”செல்வராகவனுக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை! உயிர் இருக்கும் வரை எங்கள் நட்பிருக்கும்” கோலாபாஸ்கர் பேட்டி! | No problem with selvaragavan! We are always Close. says kolabaskar

வெளியிடப்பட்ட நேரம்: 22:31 (11/07/2015)

கடைசி தொடர்பு:22:42 (11/07/2015)

”செல்வராகவனுக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை! உயிர் இருக்கும் வரை எங்கள் நட்பிருக்கும்” கோலாபாஸ்கர் பேட்டி!

இயக்குநர் செல்வராகவனின் படங்களை மெருகேற்றி, அவரின் வெற்றிக்கு காரணமான கலைஞர்களில் ஒருவர் கோலா பாஸ்கர். செல்வராகவனின் படங்கள் இவரின் எடிட்டிங் மேஜைக்கு வந்து செல்லும் போது தான் அதன் முழு வடிவமும் பிறக்கும். 7ஜி ரெயின்போ காலனி படத்தில் தொடங்கி இன்று வரைக்கும் செல்வராகவனின் அனைத்துப் படங்களுக்கும் படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் கோலாபாஸ்கர்.

தற்பொழுது இவருக்கும் செல்வராகவனுக்கும் இடையே பிரச்னைகள் என்று பல வதந்திகள் பரவிவருகின்றன. செல்வராகனின் மேல் இவர் கவலையில் இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இவை அனைத்தையும் முற்றிலும் மறுக்கிறார் கோலா பாஸ்கர். அதுமட்டுமில்லாமல் இவர் தயாரிப்பில், கீதா செல்வராகவன் இயக்கத்தில் கோலா பாஸ்கரின் மகன் நடிப்பில் தயாராகிவரும் “மாலைநேரத்து மயக்கம்” படப்பிடிப்பு நின்றுவிட்டதாகவும் தகவல் வெளிவர, இவற்றையெல்லாம் பொய்யாக்கும் விதமாக மாலைநேரத்து மயக்கம் படப்பிடிப்பு தளத்திலேயே கோலாபாஸ்கரைப் பிடித்துப் பேசினோம்.

உங்களுக்கும் செல்வராகவனுக்கு என்னதான் பிரச்னை?

என்னுடைய தயாரிப்பில், செல்வராகவனின் மனைவி கீதா செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் மாலை நேரத்து மயக்கம். இப்படத்தை கீதா செல்வராகவன் சரிவர இயக்காததாகவும் ஷூட்டிங் நின்று விட்டதாகவும் பலர் செய்தியாக்கி வருகிறார்கள். ஆனால் அவை அனைத்துமே முற்றிலும் தவறான கருத்து. இப்போ கூட படத்திற்கான வேலைகளிலும், படப்பிடிப்பிலும் பிஸியாகத்தான் இருக்கிறோம்.

நீங்க தயாரிக்கும் படத்துக்கு பிரச்னை என்கிறார்களே? 

நட்புக்காக, நான் தயாரிக்கும் படத்துக்கு அவர் உதவி செய்வதில் என்ன பிரச்னை வரப்போகிறது? அவருக்கும் எனக்கும் எந்த வித பிரச்னையும் வரப்போவதில்லை . அவர் எனக்கு துரோகம் செய்தால் வரலாம். அவர் எனக்கு எந்த துரோகமும் செய்யப்போவதும் இல்லை. நானும் செல்வராகவனும் தோல்மேல் கை போட்டு சுற்றித் திரிபவர்கள். 15 வருடமாக என்னுடைய ஒரே நண்பர் செல்வராகவன் மட்டும் தான்.  அப்படிப்பட்ட நட்பு எப்படி சார் பிரியும். இவ்வளவு வருட நட்பில் கீரளா என்று எழுதுகிறார்கள். அவர் எதுக்கும் வருத்தப்படவில்லை. ஆனால் நான் ரொம்ப ஃபீல் பண்றேன். 100 வருடமானாலும் சேர்ந்துதான் இருப்போம். எந்த பிளவு வராது. 

மாலைநேரத்து மயக்கம் படப்பிடிப்பு எப்படி போகிறது?


இப்போ கூட படப்பிடிப்பில் தான் இருக்கிறோம். போஸ்ட் புரடெக்‌ஷன் வேலையிலும் போய்க்கொண்டிருக்கிறது. படம் நல்லா வந்துட்டு இருக்கு. விரையில் திரையில் என் மகனை பார்ப்பீங்க.

நீங்க தயாரிப்பில் இறங்கிவிட்டீர்கள். அப்போ உங்க படத்துக்கு யாரு எடிட்டிங்?

நான் மட்டும் வளர்ந்தால் போதுமா? அதான் என்னோட உதவியாளரைத் தான் என்னுடைய படத்துக்கும் சரி, செல்வாவின் அடுத்தப் படத்துக்கும் சரி எடிட்டராக்கியிருக்கிறேன். என்னுடைய அசிஸ்டெண்ட நான் தூக்கிவிடனும் என்று நினைப்பதில் எந்த தவறும் இல்லையே.

வதந்திகள் பற்றி என்ன சொல்றீங்க?


நானும் செல்வா சாரும் முடிவெடுக்காமல் எங்கள் படத்தில் எதுவும் நடக்காது. என் குடும்பம் உயிருடன் இருக்கும் வரைக்கும் அவரை மறக்க முடியாது. ஏனென்றால் அவர் என் மகனுக்கு வாழ்க்கை கொடுக்கிறார் என்னை தயாரிப்பாளராக மாற்றியிருக்கிறார். என்னோடைய குடும்பத்தின் நல்லது கெட்டதை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார். அப்படிப்பட்டவரை நான் ஏன் தப்பா ஃபீல் பண்ணனும். 

எங்க நட்பை மட்டும் யாராலும் பிரிக்க முடியாது. ஒரு உயிர் நண்பர் என்னுடன் பேசாம இருந்தால் எதிரிகளின் 100 குண்டுகள் என் மேல் பாய்வதுக்குச் சமம்.  ஆனா என் செல்வா என்னை விட்டுக் கொடுக்கவில்லை செய்தி தப்பா வந்தா என்ன, எல்லாம் வதந்தினு எனக்குத் தெரியும். விட்டுத்தள்ளுங்கனு சொல்லி தோள் மேல் கைபோட்டு கூட்டிச் சென்றவர். எனக்குத்தான் வருத்தமாகிவிட்டது. 

என்னுடைய விஷயத்தில் மட்டும் அதிகமா யோசிச்சி செய்யக்கூடியவர் இவர். நாங்க ஏன் இப்படியெல்லாம் செய்யப்போகிறோம். வாழ்க்கை முடியுற வரைக்கும் நாங்க நட்பாத்தான் இருப்போம். உயிர் இருக்கும் வரைக்கும் எங்கள் நட்பிருக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்