“மூன்று முறை எனக்கு காதல் வந்திருக்கிறது” த்ரிஷா பேட்டி!

ஜெயம்ரவி, த்ரிஷா, அஞ்சலி நடிப்பில் வரும் வாரத்தில் வெளியாகவிருக்கும் படம் சகலகலா வல்லவன். இப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது த்ரிஷாவிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை முன் வைக்க அவரும் பதிலளித்தார்.

தெருநாய்களைக் கொல்ல வேண்டும் என்று மோகன்லால் கூறியிருப்பது பற்றி உங்களது கருத்து?

தெருநாய்கள் பாவம். அவைகளை கொல்வது இரக்கமற்ற செயல். அவைகளை மீட்டு பாதுகாப்பான இடத்தில் விடவேண்டும். என் வீட்டின் அருகில் கூட 10 தெருநாய்கள் உலாவுகின்றன. அவைகளை மீட்டு பாதுகாப்பான இடத்தில் விடுவதற்கு நானே ஏற்பாடுசெய்திருக்கிறேன்.


உங்கள் வாழ்க்கையில் காதல் எத்தனை முறை மலர்ந்தது?

காதல் இல்லாமல் வாழ்க்கையே இல்லை. இரண்டு, மூன்று முறை காதல் வந்திருக்கிறது.

திருமண முறிவு வருத்தமளிக்கிறதா?

முடிந்து போன விஷயத்தைப் பற்றிப் பேச விருப்பமில்லை. மீண்டும் அதைக் கிளற வேண்டாம். என் குடும்ப உறுப்பினர்களும் இதில் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். இப்போதைக்கு என் வேலையில் மட்டும் தான் கவனம் செலுத்துகிறேன். திருமணத்தின் மீது முழு நம்பிக்கையும் இருக்கிறது. எனக்கு பொருத்தமான மனிதர் கிடைத்தால் திருமணம் செய்துகொள்வேன்.

இந்தப் படத்தில் அஞ்சலியுடன் இணைந்து நடித்துவிட்டீர்கள். போட்டியாகப் பார்க்காமல் இணைந்து நடிக்க ஆசைப்படும் நடிகை யார்?

நயன்தாரா என்னோட க்ளோஸ் ப்ரெண்ட். அவரோட இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன். அதற்காக சிலர் முயற்சியும் செய்துவருகிறார்கள். குறிப்பாக இயக்குநர் வெங்கட் பிரபு இதைப் பற்றி எங்கள் இருவரிடமும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரசியலுக்கு எப்போ வாறீங்க?

அரசியல் மோசமான விசயம் அல்ல. 40 சதவீதம் தான் எனக்கு அரசியல் தெரியும், அதை முழுமையாக தெரிந்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். ஆனால் இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்லை. மார்க்கெட் போன நடிகைகள் தான் உடனே திருமணமோ, அரசியலிலோ ஈடுபடுவார்கள். நான் இன்னும் மார்க்கெட்டில் தானே இருக்கிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!