வேந்தர் மூவிஸூக்கு ஒரு படம் நடிப்பதாக ரஜினி சொல்லவே இல்லை- திருப்பூர்சுப்பிரமணி பேட்டி . | Rajini lingaa distributors Protest! Says Thirupur Subramaniyam

வெளியிடப்பட்ட நேரம்: 11:58 (27/05/2015)

கடைசி தொடர்பு:13:03 (27/05/2015)

வேந்தர் மூவிஸூக்கு ஒரு படம் நடிப்பதாக ரஜினி சொல்லவே இல்லை- திருப்பூர்சுப்பிரமணி பேட்டி .

லிங்கா படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட ரஜினி தரப்பிலிருந்து பனிரெண்டரைகோடி கொடுக்கப்பட்டதென்றும் அதனால் அந்தச்சிக்கல் முடிவுக்கு வந்துவிட்டதென்றும் சொல்லப்பட்டது.

மே 26 ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த லிங்கா விநியோகஸ்தர்கள், சொன்னபடி பணம் வரவில்லை. ஐந்துகோடியே தொண்ணூறுஇலட்சம்தான் கொடுத்திருக்கிறார்கள். மீதி ஆறுகோடியே ஒருஇலட்சம் இதுவரை வந்து சேரவில்லை என்று சொன்னார்கள். அதோடு பனிரெண்டரைகோடி என்பதை ஒப்புக்கொண்டதற்குக் காரணமே, அடுத்து ரஜினி வேந்தர்மூவிஸூக்கு ஒருபடம் நடித்துத்தருவார் என்றும் அந்தப்படத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் இணைதயாரிப்பாளர்களாகிவிடுங்கள்.
அந்தப்படத்தில் கிடைக்கும் இலாபம் உங்களுக்கு முழுமையான நிவாரணமாக இருக்கும் என்று ரஜினி சார்பில் திருப்பூர்சுப்பிரமணி வாய்மொழியாகச் சொன்னதாகவும் தெரிவித்தார்கள். இதுபற்றி திருப்பூர் சுப்பிரமணியிடம் தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசியபோது, இது முற்றிலுமாக அவர் மறுக்கிறார்.

பனிரெண்டரைகோடியில் ஆறரைகோடியைக் கொடுக்கவில்லை என்று சொல்கிறார்களே?

எங்களுக்கு ராக்லைன்வெங்கடேஷிடமிருந்து ஆறுகோடிதான் வந்தது. அதைப் பிரித்துக்கொடுத்துவிட்டோம். மீதிப்பணம் வந்ததும் அதையும் பிரித்துக்கொடுத்துவிடுவோம்.

ராக்லைன்வெங்கடேஷ் மொத்தத்தொகையையும் கொடுத்துவிட்டார் என்றும் நீங்கள்தான் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தராமல் இருக்கிறீர்கள் என்று சிங்காரவேலன் சொல்கிறாரே?

அவர் பொய் சொல்கிறார். எங்களுக்கு வந்தது ஆறுகோடிதான் அதைக்கொடுத்துவிட்டோம். நீங்கள் வேண்டுமானால் ராக்லைன்வெங்கடேஷிடமே கேட்டுக்கொள்ளலாம்.

வேந்தர்மூவிஸூக்கு ரஜினி ஒருபடம் நடித்துத்தருவார் என்று நீங்கள் வாய்மொழி உத்தரவாதம் கொடுத்ததாகச் சொல்லுகிறார்களே?

ரஜினிசாரும் அப்படிச் சொல்லவில்லை, நானும் அப்படி ஒரு வாக்குறுதி அவர்களிடம் கொடுக்கவில்லை, மொத்தமாகப் பொய் சொல்லுகிறார்கள்.  இவ்வாறு திருப்பூர்சுப்பிரமணி சொல்கிறார். ஆக லிங்கா சிக்கல் தொடர்கிறது.

லிங்கா பட விநியோகஸ்தர்களின் செய்தியாளர் சந்திப்பு (26-05-2015) வீடியோ:

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close