எனக்கு என் அப்பா போட்டியா? யுவன் சங்கர்ராஜா பரபரப்புப் பேட்டி

மதுரையில் பிரபல இசை அமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா, தனியார் ஹோட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, யுவன் சங்கர் ராஜாவின் ஒளி ,ஒலி திரையிடப்பட்டது . மேலும் வெளி நாடுகளில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளும் திரையிடப்பட்டன.

பிறகு அரங்கிற்குள் வந்த யுவன்,  மதுரையில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெறப்போகிறது வரும் ஜனவரி 26ம் தேதி மாலை 6மணிக்கு அந்நிகழ்ச்சி பாரம்பரியம் மிக்க தமுக்கம் மைதானத்தில் நடைபெறும். அதில் என்னுடன் என்குழு மற்றும் சினிமா பிரபல நட்சத்திரங்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

18முதல்30பாடல்கள் வரை 3மணி நேர நிகழ்ச்சியாக பிரம்மாண்ட வண்ண விளக்குகளால் சித்தரிக்கப்பட்டு மாபெரும் இசை நிகழ்ச்சியாக நடைபெறும், சுமார் 25ஆயிரம் ரசிகர்கள் கலந்துகொள்ளும் அளவிற்கு இடம் அமைக்கப்படும் ரூ250முதல் 25,000 வரை பல தரப்பட்ட டிக்கெட் வசூலிக்கப்படும் அதன் மூலம் கிடைக்கும் தொகை ஏழை மக்களூக்கும் , புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களூக்கும் ஆதரவு அற்றவர்களுக்கும் செலவு செய்யப்படும் என்றார் யுவன்சங்கர்.

 மேலும் பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கும் பதில் சொன்னார் யுவன்.
 
மதுரை பற்றி உங்கள் கருத்து?

பாரம்பரிம் மிக்க மதுரையில் எனக்கு உணவுகள் மிகவும் பிடிக்கும் எனது தாயாருடன் மதுரைக்குப் பயணம் செய்தகாலங்கள் இன்னும் என் மனதில் நீங்காது இடம்பெற்றுள்ளது. மேலும் என் தந்தைக்கு மதுரை மிகவும் பிடிக்கும் அவர் இங்கு பல முறை இசை விழாக்களில் கலந்துகொண்டிருக்கிறார் அவர் அளவிற்கு  சிறப்பாக இசை விழாவை நடத்த ஆசைப்படுகிறேன். மேலும் மதுரையின் சிறப்பைப் பற்றிய பாடலை விழா நடக்கும் போது பாடலாம் என்று ஒரு ஐடியா வந்துள்ளது.  

நீங்க ஹீரோ ஆக ஆசைப்படுகிறீர்களா?

இல்லவே இல்லை நடிப்பிற்கும் எனக்கும் ரொம்பதூரம் ஆல்பம் செய்யும் போது கூட திரையில் வருவதற்கு அச்சப்படுவேன் திரையில் எப்போதாவது வரலாம் ஆனால் ஹீரோவாக கண்டிப்பாக நடிக்க மாட்டேன்

ஹாலிவுட் படம் சென்று வொர்க் செய்வீற்களா?

கண்டிப்பாக அதன் வேலை தற்போது  தொடக்கத்தில் இருக்கிறது அடுத்த ஆண்டு அதன் வேலை முழு மூச்சாக நடைபெறும் எனது நண்பரின் உறவினர் தான் அந்த ஹாலிவுட் படத்தை இயக்கவிருக்கிறார் எனவே தெரிந்த முகங்கள் அதிகமாக சந்திக்க நேரிடும் என்பதால் அப்படமும் எனக்கு கொஞ்சம் எளிமையாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன்.

இளையராஜா அவர்களைப் பற்றி?

தந்தையை என்றும் எப்போதும் ஒப்பிடமாட்டேன் எனக்கு நான் மட்டும் தான் போட்டி எனக்கு அப்பாவின் பாடல்களில் “நான் தேடும் செவ்வந்திப் பூ இது “  பாடல்  மிகவும் பிடிக்கும் நான் இசைத்த பாடல்கள் அனைத்தும் எனக்குப் பிடிக்கும் எனது பாடல்களையும் அவர் ரசிப்பார் நேரம் கிடைக்கும் போது இசையைப் பற்றி பகிர்ந்துகொள்வோம் செவன்ஜி ,துள்ளுவதோ இளமை, தங்க மீன்கள் போன்ற படங்களின் பாடல்களுக்கு அதிகப் பாராட்டுத் தெரிவித்தார்

என்றார் யுவன்.

சே.சின்னத்துரை,  படங்கள் ;ஈ.ஜெ.நந்தகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!