கபாலி, தூங்காவனம்- எந்தப்படத்துக்கு முன்னுரிமை? - மாகாபா ஆனந்த் ஜாலி கேலி பேட்டி! | Makapa Jolly interview!

வெளியிடப்பட்ட நேரம்: 13:17 (23/10/2015)

கடைசி தொடர்பு:12:55 (27/10/2015)

கபாலி, தூங்காவனம்- எந்தப்படத்துக்கு முன்னுரிமை? - மாகாபா ஆனந்த் ஜாலி கேலி பேட்டி!

ல படங்கள் பாக்கெட்ல வெச்சுட்டு பிசியா சுத்திட்டு இருக்கற மா.கா.பா.ஆனந்த் கூட ஒரு கலாய் டாக்!

போலீஸிடம் மாட்டி தப்பித்ததுண்டா?

மாட்டறது என்ன...அடியே வாங்கி இருக்கேன்.பாண்டிச்சேரியில ஒரு தடவ சைக்லோன் கரைய கடக்கும்போது நானும் என் நண்பனும் சைக்கிள் எடுத்துட்டு அப்படி என்னடா இருக்குன்னு பார்க்க கெளம்பிட்டோம். பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு போங்கன்னு மைக் போட்டு சொல்லிட்டே இருந்தாங்க. நாங்க புயல்ல பாதுகாப்பா ஒதுங்கின இடம் போலீஸ் பூத். டக்குன்னு பின்னால பயங்கர அடி ரெண்டு பேருக்கும். அவன் அவன் உசுர கைல பிடிச்சுட்டு வீட்டுக்கு போறான்...உங்களுக்கு வேடிக்கை கேக்குதா...போங்கடா வீட்டுக்குன்னு தொரத்திவிட்டார்.

ஷூட்டிங்குக்கு வராம இருக்க சொன்ன பொய்கள்?

நிறைய க்ரிமினலாதான் சொல்லி இருக்கேன். கொஞ்சம் டீசண்டான பொய்ன்னா பைக் காணாம போச்சு. போலிஸ் ஸ்டேஷன்ல இருக்கேன் சார்ன்னு சொல்லி இருக்கேன்.

லைவ் ஷோல வம்புல மாட்டிகிட்ட அனுபவம்?

எப்போதுமே செலிப்ரிடீஸ் பேர மாத்தி சொல்லிடுவேன். ஒரு தடவை ஆர்ட் டைரக்டர ஸ்டன்ட் டைரக்டர்ன்னு நினைச்சு பைட் பத்தின கேள்வி எல்லாம் பயங்கரமா கேட்ட அப்றம்தான் சொன்னார், அவர் ஆர்ட் டைரக்டர்ன்னு.

 நயன்தாரா, ஹன்சிகா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன்...நாலு பேரும் ஒரே நேரத்துல நீங்கதான் ஹீரோவா நடிக்கணும்னு கூப்பிட்டா யார் படத்துக்குப் போவீங்க?

நாலு பேரையும் ஒரே படத்துல கமிட் பண்ணி நடிச்சுட வேண்டியதுதான்.

போன ஜென்மத்துல என்னவா இருந்திருப்பீங்க? அடுத்த ஜென்மத்துல என்னவா இருக்க ஆசை?

போன ஜென்மத்துல கண்டிப்பா திருவிழா ஸ்பீக்கராதான் இருந்திருப்பேன். அடுத்த ஜென்மத்துல பறவை ஆக ஆசை. ஏரோப்ளேன் டிக்கெட் எல்லாம் ஏறிப்போச்சு. பறவையா இருந்தா ப்ரீயா பறந்து போய்டலாம் பாருங்க.

பப்பி லவ்?

நான் படிச்சது பாய்ஸ் ஸ்கூல். அதுலயும் அஞ்சாவது படிக்கும்போது என் தமிழ் டீச்சர் மேல ஒரு ஒன் சைட் லவ்

 நாளைக்கு உலகமே அழியப்போகுது. இன்னிக்கே பார்க்க ஆசைப்படறவங்கள பார்த்துட்டு வந்துடுங்கன்னா உங்க லிஸ்ட்ல டாப் 5 யார் ?

1. ரஜினி சார்

2. அம்மா அப்பா

3. நான் கடன் குடுத்த சிலர். (உலகமே அழியப் போகுது. இன்னும் கடன திருப்பித்  தரலைன்னு சொல்லிட்டு வருவேன்).

4. நமீதா

5. என்னையே கண்ணாடியில பாத்துக்குவேன்

சர்க்கஸ்ல வேலை கிடைச்சா என்ன ரோல் பண்ணுவீங்க?

கண்டிப்பா ஜோக்கர்தான்

கபாலி, தூங்காவனம் ரெண்டும் ஒரே நாள்ல ரிலீஸ் ஆகுது. ரெண்டுக்கும் முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் கிடைக்குது. எதுக்கு போவீங்க?

ரெண்டு டிக்கெட்டையும் ப்ளாக்ல வித்துட்டு ஈவ்னிங் ஷோ கபாலியும் நைட் ஷோ தூங்காவனமும் பாப்பேன்.

 உங்கள நீங்களே பாராட்டிக்கோங்க

ப்பா !! என்ன அழகு...என்ன திறமை... 3 ரோசஸ் டீக்கு அப்பறம் நிறம் திடம் மணம் சுவை...இது எல்லாம் ஒரு சேர இருக்கறது உன்கிட்டதான்!!

தா.நந்திதா

மாணவப்பத்திரிகையாளர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்