Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'இந்தியாவை மிஸ் பண்றதா தோணுச்சு...!' - டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சவிதா

சிறு இடைவெளிக்குப்பின் ஜோதிகா நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் '36 வயதினிலே'. இதில் ஜோதிகாவிற்கு குரல் கொடுத்திருப்பவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சவிதா.

'துள்ளாத மனமும் துள்ளும்', 'பிரியமானவளே', 'குஷி', 'பஞ்ச தந்திரம்', 'தூள்', 'சில்லுனு ஒரு காதல்', 'சந்திரமுகி', 'தெய்வ திருமகள்',' வேலையில்லா பட்டதாரி' படங்களின் கதாநாயகிகளுக்கு குரல் இரவல் தந்து, தமிழக ரசிகர்களை தன் குரலால் கவர்ந்தவர் சவிதா.

அவருடன் ஒருவர் சந்திப்பு...

உங்களைப்பற்றி?

சொந்த ஊர் பாண்டிச்சேரி. ஆனால், படிச்சதெல்லாம் சென்னையில்தான். எத்திராஜ் கல்லூரியில என்னோட யூ.ஜி படிப்பை முடிச்சேன். வீட்ல படிப்புத்தான் முக்கியம்னு சொன்னதால, வீக் என்ட்ல மட்டும் டப்பிங்ல இருப்பேன். அதுக்கப்புறம், அண்ணாமலை யுனிவர்சிடியில எம்.பி.ஏ முடிச்சிட்டு, முழுக்க முழுக்க டப்பிங்கில் இறங்கிட்டேன். சங்கர் சாரோட 'ஜீன்ஸ்' படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் பேசி நான் பெரிய அளவுல பாப்புலர் ஆனதும் இந்த படத்துலதான். 'வாலி' படம் மூலமா சிம்ரனுக்கு வாய்ஸ் கொடுத்து, இன்னும்  பல பேரோட பாராட்டை வாங்கினேன். 'ஜீன்ஸ்', 'வாலி' படம் பண்ணும்போது கல்லூரி படிச்சிட்டு இருந்தேன்.

சினிமா வாய்ப்பு எப்படி கிடைச்சது உங்களுக்கு?

கர்நாடக பாடகி பி.எஸ். பத்மாவதி என்னோட பாட்டி. அவங்களோட ஒருமுறை கச்சேரிக்கு போயிருந்தேன். கச்சேரிக்கு வந்திருந்த ஒருத்தர் அவங்க படத்துக்கு டப்பிங் கொடுக்க செலக்சனுக்கு கூப்பிட்டிருந்தாங்க. அப்போ நான் 3 - ம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். அங்கதான் என்னைப்பார்த்துட்டு படத்தில் வாய்ஸ் கொடுப்பதற்கான விருப்பத்தைக்கேட்டாங்க. அப்படித்தான் எனக்கு  'மந்திரப்புன்னகை' படத்துல குழந்தை நட்சத்திர வாய்ஸ் ஆர்ட்டிஸ்டுக்கான வாய்ப்பு கிடைச்சது.

வாங்கிய விருதுகள் ?

அதற்குப்பிறகு, 'காதல் பரிசு'  படத்துலயும் குழந்தை நட்சத்திர வாய்ஸ்க்கான வாய்ப்பு கிடைச்சது.  மூன்று முறை ஆந்திரப்பிரதேஷ் நந்தி அவார்டு, மூன்று தமிழ்நாடு அரசு விருதுனு நிறைய வாங்கியிருக்கேன். சந்திரமுகி, பிரியமானவளே, பல படங்கள் என்னால மறக்கமுடியாத படங்கள்.  பலதடவைப் பார்த்த படங்கள்ள 'சந்தோஷ் சுப்ரமணியம்' மற்றும் மணிரத்தினம் படம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கனடா படங்களிலும், பஞ்சாபி, குஜராத்தி போன்ற பிற மொழி டாக்குமெண்ட் படங்களிலும் பேசியிருக்கேன்.

உங்கள் குடும்பம் பற்றி?

என்னுடையது காதல் திருமணம். வீட்ல பிரச்னைகள் இருக்கத்தான் செய்தது. இப்போ நாங்க கூட்டுக்குடும்பமா இருக்கோம். என் கணவர் பிசினஸ் பண்றார். எங்களுக்கு ஸ்ரீங்கா, ஷேனானு இரண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க.

சினிமாவில் உங்கள் பாடல்?

நிறைய சினிமா பாடல்களில் இடையிடையில் பேசியிருக்கிறேன். 'என் சுவாசக்காற்றே' படத்தில் தீண்டாய் மெய் தீண்டாய்..'' பாடலில்

இடையிடையே கன்றும் உண்ணாது : கலத்தினும் படாது :
நல்ஆன் தீம்பால் நிலத்து உக்கா அங்கு:
எனக்கும் ஆகாது : என் ஐ க்கும் உதவாது :
பசலை உணீ இயர் வேண்டும் :
 திதலை  அல்குல் என் மாமைக்  கவினே' என்கிற வார்த்தையைப் பேசியிருப்பேன்.

'மஜா' படத்தில்' சீச்சீ சீச்சீ சீச்சீ ...'என்னப்பழக்கமிது சின்னப்புள்ளப்போல...' என்ற பாடலிலும் பேசியிருக் கிறேன்.

உங்களுக்குப் பிடித்த நடிகர்கள்?

தெலுங்கில் ராம்சரண், சாய் கபூர் பிடிக்கும். தமிழில் மாதவன், 'மெளனராகம்' கார்த்திக், 'இதயத்தை திருடாதே' நாகார்ஜூனா பிடிக்கும்.

டப்பிங் பேசுவதில் யாரிடமாவது திட்டுவாங்கிய அனுபவம்?

இதுவரைக்கும் என்ன வேஸ்ட்னு யாரும் திட்டினது இல்ல... என் கணவர் என்னை, 'நீ வீட்ல புலி வெளியில எலி என கிண்டலடிப்பார்.

வட்டார மொழிகளை வாய்சில் கொண்டுவர மெனக்கெடவேண்டுமே. அப்படி எப்போதாவது சிரமப்பட்டதுண்டா?

'டும் டும் டும்' , 'அழகி', 'பிதாமகன்'  போன்ற பல படங்கள்ள வட்டார மொழி பேசியிருக்கேன். 'நந்தா' படத்தில் இலங்கை மட்டக்களப்பு பாஷை பேசினேன். ரொம்ப கஷ்டமா இருந்தது. இதுக்கென ஒரு மொழி டிரெயினரை அழைச்சிட்டு வந்தாங்க.  பொதுவா, ஷூட்டிங்கில் ஹீரோ யின் சாதாரண தமிழில்தான் பேசியிருப்பாங்க. அந்த லிப் மூவ்மெண்ட்டுக்குத் தகுந்த மாதிரி அவங்க பேசி முடிக்கிற அந்த நேரத்துக்குள் வார்த்தையை பேசி முடிச்சாகணும். இதுக்கு டிரெயினிங் எடுத்துட்டுத்தான் பேசவே ஆரம்பிப்பேன். அதெல்லாம் ஒரு நல்ல எக்ஸ்பீரியன்ஸ்.'

நல்லா பேசுறீங்க... சமையல்ல எப்படி?

மாங்காய் சாம்பார் நல்லா சமைக்க வரும். சாப்பிட ரொம்ப பிடிக்கும்.

வெளிநாட்டு பயணம் பற்றி?

பயணம் என்கிறதைவிட 'ஸ்டே'னே சொல்லலாம். சில வருஷத்துக்கு முன்னாடி கிட்டத்தட்ட  மூணு வருஷம் அமெரிக்காவுலதான் இருந்தேன். இந்தியாவை மிஸ் பண்றதா தோணுச்சு, அப்புறம்  பேக் டூ இந்தியா. எனக்கு இந்த சொர்க்கம்தான் பிடிச்சிருக்கு. ஐ லவ் இந்தியா!' ஸ்மைலோடு முடிக்கும் சவிதாவுக்கு நாட்டியம், ஓவியம், என இன்னும் சில விஷயங்களிலும் திறமையானவராக இருக்கிறார்.

- வே. கிருஷ்ணவேணி மாரியப்பன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்