அடுத்தது அஜீத் படம்.. வதந்திக்கு நோ பீலிங்..! லட்சுமி மேனன் சிறப்பு பேட்டி | Next Ajith Movie...No Feelings For Rumours

வெளியிடப்பட்ட நேரம்: 11:29 (27/05/2015)

கடைசி தொடர்பு:12:09 (15/10/2015)

அடுத்தது அஜீத் படம்.. வதந்திக்கு நோ பீலிங்..! லட்சுமி மேனன் சிறப்பு பேட்டி

+2 வில் 72 சதவீதம் எடுத்த நடிகை லட்சுமி மேனனின் குஷியானப்பேட்டி!! 'கும்கி', 'சுந்தரப்பாண்டியன்', 'கொம்பன்' என பல தமிழ்படங்களில் கலக்கிய கேரள நடிகை லட்சுமி மேனன், சி.பி.எஸ்.ஸி +2 தேர்வு எழுதியிருந்தார். நேற்று திருவனந்தப்புரத்தில் ரிசல்ட்வெளியானது.. இதில் நடிகை லட்சுமி மேனன் 72 % தேர்ச்சிப்பெற்றுள்ளார். அவரைத் தொடர்புகொண்டு வாழ்த்துகள் சொல்லிப் பேசினோம்.

அப்போ நீங்க பெயில்னு வந்த செய்தியெல்லாம்?

'ரிசல்ட் வந்ததே நேத்துதாங்க (25.05.15) ரெண்டு வாரத்துக்கு முன்னாடியில இருந்தே நிறைய பத்திரிக்கைகள் லட்சுமி மேனன் பிளஸ் டூவில் ஃபெயில் என்றே எழுதியிருந்தாங்க. ரிசல்ட்டே வராம எப்படிங்க இவங்களா ஃபெயில்னு டிசைட் பண்ணிக்க முடியும். இன்னும் சிலப்பேர் லட்சுமி கணக்குப்பாடத்தில் ஃபெயில் என எழுதியிருக்காங்க... நான் எடுத்திருந்தது காமர்ஸ் குரூப்.. இதில் கணக்கு சப்ஜெக்டே கிடையாது..

இந்த வதந்திகளுக்கு உங்களோட ரியாக்ஷன்?

தேவையில்லாதப் புரளிகளுக்கெல்லாம் நாம எதுக்கு கவலைப்படணும்னு யோசிக்கிற டைப் நான். இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னாடி அம்மாக்கிட்ட இந்த இணையத்தள மற்றும் பத்திரிக்கை வதந்திகளைப்பத்தி சொல்லி வருத்தப்பட்டேன். அதோடு சரி... இதுல ஃபீல்பண்ணி என்ன ஆகப்போகுது?

உங்கள சுத்தி இருக்கிறவங்க என்ன சொன்னாங்க?

சினிமா, ஸ்கூல்னு ரொம்ப பிஸியாப்போயிட்டு இருந்தது என்னுடைய லைஃப்... இதுல படிப்புல முழுமையா கவனம் செலுத்த முடியலனுதான் சொல்லணும். இருந்தும் 72% எடுத்துட்டேன். வீட்ல இருக்கறவங்க ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. நேற்று மதியம் 1.30 க்கு ஸ்கூலுக்கு ரிசல்ட் வந்தது. ரொம்ப பதற்றம் எல்லாம் இல்ல.. இந்தவதந்திகள் எல்லாம் உண்மையாகிடக்கூடாதுனு மட்டும் நினைச்சுக்கிட்டேன். நான் நினைச்சமாதிரி பாஸூம் ஆகிட்டேன். ஸ்கூல்ல டீச்சர்ஸ்தான் 'வாட்ஸ் அப்ல என்ன இப்படி எல்லாம் நியூஸ்வருதுனு கேட்டாங்க. அதையெல்லாம் கண்டுக்காதீங்க மிஸ் என்று சொன்னேன். சில நாட்களுக்கு முன்னாடி அஜீத் சார் கூட நடிக்கிற படத்துக்கு ஷூட்டிங்க்கு சென்னை கீரின் பார்க் ஹோட்டல்ல தங்கியிருந்தேன். ஹோட்டல் காரங்க பலபேர் 'நீங்க ஃபெயில்னு சொல்றாங்களே..'னு கேட்டாங்க... 'அதெல்லாம் வதந்திங்க'னு சொன்னேன்.

அடுத்து என்ன படிக்கப்போறீங்க?

பி.ஏ. ஆங்கில இலக்கியம். பொதுவா எனக்கு ஃபிக்ஷன்ஸ் ரொம்ப பிடிக்கும். அதுமட்டுமில்லாம சினிமாவுக்காக நிறைய டைம் ஒதுக்கவேண்டியிருக்கு.. அதனாலயும் இந்த டிப்பார்ட்மெண்ட் செலக்ட் செய்திருக்கேன் என்றும் சொல்லலாம். கேரளாவுலயே இரண்டு மூன்று கல்லூரிகளை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

- வே. கிருஷ்ணவேணி மாரியப்பன்- 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்