Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமன்னா கேரக்டரில் கவர்ச்சியையும் காமத்தையும் கலந்தது எதனால்? - ராஜமௌலியிடம் சிறப்பு பேட்டி!

300 கோடிகளைக் கடந்தும் வசூலில் குறையாத மெகா ஹிட் 'பாகுபலி' படத்தை இயக்கிய ராஜமௌலியிடம் சில கேள்விகள்...

பாகுபலி படம் எதிர்பார்க்க இயலாத அளவிற்கு மக்களைக் கவர்ந்துள்ளது. அதிலும் தென்னிந்தியாவின் டப்பிங் படங்கள் அவ்வளவாக எடுபடாத வடக்குப் பகுதி மக்களையும் கவர்ந்துள்ளது உங்களுக்கு ஆச்சர்யம் கொடுத்திருக்குமே?

இல்லை... ஏனெனில் எனது கொள்கைப்படி, ஒரு கதை, அறிவை மீறிய மனித உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டிருக்குமெனில் அது மதம், மொழிகளைக் கடந்து ஜெயிக்கும். அந்த வகையில் இந்த வெற்றி நடந்திருப்பது மகிழ்ச்சியே.

பாகுபலி இதுவரை இல்லாத அளவிற்கு வெற்றியைக் கொடுத்துள்ளது. இதன் ரகசியமாக நீங்கள் எதைக் காண்கிறீர்கள்?

இதயப்பூர்வமான கதையும், சக்திவாய்ந்த கேரக்டர்களும் தான். மேலும் தயாரிப்பளர் ஷோபு, அனைத்துத் தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும்,  இந்தக் கதை கண்டிப்பாக ஜெயிக்கும் என நம்பியதும் மிக முக்கிய காரணம்.

இந்தப் படத்தில் இதுவரை சினிமாவில் காணாத அளவிற்கு எபெக்டுகள் உள்ளன? எடிட்டிங் டேபிளில் எந்த அளவிற்கு அதனைச் செதுக்கினீர்கள்?

அவை எழுதும் டேபிளிலேயே உருவாக்கப்பட்டவை. ஒருவருட காலம் காட்சியமைப்பு குறித்து திட்டமிடப்பட்டது. இதை வைத்தே படத்தின் நிறைவு எப்படி இருக்கும் என்பதையும் எங்களால் முன்பே அறிய முடிந்தது.

சொர்க்கம் போன்ற இடங்களை எப்படி உருவாக்க முடிந்தது?

மீண்டும் சொல்கிறேன் அனைத்தும் கடின உழைப்பால் மட்டுமே முடிந்தது.

தமன்னாவை ஒரு போராளியாக காண்பித்தீர்கள், அதே போராளியை கவர்ச்சியாகக் காட்டியுள்ளீர்கள். ஒரே கேரக்டரில் வீரத்தையும் காண்பித்து அதே கேரக்டரில் கவர்ச்சி, காமம் கலந்தது ஏன்?

நான் அந்த அளவிற்கு ஆழமாகச் சிந்திக்கவில்லை. என் கேரக்டர்கள், காட்சிகளில் நான் அறிவைப் புகுத்தி பார்க்க மாட்டேன். சில நேரங்களில் ஒரு காட்சி உருவாகும் போதே இது கண்டிப்பாக சரியாக வரும் என உணர்வு தோன்றினாலே போதும் என நினைப்பவன் நான். நான் அப்படி சிந்தித்து விட்டால் அதில் லாஜிக் பார்க்க மாட்டேன். என் மனம் என்ன சொல்கிறதோ அதையே செய்வேன்.

ஹாலிவுட் தரத்திற்கு ஒரு படம் என்பது இந்தியர்களால் முடியாமலேயெ இருந்தது. அந்த விதியை நீங்கள் மாற்றிவிட்டீர்கள். எப்படி இது சாத்தியப்பட்டது?

மிக நுட்பமான , திறமையான தொழில்நுட்ப கலைஞர்களான, ஸ்ரீனிவாச மோகன், பீட் ட்ராபர், சனத், என ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து செதுக்கினார்கள். ஹைதராபாத்தின் Tau ,மற்றும் EFX போன்ற ஸ்டூடியோக்களும் எங்களின் இந்த மாரத்தானில் இணைந்து செம்மையாகப் பணியாற்றினார்கள். மேலும் சாபுசிரில் வெறும் கலை இயக்குநர் அல்ல , அவர் ஒரு விஞ்ஞானி. சிக்கல்களைக் களைபவர் என்றும் கூறலாம்.

உங்களில் காட்சியமைப்பும், உடைகளும்,  இந்தியாவின் பழமையான புராணங்களை நியாபகப்படுத்துகிறதே. இந்து கடவுள்கள், அல்லது கதைகளை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டீர்களா?

நான் நிறைய இந்திய புராணக் கதைகளை இன்ஸ்பிரேஷனாக கொள்வேன். என் படங்களிலும் அது கண்டிப்பாக வெளிப்படும். 

அவ்வளவு பெரிய போர்க் காட்சி அதுவும் அரை மணி நேரத்திற்கும் மேலாக படத்தில் இடம்பிடிக்க உள்ள காட்சி? இவ்வளவு பெரிய போர்க் காட்சி எடுபடும் என எப்படி நம்பினீர்கள்?

இந்த போர்க் காட்சிகளுக்கு மட்டும் 100க்கும் அதிகமான எடிட்டிங் பதிப்புகள் உள்ளன. ஒவ்வொன்றாக கோர்த்து, சேர்த்து, மாற்றி சிறப்பான போர்க் காட்சியை உருவாக்கப் பல முயற்சிகளை எடுத்தோம். ஆனாலும் ஒவ்வொரு காட்சியும் இதயப்பூர்வமாக உருவாக்கினோம். எவ்வளவு நேரம் என்பதை காட்டிலும் எவ்வளவு உணர்வுப்பூர்வமாக இருக்கிறது என்பதையே நாங்கள் பார்த்தோம். போர்க்களத்தின் தீவிரத்தையும், உணர்வுகளையும் வெளிப்படுத்த அந்த நீளம் தேவைதான் எனப்பட்டது.

எந்தெந்த இயக்குநர்கள், படாதிபதிகளை பாகுபலிக்கு இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டீர்கள்?

ஸ்ரீ கேவி ரெட்டி, பழம்பெரும் தெலுங்கு படம் ‘மாயாபஜார்’ கொடுத்தவர். மெல் கிப்சன் மற்றும் ரைட்லி ஸ்காட் எனது விருப்ப இயக்குநர்கள்.

மற்ற மொழிகளுக்கு அவ்வளவாக தெரியாத பிரபாஸை ஹீரோவாக தேர்வு செய்ய எது உங்களை தூண்டியது? ஒரு முழு நீள இந்திப் படம் இந்தி நடிகர்களைக் கொண்டு எடுக்கும் எண்ணம் உங்களுக்கு இல்லையா?

என் தேவைகளுக்கு ஈடு கொடுக்கும் நடிகர் தான் எனக்கு தேவைப்பட்டார்.நான் கையாளும் கதையை நம்பும் நபர் தான் எனக்கு தேவை. ஒரு வருடம் கால்ஷீட் கேட்ட போது மறுக்காத பிரபாஸ் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களை இந்த படத்திற்குக் கொடுத்துவிட்டார். பிரபாஸ் இல்லாமல் இந்தப் படம் சாத்தியமில்லை.

’பாகுபலி’ படத்திற்கு சிறந்த பாராட்டு யாரிடமிருந்து கிடைத்தது?

ரஜினிகாந்த்... அவர் என்ன சொன்னார் என்பது மிக ரகசியமான ஒன்று வெளியிட முடியாது ..மன்னிக்கவும்..

உங்கள் மகள் பாகுபலி குறித்து என்ன சொன்னார்?

அவருக்கு ‘பாகுபலி’ பிடிக்காது என்றே சொல்ல வேண்டும். இந்த படத்தின் உருவாக்கத்தால் அவருடன் நேரம் செலவிட முடியாது போனது. ஆனால் கடைசியாக அவர் படம் பார்த்துவிட்டு ’அப்பா! இது காவியம் தாண்டிய படைப்பு’ என கூறினார்.

அடுத்த பாகம் எப்போ?

காத்திருங்க... 2016 வரை..

ஒரு வட இந்திய ஊடகத்திற்கு ராஜமௌலி கொடுத்த பேட்டியின் தமிழாக்கம்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்