’கமல் சார் என் குரு’ ‘அஜித் சார் எனக்கு இன்ஸ்பிரேஷன்’ ’தெகிடி’ அசோக் செல்வன் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி! | ’Kamal My Teacher’ ’Ajith my Inspiration’ Thegidi Ashok Selvan's Exclusive Interview

வெளியிடப்பட்ட நேரம்: 06:06 (05/06/2015)

கடைசி தொடர்பு:12:10 (15/10/2015)

’கமல் சார் என் குரு’ ‘அஜித் சார் எனக்கு இன்ஸ்பிரேஷன்’ ’தெகிடி’ அசோக் செல்வன் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!

ரு கெத்து, நல்ல புள்ள லுக், பக்கத்து வீட்டு பையன் தோற்றம் இப்படி கோலிவுட்ல தனி இடம்பிடிச்சிருக்கும் ஹீரோ அசோக் செல்வன் கிட்ட ஒரு சிட் சேட் ,

உங்கள பத்தி சொல்லுங்களேன்!

படிச்சது விஸ்காம், லயோலா கலேஜ், அப்பறம் சினிமா மேல ஒரு ஈர்ப்பு. ஆஃபீஸ் ஆஃபீஸா அலைஞ்சேன். போட்டோ குடுத்துட்டு சுத்திகிட்டு இருந்தேன். நடிக்க எப்படி அப்ளை பண்ணனும்’ன்னு கூட தெரியாது. இங்கதான் எந்த ஒரு முறையுமே இல்லையே. வீட்ல ரொம்ப திட்டினாங்க. மிடில் க்ளாஸ் ஃபேமிலி என்ன ரியாக்ட் பண்ணனுமோ அதையே பண்ணினாங்க.

உங்க முதல் சான்ஸ்..

அத சொல்லணுமா? சரி சொல்றேன். ஏ.ஆர்.முருகதாஸ் சார் ஒரு படத்துக்காக ஆள் எடுக்கறாரு’ன்னு கேள்விபட்டோன போனேன். 15பேர் ஒரு ரூம் குள்ள நிக்க வெச்சாங்க. ஏ.ஆர்.முருகதாஸ் சாரும், ரவி கே சந்திரன் சாரும் அப்படியே ஸ்கேன் பண்ணி ஒரு பார்வை விட்டாங்க. அஸிஸ்டெண்ட் டைரக்டர் கிட்ட ஏதோ சொல்லிட்டு போனாங்க. அப்பறம் எல்லாரும் கிளம்புங்க. தம்பி நீங்க மட்டும் இருங்க’ன்னு சொன்னாங்க ஒரு முக்கியமான ரோல் இருக்கு’ன்னு சொன்னாரு. ஒரு நாள் ஷூட் ஹீரோயின் ஃப்ரண்ட். நடிச்சுட்டு வந்தேன் அதுக்கு அப்பறம் கூப்பிடவே இல்ல. சரின்னு என் ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் திரட்டிட்டு போயி உக்காந்தா செம பல்பு சீன் வரவே இல்லை. என்ன என்னோட ஃப்ரண்ட்ஸ் கொஞ்சம் நல்லவங்க, விட்றா மச்சான் , அடுத்தடுத்து பாக்கலாம்’ன்னு ஆறுதல் சொன்னாங்க. ஓட்டல.கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. அதையே ஸ்போர்ட்டிவ்வா எடுத்துக்கிட்டேன்.

உங்க வீட்ல , முக்கியமா அப்பா என்ன சொன்னாரு..

சின்ன வயசுலருந்து அப்பப்போ ஒரு மைண்ட் செட் வரும், திடீர்னு போலீஸ் ஆகணும்’ன்னு தோணும், அப்பறம் அனிமேஷன். அப்ப கூட நடிக்கணும்’ன்னு யோசிக்கவே இல்ல. சினிமா’ன்னா பசங்களோட போகணும், என்ஜாய் பண்ணனும், ஜஸ்ட் எண்டெர்டெயிண்ட்மெண்ட் அவ்ளோதான். பருத்தி வீரன் படத்துக்கு அப்பறம் தான் சினிமா மேல ஒரு மரியாதை வந்துச்சு. அப்பா பயங்கர திட்டு, எத்தனை பேரு சினிமாவுல சாதிக்கிறாங்க, ஏன் உனக்கு இந்த வேலைன்னு கேட்டாரு. சினிமாவுல சாதிச்சவங்க லிஸ்ட்டெல்லாம் சொல்லி, சினிமா டயலாக்கெல்லாம் விட்டு ஒரு ஆறு மாசம் டைம் கேட்டேன். ஆறு மாசம்தான் டைம்னு கறாரா சொன்னாரு . அப்பறம் அதையே இழுத்து ஒரு 4 வருஷம் ஆக்கிட்டேன். ஆனா இப்போ வீட்ல ஹேப்பி

.

’இனிது இனிது’ படத்தோட ஆடிஷனுக்கு போனீங்களே!

அத ஏன் கேக்கறீங்க, நான் சினிமாவுல சான்ஸ் கேட்டு சுத்திகிட்டு இருந்த டைம். அப்போ கூப்டு கேட்டாங்க. அப்போ ப்ரொஃபஷனல் போட்டோ கேட்டாங்க அது தெரியாம பாஸ் போர்ட் சைஸ் போட்டோ குடுத்தேன். ஸ்டூடியோவுல எடுக்கணும்’ன்னு சொன்னாங்க. அப்பறம் ஒரு சீன் நடிச்சேன். எனக்கு பிடிச்சுருந்துச்சு அவங்களுக்கு என்னமோ பிடிக்கலை போல.

’பில்லா 2’ படத்துல உங்க போட்டொ மட்டும் யூஸ் பண்ணியிருந்தாங்களே!

ஏற்கனவே ஒரு படத்துல நடிச்சேன்’னு சொல்லி செம பல்பு வாங்கினதுல சுத்திகிட்டு இருந்தேன். அப்போ உங்க ஃபோட்டோ யூஸ் பண்ணனும்’னு கேட்டாங்க. அப்போ ஃபோட்டோ என் கிட்ட இல்லன்னு சொன்னேன். அஜித் படம்’னு சொன்னாங்க உடனே ஓகே சொல்லிட்டேன். அந்த படத்துல என் ஃப்ரண்ட் வொர்க் பண்ணியிருந்தான். அவன் தான் உன் ஃபோட்டோ சூப்பரா வந்துருக்கு’னு சொன்னான். அதுவரைக்கும் யார்கிட்டயும் வாயே திறக்கல. அப்பவும் டார்கன் பண்ணியிருப்பாங்க. என்னைய தெரிஞ்சவங்க மட்டும்தான் அத கண்டுபிடிச்சாங்க உங்கள மாதிரி.

பீட்சா 2 – தி வில்லா படத்துக்காக ரெண்டு வாரத்துல வெயிட் போட்டு, முடியெல்லாம் வளர்த்தீங்களாம்மே? எப்படி?

எப்பவுமே தாடியோட தான் சுத்திகிட்டு இருப்பேன். முடியும் அப்படிதான். திடீர்னு கேட்டா நடிக்க யூஸ் ஆகுமே.தாடி கேட்டா அப்படியே போயிடலாம்ல.வெயிட் ஈஸியா போடலாம். எனக்கு கொஞ்சம் டயட் லூஸ் பண்ணாலே போதும் உடனே வெயிட் போடும்.

சரி இப்போ உங்க அடுத்தடுத்த படங்கள் பத்தி பேசலாம், ‘சவாலே சமாளி’ எப்படிப்பட்ட படம்?

தெகிடி, பீட்சா 2 அதெல்லாம் ஒரு எக்ஸ்பரிமெண்டல் படங்கள். கொஞ்சம் புத்திசாலித்தனமான படங்கள்னு கூட சொல்லலாம். ஆனா ‘சவாலே சமாளி’ எல்லாருக்குமான படம் ஜாலியான படம். கண்டிப்பா படம் பார்த்தா என்ஜாய்மெண்ட் இருக்கும். கமர்ஷியல் படம். முக்கியமா காமெடி படம். டிவி சேனல்ல பின்னாடி என்ன நடக்குதுன்னு சொல்லப்போற படம் தான் ‘சவாலே சமாளி’. நான் ஒரு சேனல்ல வேலை செய்யற இளைஞனா நடிச்சிருக்கேன்.

ஏன் இப்படி ஒரு சவாலான தலைப்பு, அந்த படமே பயங்கற ஹிட்டே?

அதனாலதான் வெச்சோம். பாசிட்டிவ்வா இருக்கும். படத்துல நெறையா சவாலான விஷயங்கள் இருக்கு. எனக்கும் ,ஜகனுக்கும் தான் ரொம்ப முக்கியமான பாத்திரங்கள். ஹிட்டான தலைப்பு வைக்க நான் ஏன் பயப்படனும். அதெல்லாம் பெரிய ஹீரோஸ்க்கு தான் பிரச்னை வரும், நான் இப்போதான எண்ட்ரீ ஆகியிருக்கேன்.

அதென்ன தலைப்பு ’144’? என்ன மாதிரியான கதை?

நான் இல்லீகல் ரேஸர். படம் முழுக்க மதுரைதான். நான், மிர்ச்சி சிவா , ராம் நடிச்சிருக்கோம். ஜாலியான அதே சமயம் படம் ஆரம்பத்துல இருந்து முடியற வரைக்கும் ஸ்பீடா போகும், படம் நல்லா வந்துருக்கு.

கூட்டத்தில் ஒருத்தன்? அநியாயத்தை தட்டி கேக்கற ஹீரோ சப்ஜெக்ட்டா?

அப்படி இல்லை. எப்பவுமே ஒரு க்ளாஸ்ல ஃபர்ஸ்ட் பெஞ்ச் பசங்க பத்தியோ அல்லது, லாஸ்ட் பெஞ்ச் பசங்க பத்தியோ அதிகம் பேசுவோம். நடுவுல இருக்கறவன் பத்தி பேச மாட்டோம். அப்படி ஆவரேஜான ஒரு மனுஷனோட கதைதான் ’கூட்டத்தில் ஒருத்தன்’. படம் ஷூட்டிங் முடியப் போகுது.

ஒரு ஃபுல் ரொமாண்டிக் படம் பண்ணலாமே? அசோக் செல்வன்னா பொண்ணுங்க கிட்ட ஒரு ஈர்ப்பு இருக்கே?

ஹெல்லோ கலாய்க்கறீங்களா, நீங்க சொல்லி தான் நான் கேள்விப் படறேன். நல்லவேளை நீங்களாவது சொன்னீங்களே. ஒருவேளை நான் நடிச்ச ரோல் அப்பறம் ’தெகிடி’ படத்தோட கேரக்டர் ஒரு கேரியிங்கான கேரக்டர். அதுவும் முக்கியமா பொண்ணுங்களுக்கு பிடிக்கிற கேரக்டர். ஒருவேளை அதனாலையோ. சரி எதுக்கு ரிசர்ச் பண்ணிகிட்டு , அத மெயிண்டெயின் பண்ணிக்கலாம். நீங்க கேட்ட மாதிரியே முழுக்க ரோமாண்டிக் படமா என்னோட இன்னொரு படம் ‘பிறை தேடிய நாட்கள்’ உருவாகிட்டு இருக்கு. பெர்சனலா எனக்கு ரொம்ப பிடிச்ச கதையும் கூட. அடுத்த மாசம் ஷூட்டிங் ஸ்டார்ட்.

உங்க ரோல் மாடல் யாரு?

கமல் சார ரொம்ப பிடிக்கும். குரு’ன்னு கூட சொல்லலாம். என்னோட இன்ஸ்பிரேஷன் அஜித் சார். ரொம்ப கஷ்டத்துல இருக்கும் போது அஜித் சார தான் யோசிப்பேன். எந்தவொரு பேக்ரவுண்டும் இல்லாம வந்தவரு அஜித் சார். அதனால் பெர்சனலா அவரையும் பிடிக்கும்.

அதென்னா உங்க படங்கள்ல எல்லாம் நீங்க மட்டும் ஒரு கெத்தா, நல்ல புள்ளையா வறீங்க? அடுத்த படங்கள்ல மாறுமா?

அதுவா அமையுது. அடுத்தடுத்த படங்களையும் இதே நல்ல புள்ள , ஜெனியூன் ரோல்கள் தான். ஓரளவு தான் ’144’ படத்துல இறங்கி நடிச்சேன். அதுவும் கூட அவ்வளவா இல்லை. இன்னும் காலம் இருக்கு. ஹெவி ரோல்ஸ் பண்ற மெச்சூரிட்டிய வளர்த்துக்கணும்.

உங்க பலம் , பலவீனம்?

பலம் எனக்கு எதாவது வேணும்னா முழு எஃபோர்ட் எடுப்பேன். எண்ட் வரைக்கும் போவேன். பலவீனம் கொஞ்சம் சோம்பேறி. அதுக்காக ஷூட்டிங்குக்கு லேட்டால்லா போக மாட்டேன். அப்பறம் எல்லாரையும் நம்பிடுவேன்.

ஏ.ஆர்.முருகதாஸ் கிட்ட அஸிஸ்டெண்டாதான் போகணும்னு வாந்தீங்க, எப்போ டைரக்டர் அசோக் செல்வனா அவதாரம்?முதல் படம் யாரை வெச்சு எடுப்பீங்க?

இன்னும் காலம் இருக்கு. அப்படி முதல் படம் பண்ணும் போது கமல் சார் வெச்சு எடுக்கணும். அதுக்கும் பக்குவம் வேணும். அதனால என்னை வெச்சே நான் எடுப்பேன். கண்டிப்பா எடுப்பேன். ஷார்ட் ஃபிலிம்ஸ்லாம் எடுத்துருக்கேன். அவார்டெல்லாம் கூட கிடைச்சிருக்கு. இப்போதான 25 வயசு ஆகுது. இன்னும் நிறைய கத்துக்கணும்.

வழக்கம் போல நல்ல புள்ளையாக ஷார்ட் ரெடி நான் போகட்டுமா என கேட்டுக்கொண்டே விடைபெற்றார். ஆல் தி பெஸ்ட்.

- ஷாலினி நியூட்டன் - 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்