இவரும் ஆஸ்கர் இந்தியன்!

.ஆர் ரஹ்மான், ரசூல் பூக்குட்டிக்கு அடுத்து ஆஸ்கர் வாங்கியிருக்கிறார் இந்தியாவைச் சேர்ந்த 26 வயது இளைஞன் ராகுல் வேணுகோபால். 2014 விஷுவல் எஃபெக்ட் பிரிவில் ஆஸ்கர் வாங்கியது ‘இன்டர்ஸ்டெல்லார்’ திரைப்படம். இந்தத் திரைப்படத்தின் விஷுவல் எஃபெக்ட்டுக்காக வேலை பார்த்த டபுள் நெகட்டிவ் டீமின் உறுப்பினர் ராகுல் வேணுகோபால். கனடாவில் வேறு சில ஹாலிவுட் படங்களின் விஷுவல் எஃபெக்ட் வேலையில் பிஸியாக இருந்தவருடன் மின்னஞ்சல் மூலம் பேசியதில்...

“நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் கொச்சியில். அம்மா ஒரு பள்ளியில் பிரின்ஸிபால். அப்பா பிசினஸ்மேன். சின்ன வயசுல இருந்தே இயற்கை அழகை ஓவியமா வரையிறதுனா ரொம்ப இஷ்டம். கேரளாவில் இருக்கிற மலைகளை, மனிதர்களை, வனங்களை, பூக்களை ஓவியமா வரைய ஆரம்பிச்சேன். இப்படி ஒவியங்களோட போன என் வாழ்க்கையை ‘தி மேட்ரிக்ஸ்’ங்கிற ஹாலிவுட் படம் மாத்திடுச்சு. அந்தப் படத்துல இருந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் என்னை ரொம்பவே கவர்ந்தது. அந்தப் படத்தைப் பற்றி பத்திரிகைகளில் வந்த தகவல்களைத் தேடித் தேடிப் படிச்சேன்.

பள்ளிப் படிப்பை முடிச்சுட்டு என்ன பண்ண லாம்னு விசாரிச்சா, இதற்கான படிப்பு ஆஸ்திரேலியாவிலும், சிங்கப்பூர்லேயும்தான் இருக்குனு சொல்லிட் டாங்க. சரின்னு சென்னையில் ஒன்றரை வருட படிப்பை முடிச்சுட்டு மிச்ச ஒன்றரை வருட படிப்பை அதே கல்லூரியின் சிங்கப்பூரில் இருக்கும் இன்னொரு கேம்பஸில் முடிச்சேன். சரியா அந்தச் சமயம் ஹைதராபாத்தில் இருக்கும் மகுட்டா விஃபெக்ஸ் நிறுவனத்துல வேலை கிடைச்சுது.

அப்போ ‘நான் ஈ’ படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகளுக்காக மகுட்டாவை அணுகி இருந்தார்கள். அப்படித்தான் முதல் அனுபவம் ஆரம்பிச்சுது. அதன் பிறகு வேர்ல்டுவைடு எஃப் எக்ஸ்( Worldwide FX) என்ற நிறுவனத்துல சேரச் சொல்லிக் கேட்டாங்க. அங்கே சேர்ந்து ‘எக்ஸ்பெண்டபிள்ஸ் 2’ படத்துல வேலை செஞ்சேன். அதன் பிறகு இஸ்தான்புல், சீனானு பல இடங்களில் வேலை. அப்புறம் டபுள் நெகடிவ் டீமில் இடம் கிடைச்சுது.அந்த நிறுவனத்தோட ‘இன்டெர்ஸ்டெல்லர்’ படத்துல வேலை பார்த்தேன். ஆனா அப்போ ‘இன்டெர்ஸ்டெல்லர்’ ஆஸ்கர் வாங்கும்னு எதிர்பார்க்கல.

பால் ப்ராங்கிளின்ங்கிறவர்தான் எங்க டீமோட ஹெட். எங்ககிட்ட இப்படி வேணும் அப்படி வேணும்னு அவர்தான் கேட்பார். நோலானுக்கும், எங்களுக்குமான மீடியேட்டர் அவர்தான். நல்லா இருந்தா வெரிகுட்னு பாராட்டு கிடைக்கும். நாங்க ஆஸ்கர் ஜெயிக்க முக்கிய காரணம் நோலான்தான். எல்லோருமே விஷுவல் எஃபெக்ட்டை படத்தோட பிரமாண்டத் துக்குதான் பயண்படுத்துவாங்க. அதுக்கும் கதைக்கும் சம்பந்தமே இருக்காது. விஷுவல் எஃபெக்ட் பண்ண ஷாட், படத்தின் கதையை எந்த வகையிலும் எடுத்துரைக்காது. ஆனா நோலான் விஷூவல் எஃபெக்ட்டைக் கதை சொல்லும் கருவியா பார்த்தார். எங்களுக்கு ஆஸ்கர் அறிவிச்ச நீதிபதிகள் இதைத்தான் காரணமா சொன்னாங்க.

‘எக்ஸ்பெண்டபிள்ஸ் 2’, ‘நான் ஈ’, ‘ஏழாம் அறிவு’ போன்ற படங்களில் வேலை பார்த்திருக்கேன். ‘எக்ஸ்பெண்டபிள்ஸ்’ படத்துக்காக மூணு மாசம் வேலை பார்த்தோம். ‘ஏழாம் அறிவு’ படத்துல கிராஃபிக்ஸ் உலகத் தரத்தில இருக்கணும்னு முருகதாஸ் சொன்னார். அந்தப் படத்துல போதி தர்மர் வர்ற காட்சி தாய்லாந்துல இருக்கிற ஒரு கிராமத்துல எடுத் தது. கதைப்படி பழைய மலை கிராமமா அது இருக்கணும். ஆனா அந்தக் கிராமத்துல சில இடங்களில் நகரத்தோட சாயல்கள் தெரியும். அதை இயக்குநர் எதிர் பார்த்த மாதிரி பழைய கிராமமா கிராஃபிக்ஸ் பண்ணிக்கொடுத்தேன். இந்திய சினிமாவைப் பொறுத்தவரை விஷுவல் எஃபெக்ட்டுங்கிறது வெறும் பிரமாண்டத்துக் காக மட்டும் பயன் படுத்தப்பட்டு வருது. இங்கே யாரும் கதையோட அதை இணைக்கிறது இல்லை” என்கிறார்!

- கு.அஸ்வின்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!