இதுவரை பார்க்காத இயல்பான விஜய்சேதுபதியைப் பார்க்கலாம்- மெல்லிசை படஇயக்குநர் பேட்டி | millisai Movie Director Ranjith JeyaKodi!

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (19/09/2015)

கடைசி தொடர்பு:17:45 (19/09/2015)

இதுவரை பார்க்காத இயல்பான விஜய்சேதுபதியைப் பார்க்கலாம்- மெல்லிசை படஇயக்குநர் பேட்டி

"இந்த நகரத்த எத்தனை பேர் கவனிப்பாங்கன்னு தெரியல,ஆனா இந்த நகரம் நீங்க விரும்புனாலும் இல்லைன்னாலும் உங்க அனுமதியோடோ அனுமதி இல்லாமலோ ரொம்ப உன்னிப்பா உங்கள கவனிச்சுகிட்டே இருக்கும்.ஆமாம் இந்த நகரத்துக்குக் கழுகுக் கண்கள்", விஜய் சேதுபதி நடிப்பில் புதுமுக இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் வெளிவரயிருக்கும் மெல்லிசை திரைப்படத்தின் டீசரில் இடம்பெறும் வசனம்தான் இது.ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும்  இந்தப் படத்தைப் பற்றி இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடியிடம் பேசிய போது அவர் கொடுத்த ஷார்ட் அண்ட் ஸ்வீட் பேட்டி இதோ...

 

மெல்லிசை என்ன மாதிரியான படம்?

மெல்லிசை - இது எமோசனல் திரில்லர் படம் என்று சொல்லலாம். ஒரு உட்சபட்ச அன்பைப் பற்றி சொல்கிற கதைதான் மெல்லிசை.நெஞ்சில் காது வைத்து கேட்டீர்களானால்  அதில் இருக்கும் இதயத்தோட துடிப்பு ஒரு மெல்லிசைதான் ஆனால் அதுல ஒரு படபடப்பும் இருக்கும் . அதுதான் இந்தப் படத்தோட கதையும்கூட.

விஜய்சேதுபதிய ரொம்ப வித்தியாசமா காட்டியிருக்கிற மாதிரி இருக்கே ?

இல்ல இயல்பாதான் காட்டி இருக்கிறேன். அவரை இதுவரைக்கும் பெரும்பாலும்  இயல்பா படங்கள்ல காட்டியதில்லை.நான் இயல்பா காட்டியிருக்கிறதால வித்தியாசமாகக் காட்டியதா சொல்லப்படுகிறது .

ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்த இன்ட்ரஸ்டிங் விசயம் எதும் சொல்ல  முடியுமா?

படப்பிடிப்பு என்பதே சுவாரஸ்யமான விஷயம்தான். எல்லா நாளுமே இன்ட்ரஸ்டிங்தான்.ஒரு நாளை மட்டும் குறிப்பிடும்படி எதுவுமில்லை.

நகரத்து வாழ்க்கை மேல எதும் கோவம் இருக்கா?

அப்படியெல்லாம் இல்லை. இதில் நகரம் என்பது பாதுகாப்பற்று வசிக்கும் வெளிக்கான ஒரு metaphor அவ்வளவே.இப்போது  எல்லாப் பகுதிகளும் நகரங்களாவே மாறிக்கொண்டு வருகிறது. ஆகவே இது எல்லா இடத்திற்கும் பொருந்தும் .

புதுமுக இயக்குனர்களுக்கு தற்போதைய தமிழ் சினிமா சூழல் எப்படி இருக்கு?

எப்போதும் எல்லாமும் சுலபமாக இருக்காது. அதே சமயத்துல தகர்க்கமுடியாத கதவென்று ஒன்றும் கிடையாது.

ரஞ்சித் ஜெயக்கொடி, ஜெயமடைய வாழ்த்துகள்....!

சியாம் சுந்தர்
மாணவப் பத்திரிக்கையாளர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close