கொக்கி குமாரை திரும்பவும் கொண்டுவர்றதுல சந்தோஷம்! - ஐஸ்வர்யா தனுஷ் | Aishwarya dhanush Interview About Vai raja vai

வெளியிடப்பட்ட நேரம்: 14:33 (24/04/2015)

கடைசி தொடர்பு:14:33 (24/04/2015)

கொக்கி குமாரை திரும்பவும் கொண்டுவர்றதுல சந்தோஷம்! - ஐஸ்வர்யா தனுஷ்

ராமை நினைத்து காதலால் உருகி கண்ணீரில் பேசும் ஜனனி, ஜனனிக்காக தன்னுடைய உயிரையே விட்ட ராம் என்று மாறுபட்ட காதல் கதைக்களத்துடன் 3 படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தனுஷ். ரஜினியின் மகளும் தனுஷின் மனைவியுமான இவர், இரண்டாவதாக “வை ராஜா வை” படத்தை இயக்கி, படமும் வெளியாக ரெடியாகிவிட்டது. படத்தின் இறுதி வேலைகளில் பிஸியாக இருந்தவரிடம் சில கேள்விகளை வைத்தோம்,

'வை ராஜா வை' படம் எப்படி வந்திருக்கிறது?

முழுக்க முழுக்க கமர்சியல் படம்தான் 'வை ராஜா வை'. விடுமுறைக்கான அட்வெஞ்சர் த்ரில்லர் படமா இருக்கும். ஹீரோ கெளதம் கார்த்திக், ஹீரோயின் ப்ரியா ஆனந்த், மியூசிக் யுவன் சங்கர் ராஜா, கேமரா வேல்ராஜ்.  

கொக்கி குமாரு படத்துல என்ன பண்றாரு?

தனுஷ் பண்ண கதாபாத்திரத்துலயே எனக்கு ரொம்ப பிடிச்சது புதுப்பேட்டை கொக்கி குமாருதான். இந்தப் படத்துலயும் ஒரு காட்சிக்கு அவரை வைச்சு பண்ணலாம்னு தோணுச்சு. ஏன் விடணும்னு அவர்கிட்டயே கேட்டேன். அப்போ தமிழ் - ஹிந்தினு ரொம்ப பிஸியா இருந்த நேரம். 5 மணி நேரத்துல உங்களை விட்டுருவேன்னு சொன்னேன். உடனே படப்பிடிப்புக்கு ஓகே சொன்னார். படப்பிடிப்பே மிரட்டலா போச்சி. கொக்கி குமார திரும்ப கொண்டுவர்றதுல எனக்கு சந்தோஷமே.

அப்போ, புதுப்பேட்டை பாகம் இரண்டு நீங்க இயக்கலாமே?

புதுபேட்டை பார்ட் 2  தனுஷ் பண்ணுவாருன்னு நான் எதிர்பார்க்குறேன். ஆனா, என்னால பண்ண முடியுமானு தெரியல... அப்படியே வந்தாலும் ரசிகர்களுக்கு வித்தியாசமா கொடுக்கணும்.

முதல் படம் காதல் சார்ந்த படம், இப்போ சூதாட்டம் சார்ந்த த்ரில்லர் படம். மாற்றத்துக்கு காரணம் என்ன? 

ஒரே மாதிரியான படமா எடுக்காம புதுசா எடுக்கணும்... அதுவும் கமர்சியலா நல்ல படமா குடுக்கணும்னு ஆசைப்பட்டேன். இந்தப் படம் கமர்சியலுக்கு ஓகேவா இருக்கும். அதுமட்டுமில்லாம சூதாட்டம், படத்தில் ஒரு பார்ட்தான். இன்னும் நிறைய  சொல்லிருக்கோம். பெரிய டீம், நிறைய லொக்கேஷன், அதிகம் பயணம் பண்ண வேண்டியதா இருந்தது. டீம் வொர்க்தான்  எல்லாத்துக்கும் காரணம். நான் மட்டுமில்லாம எங்க ஒட்டுமொத்த டீமுமே இறங்கி வேலை செஞ்சதாலதான் இவ்வளவு சாதிக்க முடிஞ்சது.

அனிருத்தை அறிமுகப்படுத்தியது நீங்கதான். இந்தப் படத்துலயும் அனிருத் இருப்பாருனு ரசிகர்கள் நினைச்சாங்க. ஆனா, யுவனைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

'3' பட ஆல்பம் ரொம்ப பெரிய ஹிட் ஆயிடுச்சி. மறுபடியும் அதே டீம்னா ரொம்ப எதிர்பார்ப்பு கூடிடும். அதுமட்டுமில்லாம தனுஷ் என் கூடவே இருந்தாரு. இப்போ தனியா நான் மட்டும் இறங்கி வேலை பார்க்குறேன். அதான் புது கூட்டணியா இருந்தா நல்லா இருக்கும். அதுமட்டுமில்லாம, யுவனோட பெரிய ஃபேன் நான்.

இப்போதைய சினிமா எப்படி இருக்கு?

சினிமா ரொம்பவே மாறியிருக்கு. ரசிகர்கள் புதுப்புது கதையாதான் எதிர்பார்க்குறாங்க. புதுசா எது சொன்னாலும் ஏத்துக்குறாங்க. 10 வருடத்துக்கு முன்னாடி இருந்ததுக்கும் இப்போதைய சினிமாவும் ரொம்பவே மாற்றம். சினிமா புதுசா இருக்குனே சொல்லலாம்.

அப்பாவும் கணவரும் உங்க படத்தைப் பார்த்துவிட்டு என்ன சொல்லுவாங்க?

நம்ம பண்ணுற தப்பை நமக்கு நெருக்கமானவங்கதான் சுட்டிக் காட்டுவாங்க. கண்டிப்பா ரெண்டு பேருமே அதை சொல்லுவாங்க. ஐடியா கொடுப்பாங்க. சொல்லுறதை நானும் ஏத்துப்பேன்.

அப்பாவை வெச்சு எப்போ படம் பண்ணப்போறீங்க?

அப்பாவை வெச்சு படம் பண்ணணுங்கிறது என்னோட கனவு. ஆனா, அவரை வெச்சு படம் பண்ணுற அளவுக்கு எனக்கு இன்னும் அனுபவம் கிடையாது.

தனுஷ் எழுதி இளையராஜா ஒரு பாடல் பாடியிருக்கார். அந்த அனுபவம் எப்படி இருந்தது?

நானும் தனுஷும் கெஞ்சாத குறையா கேட்டதுனாலதான் ராஜா சார் பாடுறேன்னு சம்மதிச்சார். அதுமட்டுமில்லம ராஜா சாரோட பெரிய ஃபேன் தனுஷ். தனுஷிடம் கேட்டதும் உடனே எழுதித் தர ஓகே சொல்லிட்டாரு. அசத்தலா வந்திருக்கு. கண்டிப்பா செம ஹிட்டடிக்கும் பாருங்க!

- பி.எஸ்.முத்து

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்