‘மானாட மயிலாட'... இப்போ கின்னஸில்! | manada mayilada gets guinness record

வெளியிடப்பட்ட நேரம்: 17:38 (29/04/2015)

கடைசி தொடர்பு:17:48 (29/04/2015)

‘மானாட மயிலாட'... இப்போ கின்னஸில்!

‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியின் ஒரு எபிஸோட் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது. வெவ்வேறு வடிவ பிம்பங்களை எதிரொளிக்கும் கண்ணாடி அறைக்குள் நடக்கும்போதே, மூளை குழம்பி, காது வழியாக வருவது போல் இருக்கும். ஆனால், அந்த cubic அமைப்பைக் கொண்ட ஒரு AMES ROOM ILLUSION-ல் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியின் ஒரு எபிஸோட்-ஐ வெற்றிகரமாக ஷூட் செய்து, கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறது ‘மானாட மயிலாட’ குழு!

கலா மாஸ்டர் சந்தோஷத்திற்கு கேட்கவா வேண்டும்? ‘‘நடனத்தில் புதுவிதமான சாதனை பண்ணணும்னு நினைச்சேன். நீண்ட கால யோசனை மற்றும் தேடலுக்குப் பிறகு கிடைச்சதுதான் இந்த ஐடியா. பொதுவாவே, எங்க ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியின் வெற்றியில், எங்களோட வித்தியாசமான மேடை அமைப்புக்கும் பங்கிருக்கு. அதையே கின்னஸ் சாதனைக்கும் கருவியா ஆக்க முடிவு செய்தோம்.

AMES ROOM ILLUSION பற்றி டான்ஸர்ஸ் முதல் கேமராமேன் வரை எல்லோருமே தெளிவாப் புரிஞ்சுக்கிட்டோம். முதல்ல, கியூபிக் சைஸ்ல ஒரு அறை அமைத்தோம். அந்த அறைக்குள்ள இருக்கிற கண்ணாடிகளில் குட்டை, நெட்டைனு உருவங்கள் வித்தியாசமா பிரதிபலிச்சு குழப்பும். சொல்லப்போனா, இது ஒரு கண்கட்டு வித்தை மாதிரி. உதாரணமா, அந்த ரூம்ல எனக்கு முன்னாடி நீங்க பூதம் போலவும், உங்களுக்கு முன்னாடி நான் எறும்பு போலவும்னு, உருவங்கள் மாறி மாறித் தெரியும். அதிலேயே நாங்க முடியையும், மூளையைப் பிய்ச்சுக்கிட்டு டான்ஸ் பிராக்டிஸ் பண்ணினோம்.

ஏப்ரல் 18 அன்று ஷூட் செய்த இந்த கின்னஸ் சாதனை சிறப்பு நிகழ்ச்சியில, ‘மானாட மயிலாட’ சீஸன் 10 டீம், கின்னஸ் குழு முன்னிலையில் ஆடினாங்க. பார்க்க சுவாரஸ்யமா இருந்தாலும், அங்க பிழையில்லாம ஆடுறது மிகக் கடினம். குழுவினர், நிகழ்ச்சியின் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பா கவனிச்சிட்டே இருந்தாங்க. டீம்ல எல்லோரும் செம டென்ஷனா இருந்தாலும், டெடிக்கேஷனோட நிகழ்ச்சியை வெற்றிகரமா நடத்தி முடிக்க, கலைஞர் டிவி எம்.டி அமிர்தம் சார்கிட்ட, கின்னஸ் குழு எங்களோட உலக சாதனைக்கான சான்றிதழைக் கொடுத்தப்போ... பட்ட கஷ்டமெல்லாம் பறந்து போயிருச்சு!’’

- பரவசமாகிறார் மாஸ்டர்!

-வே.கிருஷ்ணவேணி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்