ரக்‌ஷாபந்தனையொட்டி இளம் கதாநாயகிகளின் கலாட்டா | Youth Heroines and their brothers in cinema industry

வெளியிடப்பட்ட நேரம்: 15:54 (29/08/2015)

கடைசி தொடர்பு:17:10 (29/08/2015)

ரக்‌ஷாபந்தனையொட்டி இளம் கதாநாயகிகளின் கலாட்டா

ஹைய்யோ! இன்னைக்கு ரக்‌ஷா பந்தன் , எந்தப் பொண்ணும் நமக்கு ராக்கி கட்டிவிடக்கூடாது என பல இளைஞர்கள் பயந்துகொண்டு இருக்கும் வேளையில் இளம் நாயகிகள் சிலரிடம் நீங்கள் சினிமா உலகில் யாருக்கு ராக்கி கட்டுவீர்கள், கட்ட நினைக்கிறீர்கள் என்ற கேள்விகளை வைத்தோம்..

பிந்து மாதவி: எனது இன்ஸ்பிரேஷனாக இருக்கும் இயக்குநர் பாண்டிராஜ் சார்தான்.. என் மேல கோவப்பட்டு திட்டினாக் கூட அமைதியா கேட்டுக்குவேன். ஏன்னா எனக்கு நல்லது நடக்கணும்னு நினைக்கிறவர் அவர். நல்ல பந்தம் இருக்கு எங்களுக்குள்ள. எனக்கு எப்பவுமே நல்லது நினைச்சு என்னை சுத்தி இருக்கறவர் அவர்தான் அவருக்கு தான் நான் ராக்கி கட்டணும்னு நினைக்கிறேன்.

ஐஸ்வர்யா ராஜேஷ்: என் அண்ணாவுக்கு வீட்ல கட்டிட்டேன். சினிமாவுலயா அப்படி யாருக்கும் ராக்கி கட்டி நான் பாவத்தை சம்பாதிச்சுக்க விரும்பல. (சிரிக்கிறார்). நீங்க துருவி துருவி கேக்கறதுனால அண்ணன்னா பாலசரவணன்க்கு ராக்கி கட்டலாம் . மூணு படம் சேர்ந்து வேலை செஞ்சிருக்கோம். நல்ல கேரிங்கானவர். எப்பவுமே நிறைய கேர் எடுத்துப்பாரு என் மேல அதனால இந்த வருஷம் ராக்கி அவருக்குத்தான். இன்னொன்னு தப்பித் தவறி ஷாருக்கான் மட்டும் என்னை தங்கச்சியா ஏத்துக்கன்னு சொல்லிடக்கூடாது. அவ்ளோ தான் என கனவுக் கோட்டை இடிஞ்சிடும். நீங்களும் வேண்டிக்கோங்க...

ரேஷ்மி மேனன்: சத்தியமாக ஹீரோக்கள் யாருக்கும் நான் ராக்கி கட்ட மாட்டேன், இப்போதான் உருமீன் டைரக்டருக்கு கட்டிட்டு வந்தேன். கருணாகரன் சார நேர்ல பாத்தோன அவருக்கு ராக்கி கட்டணும்னு வாங்கி வெச்சுருக்கேன்.

டார்லிங் நிக்கி கல்ராணி: கோ 2 படத்தில் செம பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவரை மடக்கினோம். இதை நீங்களே கெஸ் பண்ணியிருக்கலாம். கண்டிப்பா கருணாஸ் சார் தான். டார்லிங் ஷூட்டிங் டைம்ல அவ்ளோ ஹெல்ப் பண்ணினாரு. நிறைய சப்போர்ட் பண்ணினாரு. ரொம்ப நல்ல மனிதர். பாதுகாப்பான அண்ணனா 10க்கு 10 மார்க் குடுக்கலாம். அப்பறம் என்னை யார் தங்கச்சியா ஏத்துகிட்டாலும் எனக்கு ரொம்ப ஹேப்பி. நிறைய அண்ணன்கள் இருந்தா செம சேஃப்டியா இருக்கலாம்ல. ஹி ஹி ஹி

சுஷ்மா ராஜ் : அப்படியா , இன்னிக்குதான் ரக்‌ஷா பந்தனா. திடீர்னு கேட்டுட்டீங்களே. ரொம்ப டஃப் கேள்விப்பா. சரி ஜகன் அண்ணா. அவர நான் ஜகன் அண்ணான்னு தான் பட ஷூட்டிங் அப்போ கூட கூப்டுவேன். எல்லாரும் பிரதர்ஸ் தான். ஆனாலும் சில பேர மட்டும் கோடி குடுத்தாலும் அண்ணனா ஏத்துக்கவே முடியாது. தமிழ்ல சூர்யா அச்சச்சோ பேரு போடுவீங்களா.. தெலுங்குல பிரபாஸ். இவங்க ரெண்டு பேரும் என்னை அண்ணனா நினச்சுக்கமான்னு சொல்லிட்டா அவ்ளோ தான் அழுதுடுவேன்..

- ஷாலினி நியூட்டன் -

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்