விஜய், அஜித் யாரு பெஸ்ட்? - ரசிகர்கள் கேள்விகளுக்கு அருள்நிதி சுவாரஸ்ய பதில்கள்! | Vijay , Ajith who is best - Arulnidhi interesting answers for fan's questions

வெளியிடப்பட்ட நேரம்: 19:17 (27/05/2015)

கடைசி தொடர்பு:12:10 (15/10/2015)

விஜய், அஜித் யாரு பெஸ்ட்? - ரசிகர்கள் கேள்விகளுக்கு அருள்நிதி சுவாரஸ்ய பதில்கள்!

டிமான்டி காலனி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து சினிமா விகடன் டைம்பாஸ் ஃபன் டைம் நேரலையில் , இணைய ரசிகர்கள் பல கேள்விகளை தட்டிவிட அருள்நிதி மிக தெளிவான பதில்களை அளித்தார். அவற்றில் சில சுவாரஸ்ய கேள்விகளும் பதில்களும்,

எப்படி பேய் படத்துல நீங்க?

எனக்கு டைரக்டர் அஜய் கத சொல்லி முடிக்கிற வரைக்கும் அது பேய் படம்னே தெரியாது. ஆனா கதைய கேட்டோன பிடிச்சிடுச்சு. ஓகே சொல்லிட்டேன்.

உங்க டயட் என்ன? ஆரம்பத்துல கொஞ்சம் குண்டா இருந்தீங்க இப்போ இந்த படத்துல செம ஒல்லியா இருக்கீங்களே?

இந்த படத்துக்கு முன்னாடியே ’நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’ படம் முடிஞ்சிடுச்சு. அது போலீஸ் கதை’ங்கறதால டைரக்டர் கிருஷ்ணா நீங்க தொல தொலன்னு இருக்கீங்க கொஞ்சம் ஃபிட்டா வேணும்’னார் அதான், ஆனா டயட்லாம் பெரிசா ஏதும் கிடையாது. ‘மௌன குரு’ படத்துக்கு அப்பறம் ஜிம் போனேன், அத அப்படியே மெயிண்டெயின் பண்றேன்.

நேஷனல் அவார்டு எப்போ?

அது தெரியல, ஆனா டிமான்டி காலனி முடிஞ்சு அம்மா எனக்கு ஒரு மெஸேஜ் பண்ணினாங்க , ‘வெரி வெரி குட் அருள் குட்டி’ன்னு, அவங்களுக்கு போன் அவ்வளவா யூஸ் பண்ணத் தெரியாது , ஆனாலும் ஸ்பேஸ் விடாம அனுப்பியிருந்தாங்க, அது எல்லா அவார்ட விடவும் பெரிசு.

விஜய், அஜித், ரெண்டு பேர் படமும் ஒரே நேரத்துல வருது? ஒரு படத்துலதான் ஆனா நடிக்கணும், யார் படத்துல நடிப்பீங்க? ரெண்டு பேர்ல யாரு பெஸ்ட்?

விஜய், அஜித் ரெண்டு பேரையுமே பிடிக்கும், விஜய் இருக்கற டாப்புக்கு ரொம்பவே டவுன் டூ எர்த்தா அவ்ளோ பணிவு, பெர்சினலா அஜித்த ரொம்ப பிடிக்கும். ரெண்டு பேர் படமும் நடிக்கணும், அட விடுங்களேன், இப்பதான் எனக்கு கொஞ்சம் படம் நல்லா போகுது. நடிச்சா ரெண்டு பேர் கூடவும் நடிப்பேன். விஜய் சார் மாதிரி யாரும் டான்ஸ் ஆட முடியாது, அஜித் சார் தான் இண்டஸ்ட்ரியிலயே ஹேண்ட்ஸம். ரெண்டு பேருமே பெஸ்ட்.

நிதியமைச்சர் ஆகுற எண்ணத்தில தான் அருள்நிதி’ன்னு பெயர் வெச்சாங்களா?

எங்க வீட்ல எல்லாரோட பேரும் நிதி’ன்னுதான் முடியும். அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல.

அரசியலுக்கு வருவீங்களா?

தெரியலை, ஆனா இல்ல..

கலைஞர் வசனம், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பு, கிருத்திகா உதயநிதி இயக்கம்’னு ஒரு படம் அமைஞ்சா நடிப்பீங்களா?

வாய்ப்பிருந்தா நடிப்பேன்,அப்பவும் எனக்கு கத முக்கியம்.

சினிமாவுக்குள்ள வரலைன்னா ?

அப்பாவோட சேர்ந்து பிசினஸ் பண்ணியிருப்பேன்.

மணிரத்னம் படம் , ஷங்கர் படம் ஒரே நேரத்துல வந்தா யார் படத்துல நடிப்பீங்க?

அப்பவும் எந்த கத நல்லா இருக்கோ அந்த கதைல நடிப்பேன்.

பிடிச்ச ஹீரோயின் ? அனுஷ்கா

பெரிய பட்ஜெட் , பெரிய இயக்குநர் படத்தில எப்போ நடிப்பீங்க?

அப்பவும் கத எனக்கு பிடிக்கணும், ஆனா கத நல்லா இருந்தாலே அது சின்ன பட்ஜெட் படமாதானே இருக்கும்.டாப் 5 ஹீரோக்கள் தவிர மத்த எல்லாரோட படமும் கதையும் , ஸ்க்ரீன் ப்ளேவும் நல்லா இருந்தாதான் படம் ஓடுது.

’மௌனகுரு’ படம் இப்போது இந்தியில் ஹீரோயின் பின்புலத்தில் உருவாகி வருகிறதே .. அதை பற்றி உங்கள் கருத்து

ரொம்ப சந்தோஷமா இருக்கு, இந்த டிமான்டி காலனி பூஜைக்கு வந்தப்போ ஏ.ஆர்.முருகதாஸ் சார் சொன்னாரு. படம் வந்து 4 வருஷம் ஆச்சு இப்போ வரைக்கும் அந்த படத்த பத்தி எல்லாரும் பேசிகிட்டு இருக்காங்க ரொம்ப ஹேப்பி.

உங்க முதல் காதல் பத்தி சொல்லுங்களேன்?

முதல் காதலா? மூணுவாரத்துல கல்யாணம்’ங்க.இப்ப போயி முதல் காதல் பத்தி கேக்கறீங்களே

அரசியல், சினிமா பின்புலம் இதுலருந்து வந்த உங்களுக்கு அட்வான்டேஜ், டிஸ்அட்வான்டேஜ் என்ன?

எல்லாரும் நான் ஈஸியா சினிமாவுக்குள்ள வந்துட்டதா நினைக்கிறாங்க. நான் கஷ்டப்பட்டுதான் மேல வந்தேன். ஃபேமிலி ஃபேமிலி’ன்னு சொல்லுவாங்க. அப்படி ஒரு ஃபேமிலி பேக்ரவுண்டுல படம் பண்ணினா என்ன மாதிரி பெரிய பட்ஜெட் படம் யாருமே கொடுக்க முடியாது. அதெல்லாம் எதுவுமே இல்ல. எங்க போனாலும் பெரிய ஃபேமிலி அதான் மேல வந்துட்டே’ன்னு சொல்றாங்க. இது ஒரு டிஸ்அட்வான்டேஜ், ஆனா அந்த ஃபேமிலி பேக்ரவுண்ட்’னால ரீச் இருக்கு அது அட்வான்டேஜ்.

கிசு கிசுவே இல்லாத நீங்க உங்கள பத்தி நீங்களே ஒரு கிசு கிசுவை பரப்பி விடலாமே?

ஒரு நாலு வருஷம், கழிச்சு கல்யாணம்’னா பரப்பலாம், மூணு வாரத்துல கல்யாணம் நடக்கப்போகுது நீங்க பரப்பி விட்ராதீங்க.

மதுரை பாஷை எப்படிஇவ்ளோ நல்லா பேசுறீங்க?

எனக்கும், துரைக்கும் நிறைய மதுரை ஃப்ரண்ட்ஸ், அவங்க கூட பேசிப் பேசியே அவிய்ங்க, இவிய்ங்கன்னு பாஷை ஈஸியா வந்துடுச்சு, அதுமட்டும் இல்லாம முத படத்துல கத்துகிட்டது.

அடுத்தடுத்த படங்களுக்கும், கல்யாணத்திற்கும் வாழ்த்துகள் அருள்நிதி!  

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close