கயல் நாயகன் சந்திரன், சன்டிவி அஞ்சனா காதல்கதை

யல் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சந்திரன். இவருக்கும் டிவி தொகுப்பாளினி அஞ்சனாவுக்கும் நிச்சயதார்த்தம் என தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவரிடமே பேசினேன்..

”செம ஹேப்பியா இருக்கு, நான் சொன்னேன்ல நீங்களே எனக்கு திரும்ப கூப்டுவீங்கன்னு. நான் தான் முதல்ல சொன்னேன் என ஹேப்பியாக பேசுகிறார்”.

”பொண்ணு பார்க்கறதா சொன்னீங்க...அஞ்சனானு சொல்லி இப்போ ஷாக் குடுத்தீட்டீங்களே?”

”ஆமா...நான் சூரியன் எஃப்.எம்ல சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ்வா இருந்தேன். அப்போ அஞ்சனா நல்ல ஃப்ரண்ட். ஆனாலும் அடுத்தடுத்து நான் வேலை அப்பறம் சினிமாவுல ஹீரோனு வந்துட்டேன். டச் இல்ல. அப்பதான் ஒரு அவார்ட் ஹோஸ்டிங்ல பார்த்தேன், பார்த்தோன பிடிச்சுப்போச்சு. அம்மா கிட்ட சொன்னேன் இந்த மாதிரி பொண்ணு பாரும்மான்னு. அம்மா இவளையே பார்க்கலாமான்னு கேட்டாங்க!”

”நீங்கதான் முதல்ல லவ் சொன்னேனு சொன்னீங்களே?”

”என்னைக்குங்க பொண்ணுங்க லவ்வ சொன்னாங்க.. அந்த ஃபங்ஷனுக்கு அப்பறம் சேட்டிங், திரும்ப ஃப்ரண்ட்ஷிப், அப்பறம் எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. ’ஐ லவ் யூ’ அப்படியெல்லாம் சொல்லல.அந்த வார்த்தை சொல்லணும்னா கொஞ்சம் டீப்பா ஃபீல் பண்ணனும். அதனால ரிஸ்க் வேணாம்னு எடுத்தோன கல்யாணம் பண்ணிக்கறியானு கேட்டேன். அப்படியே ஷாக் ஆகிட்டாங்க.. அப்பறம் ஓகே சொல்லிட்டாங்க.

எப்போ கல்யாணம்?

நிச்சயதார்த்தம் இந்த மாசம் 29ம் தேதி. கல்யாணம் மார்ச் 10ம் தேதி!”

வாழ்த்துகள் சந்திரன் - அஞ்சனா

- ஷாலினி நியூட்டன் -

Do you like the story?

Please Appreciate the Author by clapping!