லவ் குரு... 10 லட்சம் மிஸ்டு கால்! | லவ் குரு, ரேடியோ சிட்டி, love guru, radio city

வெளியிடப்பட்ட நேரம்: 13:57 (18/03/2015)

கடைசி தொடர்பு:13:57 (18/03/2015)

லவ் குரு... 10 லட்சம் மிஸ்டு கால்!

 ரேடியோ சிட்டியின் ஆர்.ஜே. லவ் குரு.  இரவு 9 மணி முதல் 1 மணி வரை தன்  ‘லவ் குரு’ நிகழ்ச்சியின் மூலம்  இளைஞர்களை கட்டி வைக்கும் மந்திரக்  குரல்காரர். ‘10 லட்சம் மிஸ்டு கால்  சாதனை’யின் உச்சத்தில் இருந்தவருக்கு,  ‘ஹாய்..!’ சொன்னோம்.

 அதென்ன 10 லட்சம் மிஸ்டு கால்  சாதனை?

 இன்னைக்கு எல்லார்கிட்டயும் மொபைல்  இருக்கு. ஆனா பலர்கிட்ட போதுமான பேலன்ஸ் இருக்காது. செலவு பண்ண பணமும் இருக்காது. ‘மிஸ்டு கால் கொடுத்தாலே பேச முடியும்’னு கான்சப்ட் பிடிச்சா, கிளிக் ஆகும்னு தோணுச்சு. இயக்குனர் பிரபு சாலமன், சீனு ராமசாமி இருவரும் இந்த டோல் ஃபிரீ நம்பரை லாஞ்ச் செய்தார்கள். முதல்ல 267 மிஸ்டு கால் மட்டுமே வந்தது. போகப் போக, ஒவ்வொரு நாளும் அதிகரிச்சு, 10 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்தச் சாதனையை கின்னஸ் ரெக்கார்டுக்கு விண்ணப்பிச்சிருக்கோம். 

இதுவரை 6,000 பேரை அழைத்துப் பேசியிருக்கேன். பேசிட்டே இருக்கேன். என் குரல் அவங்க துயரத்தை தீர்க்கும்னா, தொடர்ந்து பேசுவேன். ஒவ்வொரு நாளும் நேரம் கிடைக்கும் போதெல்லம் அந்த டோல் ஃபிரீ நம்பரில் இருந்து அழைத்துப் பேசுவேன். அதில் நன்றாகப் பேசிய அதாவது எமோஷனலாகப் பேசிய ஐந்து பேரை தேர்ந்தெடுத்து ஷோவில் அந்தக் குரலை ஒலிபரப்புவோம்.

ஏன் உங்க ஃபோட்டோவை தவிர்க்குறீங்க..?


அது எங்க கம்பெனி ரூல். போட்டோ மட்டுமில்ல... என் பெயர் கூட யாருக்கும் தெரியாது. சரவணா, ஸ்டீஃபன்னு(உதாரணத்துக்குச் சொன்னேங்க. இதெல்லாம் என் பேர் இல்ல!) பெயரைச் சொன்னாக்கூட, அதன் மூலமா என் மதம் வெளிப்படக் கூடும். ஒரு ஆர்.ஜேவோட பெயரில் கூட, எந்த வேறுபாடும் இருக்கக்
கூடாதுனு தான், நான் பெயரை ‘லவ் குரு’னு வெச்சுக்கிட்டேன். ஆர்.ஜே. வேலையோட அடையாளமே, குரல்தான். ‘ஓ.கே... இவன் குரலே போதும்!’னு என் ரசிகர்களும் காம்ப்ரமைஸ் ஆகிட்டாங்க. ஒருவேளை என்னால இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்ய முடியலைன்னா, என்னோட மாஸ்க்-ஐ வேறு யாராவது போட்டுட்டு, இதைத் தொடரலாம்!

'லவ் குரு’ கான்செப்ட் எப்படி வந்தது?

ரேடியோ சிட்டி தொடங்கிய ஆண்டு ஒருத்தர் இந்த நிகழ்ச்சியை வழங்கினார். அவர் போன பிறகு, ‘மறக்க முடியுமா’ என்ற பெயர்ல இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருச்சி ஹலோ எஃப்.எம் ல இருந்து நான் இங்க வந்தப்போ, ‘‘ ‘லவ் குரு’, ‘மறக்கமுடியுமா’ ரெண்டுல எந்தப் பெயரை எடுத்துக்கிறீங்க?’’னு கேட்டாங்க. நான் லவ் குரு ஆயிட்டேன்!


எல்லாரோட காதலைப் பத்தியும் பேசுற உங்களோட காதல்..?!


நாலு வருஷமா ஒரு பெண்ணைக் காதலிச்சு, பிரேக் அப் ஆன அனுபவம் மனசெல்லாம் இருக்கு. அந்த வலி, வேதனை, அவஸ்தை எல்லாத்தையும் உணர்ந்தவன் நான். அந்த பர்சனல் டச் தான் இந்த ஷோவை வெற்றிகரமா எடுத்துச் செல்ல வெச்சிருக்கு!’’

எதிர்காலத் திட்டம்..?

நான் சென்னைக்கு வந்ததே, சினிமாவுல சாதிக்கணும்னுதான். டைரக்டர் பாண்டிராஜ் சார்கிட்ட அசிஸ் டன்ட் டயலாக் ரைட்டரா, ‘கேடி பில்லா, கில்லாடி ரங்கா’ படத்துல வேலை பார்த்தேன். நல்ல சினிமா எடுத்து, நல்ல பெயர் எடுக்கணும்!

ரசிகர்களோட மறக்க முடியாத பரிசு..?


நிறைய நிறைய இருக்கு. எதைச் சொல்றதுனு தெரியல. ஒரு முறை நல்லா தொண்டைக் கட்டிக்கிச்சு. அந்தக் குரலோட ஷோ பண்ணினேன்.

அதைக் கேட்ட ஒரு ரசிகர், எங்க ஆபீஸ் பக்கத்துல இருக்கிற டீ கடையில, பாலுக்கு 50 ரூபாய் பணமும், பனங்கற்கண்டையும் கொடுத்துட்டுப் போயிருக்காங்க. 

‘உங்களுக்கும், எனக்குமான ரிலேஷன்ஷிப் முகம் தெரியாததாவே இருக்கட் டும். தயவு செய்து யாரும் நேர்ல வர வேண்டாம்’னு அடிக்கடி ஷோல சொல் வேன். அதுக்கு மதிப்பு கொடுத்து, அவங்க என் முகம் பார்க்காம திரும்பிப் போயிருக்காங்க. பனங்கற்கண்டு என் தொண்டைக்கும், அந்தப் புரிதல் என் மனசுக்கும் இதமா இருந்தது!’’

நிகழ்ச்சி எப்படிப் போயிட்டு இருக்கு..?


இந்த 10 லட்சம் மிஸ்டு கால்ல, ஒருத்தருக்குப் போன் பண்ணினப்போ, அவர் லயோலாவுல படிக்கிற பார் வைத் திறனற்ற மாற்றுத்திறனாளி மாணவர்னு தெரிய வந்தது. ‘டேர்ம் ஃபீஸ் கட்ட முடியல. உங்களால உதவ முடியுமா?’னு கேட்டார். அதை நிகழ்ச்சியில் சொன்ன ஒரு மணி நேரத்துல, ஒருத்தர் ஃபோன் செய்து அவரோட படிப்புச் செலவை ஏத்துக்கிறதா சொல்லிட்டார். அதேமாதிரி, இன்னொரு மாற்றுத்திறனாளி வீல் சேர் கேட்டிருந்தார். அடுத்து ஒரு மணி நேரத்துல ஒரு டாக்டர் போன் பண்ணி வீல் சேர் வாங்கிக் கொடுத் துட்டார். நிகழ்ச்சியில் நிறைய சந்தோஷப்பட்டிருக்கேன். நெகிழ்ந்த தருணங்கள் இவை!

திருத்துறைப்பூண்டில பிறந்து இன்னைக்கு இத்தனை அன்பு நெஞ்சங்களை சம்பாதிச்சிருக்கேன்னா, அதுக்கு இந்த வேலைதான் காரணம். மீ டூ லவ் யூ லவ் குரு!

- வே. கிருஷ்ணவேணி-

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்