’தனி ஒருவன்’ சித்தார்த் அபிமன்யு பாத்திரத்திற்கு என்னிடம் தான் முதலில் பேசினார்கள் - ரசிகர்கள் கேள்விகளுக்கு மாதவன் சுவாரஸ்ய பதில்கள்! | Maddy Live chat with fans in Face Book

வெளியிடப்பட்ட நேரம்: 16:17 (22/09/2015)

கடைசி தொடர்பு:16:28 (22/09/2015)

’தனி ஒருவன்’ சித்தார்த் அபிமன்யு பாத்திரத்திற்கு என்னிடம் தான் முதலில் பேசினார்கள் - ரசிகர்கள் கேள்விகளுக்கு மாதவன் சுவாரஸ்ய பதில்கள்!

மாதவன் முகநூலில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சுவராஸ்யமான பதில்களை அளித்தார்.

நீண்ட நாட்கள் ஆகிவிட்டன உங்கள் படங்கள் தமிழில் வெளியாகி, உங்களின் அடுத்த படத்தை எப்போது எதிர்பார்க்கலாம்? உங்களது புது கெட்டப் அருமை..

அந்த புது கெட்டப்பிற்காக நிறைய வேலை செய்துள்ளோம் உங்களை கண்டிப்பாக அது ஆச்சர்யப்படுத்தும்.

தனி ஒருவன் படத்தின் சித்தார்த் அபிமன்யூ போன்ற வில்லன் பாத்திரங்களில் நடிப்பீர்களா?

அந்த ரோலுக்காக என்னிடம் கேட்டார்கள். அரவிந்த் அந்த பாத்திரத்தில் நடித்தது மகிழ்ச்சி. அற்புதமான நடிகர்.

உங்கள் கனவு புராஜெக்ட் , அல்லது ரோல் எது?

ஆங்கில தொடரான ’ஹவுஸ் ஆஃப் காட்’ போல் இருக்க வேண்டும்.

உங்களுக்கு இணை நடிகராக நீங்கள் விரும்புவது யாரை?

எப்போதும் கமல் சார் தான்

எப்போது உங்கள் ஹாலிவுட் படம் வெளியாகும்?

நானும் உங்களைப் போல் காத்திருக்கிறேன்.

ஏன் நீண்ட நாட்கள் இந்த சினிமா விளையாட்டை விட்டு ஒதுங்கி வீட்டீர்கள்? நல்ல கதைக்காகவா, அல்லது வேறு ஏதும் காரணமா?

நம்புங்கள்.. காத்திருப்பு கண்டிப்பாக பயனளிக்கும்

நீங்கள் நடிக்கவில்லை எனில் என்னவாக ஆகியிருப்பீர்கள்?

கண்டிப்பாக ராணுவம் தான்.

இலங்கை மக்கள் இனப்படுகொலை குறித்து உங்கள் பதில்?

மனதை உளுக்கும் சோகம் அது. அங்கே அமைதி நிலவ பிரார்த்திக்கிறேன்.

அஜித்துக்கு வில்லனாக நடிப்பீர்களா?

யாருக்கு வேண்டுமானாலும் எந்த ரோலிலும் நடிப்பேன், நல்ல கதை அமைந்தால்.

அலைபாயுதே, அல்லது மின்னலே பாகம் 2 களில் நடிப்பீர்களா?தமிழ் சினிமா சிலகாலங்களாக மாதவன் மேஜிக் இல்லாமல் இருக்கிறது?

இளமையான ரொமாண்டிக் கதைகளில் இனி நடிப்பது சிரமம் தான். எனினும் இறுதிச்சுற்று மிகவும் ரொமாண்டிக்கான படம்.

உங்கள் சிரிப்பின் ரகசியம் என்ன?

இதயத்தில் இருந்து சிரிப்பதுதான். மேலும் காரணத்துடன் சிரிப்பது.

உங்கள் அபிமான கிரிக்கெட் வீரர்?

எப்போதும் ட்ராவிட் தான்

ரொமாண்டிக் காமெடிப் படங்களில் நடிப்பீர்களா? 

எனக்கு மிகவும் பிடித்த கதைக்களம் ரொமான்டிக் காமெடி. நல்ல கதை யாரெனும் வைத்திருந்தால் சொல்லுங்கள்

பவன் கல்யாண், விஜய். சூர்யா குறித்து உங்கள் பதில்?

பவன் கல்யாண்: ஜென்டில்மேன், மிகவும் கட்டுக்கோப்பானவர்..விஜய்: அற்புதமானவர், எனது குடும்ப நண்பர்... சூர்யா: அன்பான நண்பர், அருமையான மனிதர்

உங்கள் சினிமா கேரியரில் உங்களால் மறக்க முடியாத தருணங்கள்?

மணிரத்னம் சார், கமல் சார், அமித்ஜி மற்றும் ரஜினி சாரை சந்தித்த நிமிடங்கள் தான்

உங்களுக்கு பிடித்த இசையமைப்பாளர் யார்?

ஏ.ஆர்.ரஹ்மான்

நிறைய நடிகர்கள் இப்போதெல்லாம் சினிமா தவிர்த்து தொழிலும் ஈடுபடுகிறார்களே. ஒரு இன்ஜினியராக நீங்கள் அதை எப்படி ப் பார்க்கிறீர்கள்.. மேலும் சில காலங்களாக நீங்கள் சினிமாவில் இல்லையே?

சினிமாவைப் பொருத்தமட்டில் உங்களுக்கு திறமை இருப்பின் ஆரம்பகட்டம் உங்களுக்கு நல்ல புகழையும், பணத்தையும் கொடுக்கும். மேலும் எனக்கு அடுத்தடுத்து படங்கள் கொடுப்பதில் ஈடுபாடுகள் இல்லை. சினிமா எப்படி பேரும் புகழும் கொண்டுவருகிறதோ, அதே போல் எதிர்பாரா விதமாக ரிடையர்மெண்டயும் கொண்டு வந்துவிடும். முக்கியமாக சினிமாவில் உங்களையும் உங்கள் இடத்தையும் பாதுகாப்பாக தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

நடிப்புக்காக பயிற்சி எடுத்துகொள்வது குறித்து உங்கள் பதில்?

நடிகனாக வாழ்க்கைப் பாடம் தான் தேவை . ஆனால் ஆக்‌ஷன் வகுப்புகள் கண்டிப்பாக தேவை.

இவ்வாறு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து விடைபெற்றார் மாதவன். தற்சமயம் தமிழில் இறுதிச்சுற்று படத்திற்காகவும் இந்தியில் சாலா காடூஸ் படத்தின் ரிலீஸுக்காகவும் காத்திருக்கிறார்.. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்