்குமே?

அப்பாங்கிறது வீட்ல. ஷூட்டிங் ஸ்பாட்டுன்னு வந்துட்டா குரு, சிஷ்யை உறவுதான். அவர் சொல்வதை செய்து விட்டு நல்ல பெயர் எடுக்கணும். நல்ல நடிகை என்று எல்லோரும் பாராட்டனும் அது தான் என் லட்சியம்.

அதுவும் அப்பா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று மொழிகளில் நடிக்கிறேன் ஹீரோ யார் என்று  அப்பா விரைவில் அறிவிப்பார். இந்த படத்திற்காக அப்பா ஒர்க் ஷாப் வைத்து எல்லா நடிகர்களுக்கும் பயிற்சி அளித்து படம் எடுக்க போகிறார். வாழ்த்துகள் ஐஸ்.. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!