அஜித் படம் தீபாவளிக்கு வருமா? சந்தேகத்தைக் கிளப்பிய சிம்பு!

      வாலு ரிலீஸ் , மற்றும் அடுத்தடுத்து படங்கள் ஷூட்டிங் என பிஸியாக மாறிவிட்ட சிம்பு நேற்று இரவு ரசிகர்களுடன் ட்விட்டரில் உரையாடினார்! அவற்றில் சில சுவராஸ்ய கேள்விகளும் பதில்களும்.. 

நீங்கள் உங்கள் படத்தில் விஜய்யை நடனம் ஆட சொல்லிக் கேட்பீர்களா?

விஜய்யை நான் நடனம் ஆட சொல்லிக் கேட்டால் அது அழகல்ல. ஒருவேளை அவர் என்னிடம் கேட்டால் கண்டிப்பாக நான் நடனம் ஆடுவேன். 

ஏ.ஆர்.முருகதாஸ் ,பாலா யார் படத்தில் நடிப்பீர்கள்? 

கண்டிப்பாக ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பேன்.ஏனெனில் பாலா சார் என்னைத் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார். 

சிவாகார்த்திகேயன் குறித்து? 

மிகவும் இனிமையான மனிதர், அவருக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்க வேண்டுகிறேன். 

தனுஷ் படங்களில் உங்கள் மனம்கவர்ந்த படம்?

காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மற்றும் ஆடுகளம் இன்னும் சில படங்கள்

சூர்யாவைக் குறித்து சுருக்கமாக சொல்லுங்களேன்? 

உண்மையாக அர்பணிப்புக் கொண்ட கலைஞர்.

நடிகர் சங்க தேர்தல் குறித்து? 

நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம் ..நல்லதே நடக்கும் என நம்புவோம்

வேட்டை மன்னன் பற்றி? 

அனைத்தும் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளன. படம் குறித்த அப்டேட்டுகள் இருப்பின் கண்டிப்பாக தெரியபடுத்துகிறேன். 

அச்சம் என்பது மடமையடா படத்தின் உங்களுக்கு பாடும் வாய்ப்பு கிடைத்தால்? 

அது நடக்கும் என நினைக்கிறேன். எனினும் அது ஏ.ஆர். ரஹ்மான் சாரைப் பொருத்த விஷயம். அவர் அற்புதமான டியூன்களை போட்டுள்ளார். 

அமீர் படம் பற்றி? 

எதுவும் இன்னும் உறுதியாகவில்லை. அதிகாரப்பூர்வமில்லாத செய்திகளையும், தலைப்பு, நடிகர்கள் குறித்த செய்திகளையும் நம்ப வேண்டாம். 

கர்மா சிங்கிள் ட்ராக் என்ன ஆயிற்று? 

நானும் யுவனும் கொஞ்சம் பிசியாகிவிட்டோம். பெரும்பான்மையான பாடலை முடித்துவிட்டோம். சில சரிசெய்யும் வேலைகள் மட்டுமே மீதியுள்ளன. விரைவில் வெளியிட முயல்கிறோம். 

இது நம்ம ஆளு ரிலீஸ் எப்போது? 

கடவுள் ஆசிர்வாதத்தின் படி நவம்பரில் வரலாம். தல படம் வரவில்லையெனில் தீபவளிக்கு இது நம்ம ஆளு வரலாம்.

உங்களின் தற்போதைய படங்கள் மற்றும் படப்பிடிப்புகள் குறித்து? 

அச்சம் என்பது மடமையடா இறுதி கட்டத்தில் உள்ளது. அதை முடித்தவுடன் கான் படத்தின் படப்பிடிப்புக்கு திரும்புவேன். பாடல்கள் மற்றும் இடங்கள் தேர்வுகள் நடந்து வருகிறது. 

இவ்வாறு ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து கேள்விகள் கேட்ட அனைவருக்கும் நன்றிகளை கூறிக்கொண்டு தனது சேட்டிங்கை முடித்தார் சிம்பு. 

 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!