Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கௌதம் கார்த்திக்கின் இரவு நான்கு மணி ரகசியம்! கெளதமுடன் ஒரு ஜாலி பேட்டி!

நவரச நாயகன் கார்த்திக்கின் அனைத்து குறும்புகளும் கெளதம் கார்த்திக்கிடமும் இருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் 'கடல்' மற்றும் 'என்னமோ ஏதோ'  என இரண்டு படங்களையும் நடித்து முடித்துவிட்டார். அடுத்ததாக வெளியாகவிருக்கும் படம் 'வை ராஜா வை'. பட வேலையில் துறுதுறுவென்று இருந்தவரை அரை மணி நேரம் சிறைப்பிடித்து பேச்சு கொடுத்தோம். 

வை ராஜா வை படம் எப்படி வந்திருக்கிறது?

வேல்ராஜ், யுவன், டேனியல் பாலாஜி, ப்ரியா ஆனந்த், விவேக் என பெரிய ஸ்டார்ஸ் எல்லோரும் இந்தப் படத்துல நடிச்சிருக்காங்க. இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்துக்கு  இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ்தான் காரணம். ஐடியில் வேலை செய்யுற மிடில் க்ளாஸ் பையன்தான் கார்த்திக். அந்தப் பையனுக்கு ஏற்படுகிற பிரச்னை, அந்த பிரச்னையில  இருந்து எப்படி அவன் தப்பிக்கிறான்ங்றதுதான் கதையே.

ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ்... இதுல எந்த டைப் ஹீரோவா ஆகணும்னு ஆசைப்படுறீங்க?

ஆக்‌ஷன் ஹீரோவா மட்டும் நடிச்சா, ஆக்‌ஷன் மட்டும்தான் இவனுக்கு வரும் அப்படினு ரசிகர்கள் நினைச்சிப்பாங்க. அப்படி எதுலேயும் லாக் ஆயிடக் கூடாது. இந்த மூணுலேயுமே சாதிக்கணும். எந்த கதாபாத்திரம் கிடைச்சாலும் பண்ணணும்.

அப்பாவை மாதிரியே நீங்களும் ரொம்ப ஜாலி டைப்னு சொல்றாங்களே?

நான் படிச்சது வளர்ந்தது எல்லாமே ஊட்டிலதான். அப்பாவோட நல்லா பழக முடியலை. சென்னை வந்தப்போ 'கடல்' பட ஷூட்டிங். கடல் முடியுற வரைக்கும் அப்பாவோட  நேரம் ஒதுக்கவே முடியலை. ஆனா நான் பண்ணுற சில விஷயம் எல்லாம் அப்படியே உங்க அப்பா பண்ணுற மாதிரியே பண்ணுறனு மணி சார் அடிக்கடி சொல்லுவார்.  எனக்கே ஆச்சரியமா இருக்கும். இப்போதான் அப்பாவோட ரொம்ப க்ளோஸா பழகுறேன். அட... அப்பாவை மாதிரிதானே பையனும் இருப்பான்.

பெரிய ஹீரோவோட பையனா சினிமாவில் நடிப்பது ப்ளஸ்ஸா மைனஸா?

கண்டிப்பா ப்ளஸ்தான். பார்க்கும்போதே ஹீரோவாதான் பார்ப்பாங்க. அதுக்கு ஏத்தமாதிரி நாமளும் கஷ்டப்பட்டு உழைச்சாலே போதும், சக்ஸஸ் நமக்குத்தான். அப்பா பெயரைக் கெடுக்காம இருந்தாலே போதும்.

வை ராஜா வை படத்தில் நடிக்கக் காரணம் ?

கதைதான் முக்கிய காரணம். ஐஸ்வர்யா அக்கா என்கிட்ட கதையை சொல்லும்போதே, 'கதை வித்தியாசமா இருக்கே. இந்தப் படத்தை ஆடியன்ஸ் ஏத்துப்பாங்களா'னு  கேட்டேன். எனக்கே டவுட்டாதான் இருந்துச்சி. ஆனா, ஷூட்டிங் போக போக எனக்கே நம்பிக்கை வந்துருச்சி. நான் நினைச்ச மாதிரியே படமும் சூப்பரா வந்திருக்கு.

'அக்னி நட்சத்திரம் பார்ட் 2' நீங்க நடிப்பீங்களா?

'அக்னி நட்சத்திரம் பார்ட் 2'-க்கு நிறைய பேர் கதை செல்லுறாங்க. ஆனா 'அக்னி நட்சத்திரம்' படம்னாலே எங்க அப்பாதான். அதை மாத்திடக் கூடாது. ஆனா, கண்டிப்பா விக்ரம் பிரபுவும் நானும் ஒரு படம் நடிப்போம். அது 'அக்னி நட்சத்திரம்' இரண்டாம் பாகம்லாம் கிடையாது.

நீங்க நடிச்சதுல, நடிச்சிட்டு இருக்குறதுல உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரம் எது?

'கடல்' படத்துல நடிச்ச தாமஸ் கதாபாத்திரம்தான் என்னோட ஆல் டைம் ஃபேவரைட். தாமஸ்ஸோட நான் வாழ்ந்துட்டேன். அந்த கடல், நான் நடிச்ச சீன் எதையுமே என்னால மறக்க முடியாது.

நீங்க படம் முடிவு செய்வதில் அப்பாவின் தலையீடு இருக்குமா?

அப்பா கதையைக் கேப்பாரு. எனக்கு டவுட்னாலும் அப்பாகிட்டதான் கேப்பேன். ஆனா, அவரு என்னோட முடிவில் தலையிட்டது கிடையாது.

அப்பா நடிச்ச படங்களில் உங்களுக்குப் பிடித்தது?

'உள்ளத்தை அள்ளித்தா' படத்தை மட்டும் 200 முறையாவது பார்த்திருப்பேன். என்னை சிரிக்கவும், அழவும் வைச்சப் படம் அதுதான்.

உங்களைப் பற்றி நீங்களே ஒரு கிசுகிசு சொல்லுங்களேன்? 

நைட் 4 மணிக்கு உங்க தூக்கத்தை கெடுக்க மாதிரி சத்தம் கேக்குதுனா, அதுக்குக் காரணம் நானாதான் இருப்பேன். எனக்கு பைக் ஓட்டுறதுனா அவ்வளவு பிடிக்கும். நைட்டுதான் அதிகமா வண்டி ஓட்டுவேன்.

'ஒரு ரைடு போகலாம் வாரீங்களா?' என்று சிரித்துக்கொண்டே பைக்கை ஸ்டார் செய்தார் கெளதம் கார்த்திக்.

பி.எஸ்.முத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்