Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’சென்னை நல்லா இருந்தாதான் நாங்க நல்லா இருக்க முடியும்’ பாகுபலி ராணா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!

சென்னையில் மழையால வெள்ளம் வரும்னு நினைச்சுக்கூட பார்க்கலை, அப்போ துபாய்ல இருந்தேன். சாதாரண மழை தானே, சென்னைக்கு ஏதும் ஆகாதுனு நினைச்சேன். இங்க வந்துப் பார்த்ததும் பதறிப்போய் கொஞ்ச நேரம் உறைஞ்சுப்போய்ட்டேன் என்று பதற்றத்துடனே பேசத்தொடங்கினார் பாகுபலி நாயகன் ராணா. தெலுங்கு திரையுலகை “மனமெட்ராஸ்கோசம்” என்ற பெயரின் மூலம் ஒருங்கிணைத்து சென்னை மக்களுக்கு இவரின் டீம் செய்த உதவிகள் ஏராளம்.

“மன மெட்ராஸ் கோசம்” ஆரம்பிக்க காரணம் என்ன?

நம்ம சென்னை, ஏதாவது உதவணும்னு தோனும், ஆனா எப்படி செய்யுறதுனு தெரியாம இருக்குறவங்களுக்காக ஆரம்பிச்சதுதான் மனமெட்ராஸ்கோசம். நாம வழிகாட்டணும்னு தான் இதுல இறங்குனேன். மற்றதுலாம் தானா நடக்குது. தினமும் ரெண்டு லாரினு, இதுவரைக்கும் 9 பெரிய லாரில சென்னைக்கு நிவாரணப்பொருட்கள்லாம் அனுப்பி இங்குள்ள மக்களுக்குக் கொடுத்துருக்கோம்.

என்னமாதிரியான நிவாரணப் பொருட்கள் கொடுத்துட்டு இருக்கீங்க?

என்ன தேவையோ அந்தப் பொருட்களா அனுப்பிட்டு இருக்கோம். கனமழையா இருந்த முதல் மூணு நாள் மக்களுக்கு தண்ணீர் பிரச்னை, சென்னையிலேயே சமைக்க கூட இடமில்லாத அளவுக்கு வெள்ளம். அதுனால, பழங்கள், சாப்பிட உணவுகள்னு ஆரம்பிச்சோம். அடுத்ததா நோய் பரவ ஆரம்பிச்சிடும். அதுனால ஹைதராபாதில் உள்ள டாக்டர்களிடம் பேசி, அவங்க சொன்ன மருந்துகளை மும்பையில் ஆடர் கொடுத்து மொத்தமா ஏற்பாடுசெய்து சென்னைக்கு அனுப்பிட்டு இருக்கோம்.

சென்னைல எப்படி ஏரியாக்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புறீங்க?

சென்னைல தனுஷ், ஆர்.ஜே.பாலாஜி, சித்தார்த், விஷால், கார்த்தி மற்றும் என்.ஜி.ஓ. நிறுவனங்கள் என்று, அவங்க கொடுக்குற செய்தி மூலமா தான் நிவாரணப் பொருட்களை இங்குள்ள மக்களுக்கு கொடுக்குறோம். தெலுங்கு மக்கள் கொடுக்குற பொருட்கள் மட்டுமில்லாமல் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் பணமாகவும், பொருளாகவும் எங்க ஏரியாவுக்கு பொருட்கள் அனுப்பிட்டே இருந்தார். எந்த ஏரியாவுக்கு பொருட்கள் தேவைனு சொல்லுறாங்களோ அந்த ஏரியாவுக்கு அடுத்த நாள் காலைல நிவாரணப் பொருட்கள் வந்து சேர்ந்துடும். அந்த அளவுக்கு பக்காவா ப்ளான் பண்ணி வேலைபார்த்துட்டு இருக்கோம். அதுமட்டுமில்லாமல் ட்விட்டர், ஃபேஸ்புக்லாம் மீம்ஸ் போடவும், கலாய்க்கவும் மட்டுமில்லானு யூத் இறங்கி வேலைபார்த்தாங்க. அவங்க தான் எங்களுக்கு முழு சப்போட். ஃபோன் லைன் கட் ஆன நேரத்துல சோசியல் வெப்சைட் தான் ரொம்ப பொரிதா கை கொடுத்துச்சு.

அடுத்தக் கட்ட ப்ளான் என்ன?

சென்னை மக்கள் எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கிறாங்க. இங்குள்ளவங்க சொல்லுறதவச்சித்தான் அடுத்து சென்னைக்கு என்னதேவைனு முடிவுபண்ணி அடுத்தக்கட்டமாக மக்களோட அடிப்படை தேவையான பொருட்கள் அனைத்தும் கொடுக்கவிருக்கிறோம். அதற்காக எங்க டீமே சென்னைக்கு வந்து அதற்கான வேலைகளில் ஈடுபடப்போறோம்.

தெலுங்கு மக்களும், திரையுலகினரும் இப்படி உதவினு வருவாங்கனு நாங்க எதிர்பார்க்கவில்லையே?

சென்னை தான் எங்க முதல் வீடு. நான் மட்டுமில்ல, மகேஷ்பாபு, அல்லுஅர்ஜூன்னு எங்க வாழ்க்கை, தொழில் எல்லாம் ஆரம்பிச்சது சென்னைல தான். சென்னை தான் எங்களுக்கு முக்கியம். சென்னை நல்லா இருந்தா தான் நாங்க அங்க நிம்மதியா இருக்கமுடியும். சென்னைக்கு எதும்னா உடனே ஓடி வந்துடுவோம்.

இடையூறு ஏதும் இருந்ததா?

ப்ளான் பண்ண நேரத்துக்கு எல்லாப் பொருட்களும் சரியா போய் சேர்ந்தது. எல்லா லாரிலயும் என் ஆட்கள் இருப்பாங்க. அதுனால எந்தப் பிரச்னையும் இல்ல. இந்தியாவின் ரொம்ப முக்கியமான சிட்டி சென்னை. ரொம்ப பெரிய அழிவுனு தான் சொல்லுவேன். நாங்க மட்டுமில்ல, நீங்களும் எங்களோட சேர்ந்து உதவி செய்யணும்னு நினைச்சா பணமாவோ, பொருளாவோ எங்களுக்கு அனுப்புங்க. இந்த மெயில் அடிக்கும் நீங்க எந்த உங்களால முடிஞ்ச பங்கீடை அனுப்பலாம்.

அதுலாம் சரி,பாகுபலி எப்போ?

சென்னை வெள்ளம்னு கேள்விபட்டதும், எல்லாருக்குமே அதிர்ச்சி. யாருக்குமே வேலை நடக்கல,. சென்னைக்கு பாதிப்புனா எங்களுக்கும் பாதிப்புதான். சென்னை நல்லா இருந்தா தான் நாங்க நல்லா இருக்க முடியும். அதான் சென்னை சரியானாதான் பாகுபலி அடுத்தகட்ட படப்பிடிப்புக்குப் போவேன். பெங்களூர் டேஸ் ரீக் ஷூட்டிங்கும் முடிஞ்சுடுச்சி. அடுத்த வருடம் நிச்சயம் ரெண்டு படமும் வரும். அதுக்குள்ள சென்னை மக்கள் பேக் டு தி ஃபார்ம் வந்துடுவாங்க. நாங்களும் சென்னைக்காக இருக்கோம் பாஸ்.

- பி.எஸ்.முத்து -

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்