ஹன்சிகாவைப் பற்றிப் பேசும்போது புத்துணர்ச்சி வருவது ஏன்? ஜெயம்ரவி விளக்கம்

ரோமியோஜூலியட் படம் வெளியாகி நான்குநாட்கள்தாம் அகிறது என்றாலும் படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு காரணமாக, இது ஹிட் என்பது உறுதியாகவிட்டது சூப்பர்ஹிட் ஆகும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று சொன்னார் படத்தை வெளியிட்ட சிவகுமார். அப்போது உடனிருந்த ஜெயம்ரவி பகிர்ந்துகொண்டவை.

படம் வெற்றி என்று சொல்லப்படுவது குறித்து..?

இந்தப்படத்துக்கு ரசிகர்கள் கொடுக்கும் அமோக ஆதரவு மகிழ்ச்சியளிக்கிறது. அதோடு விமர்சனங்களும் மிகவும் ஆதரவாக வந்துகொண்டிருக்கின்றன. பத்திரைககைளும் ரசிகர்களும்தாம் எப்போதும் என்னுடைய பலம் என்பது இப்போதும் நிருபணமாகியிருக்கிறது.

உங்கள் படம் வெளியாகி ஒராண்டாகிவிட்டதே.?

ஒரு பெரியஹிட் கொடுக்கவேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு நான் மிகவும் சிரமப்பட்டேன், ஒருநாள்கூட ஓய்வெடுக்காமல் உழைத்திருக்கிறேன், மாதம் ஒரு படம் வெளியாகறி அளவு வேலை செய்திருக்கிறேன். இப்போது இந்தப்பட வெற்றி எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்தப்பட இயக்குநர் இலட்சுமணன் பற்றி..?

இந்தப்படத்தை இயக்கிய லட்சுமணன் என்னுடைய சகோதரர் மாதிரி, மிகவும் திறமைசாலி, என்மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருக்கிறார், முதல்படத்திலேறே வெற்றியும் பெற்றிருக்கிறார், என் மூலமாக இப்படி ஒரு இயக்குநர் திரையுலகுக்குக் கிடைத்திருக்கிறார் என்பதிலும் சந்தோசம்.

இந்தப்படத்தில் காதலியையே எனக்கு ஒரு பிகர் செட் பண்ணிக்கொடு என்று கேட்கிற வேடத்தில் நடித்திருக்கிறீர்கள், இது சரியா?


இதன்மூலம் ஒரு புதியவிசயத்தைத் தொடங்கி வைத்திருக்கிறோம் இளைஞர்கள் எல்லாம் இதைப் பின்பற்றினால் சந்தோசம்தான்.

ஹன்சிகா பற்றி அதிகமாகப் புகழ்ந்து பேசுகிறீர்களே?

இந்தப்படத்தில் ஹன்சிகா என்னைவிட நன்றாக நடித்திருக்கிறார். ஹன்சிகாவைப் பற்றிப்பேசும்போது புத்துணர்ச்சியோடு இருப்பதாகச் சொல்கிறார்கள். பொதுவாக எந்தப்படத்தின் விளம்பரத்திற்காகப் பேசுகிறோமோ அந்தப்பட நாயகியைப் பற்றிப் புகழ்ந்து பேசுவது இயல்புதான்.

பாடல்களுக்கும் வரவேற்பு கிடைத்திருப்பது குறித்து..?

இந்தப்படத்தின் பாடல்களுக்குப் பெரியவரவேற்பு கிடைத்திருக்கிறது, எங்கு போனாலும் இந்தப்படத்தின் பாடலைப் பாடச்சொல்லிக் «க்டகிறார்கள், இதற்காக இமான் சாருக்குத்தான் மிகவும் நன்றி சொல்லவேண்டும்.

உங்களுடைய அடுத்த படங்கள் பற்றி..?

அண்ணன் ஜெயம்ராஜா இயக்கத்தில் நானும் நயன்தாராவும் நடிக்கும் தனியொருவன் படம் தயாராகிக்கொண்டிருக்கிறது, பூலோகம் தயாராகியிருக்கிறது, சுராஜ் இயக்கத்தில் த்ரிஷா, அஞ்சலி ஆகியோரோடு நான் நடித்திருக்கும் அப்பாடக்கர் தயாராகிக்கொண்டிருக்கிறது. இவற்றையடுத்து சக்திராஜன் இயக்கத்தில் மைக்கேல்ராயப்பன் தயாரிப்பில் ஒருபடம் உருவாகவிருக்கிறது.

பூலோகம் படம் வெளியாவது தாமதமாகிறதே?

படம் நடித்துக்கொடுப்பதோடு என் வேலை முடிந்துவிடுகிறது. அதன் வெளியீடு பற்றி தயாரிப்பாளர்தாம் முடிவு செய்யவேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!