ரஜினிக்கு முதலில் ரசிகன் அப்புறம்தான் மருமகன் - தங்கமருமகன் தனுஷ் பேட்டி

வேலையில்லா பட்டதாரி படக்குழுவின் அடுத்த படைப்பு தங்கமகன். முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக உருவாகிவரும் இப்படத்தில் சமந்தா மற்றும் எமிஜாக்ஸன் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள். வேல்ராஜ், அனிருத், தனுஷ் கூட்டணியில் வெளியான விஜபியின் தெறிமாஸ் வெற்றி, இந்தப் படத்தின் மீதான  எதிர்பார்ப்பு எகிறவைத்துள்ளது.

தனுஷ் என்றால் எப்போதுமே எனர்ஜி தானே. அதே வேகத்துடன் தங்கமகன் ரிலீஸ் வரும் 18ம் தேதியென்பதால் பிஸியா இருந்தவர் இப்படம் பற்றியான சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

“எனக்கு தந்தையாக கே.எஸ்.ரவிக்குமார், அம்மாவாக ராதிகா, காதலியாக எமிஜாக்ஸன், மனைவியாக சமந்தா கூடவே விஜபி தனுஷ். வேல்ராஜ் இயக்கத்தில் “ வேலையில்லா பட்டதாரி வெற்றி பெற்றதால் இந்தப் படமும் நிச்சயம் வெற்றிபெரும்.

தங்கமகன் ரஜினி பட டைட்டிலாச்சே?

படிக்காதவன் படத்திற்குப் பிறகு ரஜினி பட டைட்டில் வைக்கவில்லையே. முதலில் “தமிழ் மகன்” என்று தான் டைட்டில் வைத்தோம். எனது தயாரிப்பாளர் ஆசைப்பட்டதால் தான் தங்கமகன் என்று டைட்டில் மாற்றினோம்.  இந்த காலத்துல படத்தை தயாரிப்பதை விட, டைட்டில் வைப்பது ரொம்ப கஷ்டம்.

நீங்கள்  தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதன் நோக்கம்?

காக்காமுட்டை போன்ற படங்களை தயாரிக்கவேண்டும் மற்றும் திறமையானவர்களைக் கண்டுபிடித்து வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்பதே முக்கிய நோக்கம். பலருக்கும் இந்த வுண்டர்பார் மூலமாக வாய்ப்பு கொடுத்திருக்கிறோம். என் தம்பி அனிருத்தின் திறமையை வெளிக்கொண்டுவர வாய்ப்பு கொடுத்திருக்கோம். இன்னும் பலருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறோம். அதைக் கூறினால் சொல்லிக்காட்டுவது போல ஆகிவிடும்.

வெற்றிபெறுவதற்கு தேவையான  விஷயம் எது?

லக், பணம், சின்சியாரிட்டி - இதுமூன்றுமிருந்தால் தான் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றிபெறமுடியும்.

உங்களின் அடுத்தடுத்த படங்கள்?

துரை.செந்தில்குமார் இயக்கத்தில் த்ரிஷா, ஷாமினி, எஸ்.ஏ.சந்திரசேகர் சார் ஆகியரோடு  கொடி படத்தில் நடிக்கிறேன்.  வெற்றிமாறன் இயக்கத்தில் 'வடசென்னை'யில் நடிக்கிறேன். அடுத்த ஆண்டு ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்கும். அதனைத் தொடர்ந்து ஓர் இந்திப் படம் நடித்துவருகிறேன்.

சிவகார்த்திகேயன் மீதுள்ள கோபத்தில் தான் விஜய்சேதுபதியை வளர்த்துவிடுவதாக சொல்கிறார்களே?

சிவகார்த்திகேயனுக்கும் எனக்கும் எந்தவித பிரச்னையும் இல்லை. உண்மையென்னவென்றால் எங்கள் நிறுவனத்தால் சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் கொடுக்கமுடியவில்லை. சிவாவும் நானும் இன்றும் நல்ல நண்பர்கள். அவர் வளர்வது ரொம்ப பெருமையா இருக்கு.

ரஜினிக்கு பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னீர்களா?

ரஜினியின் தீவிர ரசிகன் நான். அப்புறம் தான் மருமகன். நல்ல ரசிகனா என் வாழ்த்துகளைச் சொல்லிட்டேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!