120 படங்களில் நடிப்பு, கமலிடம் உதவி இயக்குநர், திருட்டுவிசிடி இயக்குநர் - ஆச்சரிய காதல்சுகுமார் | Thiruttu vcd Director Kadhal Sugumar Interview!

வெளியிடப்பட்ட நேரம்: 10:47 (01/10/2015)

கடைசி தொடர்பு:13:53 (01/10/2015)

120 படங்களில் நடிப்பு, கமலிடம் உதவி இயக்குநர், திருட்டுவிசிடி இயக்குநர் - ஆச்சரிய காதல்சுகுமார்

சினிமாவில் நடிகராக அறிமுகமாகி ஒரு அடையாளத்தைப் பெற்று பின்பு  இயக்குநராக விஸ்வரூபம் எடுத்து வெற்றி கண்டவர்கள் வெகு சிலர். இந்தப் பட்டியலில் புதிதாய் இடம் பெற்றுள்ளார் ‘காதல்’ சுகுமார். நீண்ட நாட்களாக திரைக்கு இடைவேளை விட்டவர்.தற்பொழுது ‘திருட்டு வி.சி.டி’ மூலம் ரீஎன்டரி கொடுத்துள்ளார் .

அட பதறாதிங்க பாஸ் இது நீங்க நினைக்குற திருட்டு வி.சி.டி இல்லை,சமீபத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடிகொண்டு இருக்கே அந்த ‘திருட்டு வி.சி.டி’  படம் தான். இயக்குநராக முதல் படமே வெற்றியடைந்த சந்தோஷத்தில் இருந்தவரிடம் அவரது சினிமா பயணத்திலிருந்து ஆரம்பித்தோம்..

“ நா பிறந்தது வளர்ந்தது எல்லாம் மதுரை பக்கத்துல ஒரு கிராமம். சின்ன வயசுல இருந்தே நிறைய நாடங்கள்ல நடிச்சி இருக்கேன். நானே 13. நாடகங்கள் இயக்கி நடிச்சு இருக்கேன்.

நடிப்பு ஆர்வத்தில 1998’ல சினிமாக்கு வந்தேன். அதுவரைக்கும் 6 படங்கள் பண்ணி இருந்தாலும் காதல் படம் தான் எனக்குனு ஒரு அடையாளம் தந்துச்சு. அதுக்கு அப்புறம் தான் சுகுமார்னு இருக்குற என்னுடைய பெயர் காதல் சுகுமார்’னு மாறுச்சு”

என்னங்க ரொம்ப நாள ஆள பார்க்க முடில ?

“ ஆமாங்க 2008 வரைக்கும் தமிழ்,மலையாளம்.தெலுங்கு எல்லாம் சேர்த்து மொத்தம் 120 படங்கள் மேல பண்ணிட்டேன். அதுவரைக்கும் எனக்குள்ள இருந்த இயக்குநர் ஆசை அந்தக் கால கட்டத்துல தான் வெளி வந்துச்சு. என் நண்பர் ஒருத்தரோட உதவியோட லண்டன் போய் இயக்குநர்க்கான படிப்ப 2 வருடம் வேல பார்த்துட்டே படிச்சேன். திரும்ப இங்க வந்து ‘மானாட மயிலாட சீசன் -5’ல சின்ன திரைல பங்கெடுத்து கிட்டேன்.அந்த சமயம் தான் ‘டி.ன்.ஏ’ ஆனந்த்ங்கறவரு மூலமா இந்த வாய்ப்பு கிடச்சுது.

அது ஏங்க படத்துக்கு திருட்டு வி.சி.டினு பெயர் வெச்சிங்க?

“ ஒரு அட்ராக்‌ஷன்க்கு தான் முதல் வெச்சோம் அப்புறம் அதுவே கதை கூட ரொம்ப செட் ஆயிருச்சு. அது மட்டும் இல்லாம படத்தோட தலைப்புக்கு ஏத்த மாதிரி திருட்டு வி.சி.டி’ல படம் பார்க்கக்கூடாது அப்படிங்கறத கருத்த சொல்ற மாதிரியான பாட்ட முதல்ல வெச்சுருக்கோம்.

கமல் கிட்ட உதவி இயக்குநராக இருந்தீங்க போல?

“ ஆமாங்க விருமாண்டி, வசூல் ராஜா படங்கள் பண்ணும் போது சார் கூட பழக்கம் . விருமாண்டி படம் முழுக்க எங்க ஊர் சைடுல எடுத்ததால அந்த படத்துல உதவி இயக்குநரா வேல பாக்குற வாய்ப்பு கிடச்சுது. அந்த அனுபவம் தான் இயக்குநர் ஆகுற நம்பிக்கைய எனக்குக் கொடுத்துச்சு.

அடுத்தது என்ன? நடிக்கப் போறீங்களா இல்ல இயக்குநராகத் தொடரப்போறிங்களா?

“ கட்டாயம் இயக்குநராகத் தான். இந்தப் படத்த எந்த ஆடம்பரமும் இல்லாம 68 லட்சத்துல 28 நாள்ல முடிச்சோம். இன்னைக்கு வரைக்கும் ஒண்ணேகால் கோடி வசூல் பண்ணி இருக்கு. அதனால தான் இதே தயாரிப்பாளர் எனக்கு அடுத்த வாய்ப்பும் கொடுத்து இருக்காரு. “ சும்மாவே ஆடுவோம்” என் அடுத்த படத்தோட தலைப்பு. கூத்து கலை , நாடகக் கலை மக்கள்ளோட இன்றைய நிலைமையை ,அவலத்தை, சொல்றதா இந்தப் படம் அமையும்”

உங்க ஆட்டம் பட்டைய கிளப்பட்டும் !

பி.நிர்மல்
 
(மாணவப் பத்திரிக்கையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்