ஷூட்டிங் போனா..நடி நடி...வீட்டுக்குப் போனா படி படி- பசங்க-2 சுட்டீஸுடன் ஒரு ஜாலி சந்திப்பு!

ஒரு மரம் நிலத்தில் வளர்வதற்கும் தொட்டியில் வளர்வதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது.பரந்து விரிந்து வளர வேண்டிய மரம் போன்றவர்கள் தான் குழந்தைகள்.அவர்களை தொட்டிகளில் அடைத்து போன்சாய்களாய் மாற்றிச் சுருக்கிக் கொண்டிருக்கிறோம்.குழந்தைகளை குழந்தைகளாய் வளரவிடுங்கள்.இந்த ஒன்லைன் பேரண்ட்டைல் மெசேஜ் தான் பசங்க- 2.

இயக்குநர் பாண்டிராஜ் இதற்கு முன்னதாக இயக்கிய ’பசங்க’ திரைப்படம் நடுத்தர வர்க்கக் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.பசங்க-2 இன்னும் ஒருபடி மேலே இருக்கும் உயர்நடுத்தர வர்க்கக் குழந்தைகளின் வாழ்க்கை முறையையும் கல்வியாலும் பகட்டு வாழ்க்கையாலும் அவர்கள் அடையும் துன்பத்தையும் அவர்கள் தரப்பில் இருந்தே எடுத்துச் சொல்கிறது.

கிறித்துமஸ் தினத்தையொட்டி பசங்க - 2 டீமுடன் நடந்த  ஜாலி நேர்காணலின் மினியேச்சர் பாயிண்ட்ஸ் இங்கே!

* பிந்துமாதவி

சூர்யா சார் செட்ல இருந்தா போதும் அந்த ஷூட்டிங் ஸ்பாட் செம ஜாலியா இருக்கும்.அவர் கூட வொர்க் பண்றப்ப ஹார்டு வொர்க்னா என்னன்னு கத்துக்கலாம்.அதே போல அமலா பால் மேக்கப் போடுற விதம் ரொம்பவே பிடிக்கும்.அவங்க டயலாக் டெலிவரி பண்ணும் போது அவ்ளோ அழகா இருக்கும்.அவங்ககிட்ட நான் நிறைய கத்துக்கிட்டேன்

*முனிஸ்காந்த்

இந்த படத்துல எனக்கு வாட்ச்மேன் வாய்ப்பு கிடைக்கும்னு தான் நினைச்சேன்.ஆனா எனக்கு இப்படி ஒரு அழகான ரோல் கிடைச்சிருக்கு.எனக்கு மனைவியா நடிச்ச வித்யா ரொம்ப நல்லா பண்ணியிருப்பாங்க.அவங்களைத் தேடிப்பிடிக்கிறதுக்குள்ள பாண்டிராஜ் சார் ரொம்பவே கஷ்டப்பட்டார்.படத்தைப் பாத்துட்டு சூர்யா சாரும் ஜோ மேடமும் மனசார வாழ்த்தினாங்க.ரொம்ப சந்தோஷம்

வைஷ்ணவி (நயனா)

நான் நிஜமாவே நாட்டி கேர்ள்தான்.இந்த படத்துல நான் கடைசி சீன்ல அழுவேன்ல...அந்த சீன்ல எனக்கு அழுகையே வரலை.ஆனா..கிளிசரின் கொடுத்து அழவிட்டாங்க.அந்த ஷாட்ல ஒரு முறை கூட மிஸ்டேக் பண்ணாம கதை சொல்லி முடிச்சேன்.உண்மைய சொல்லணும்னா இந்த இண்டர்வியூக்கு வர்றதுக்கு முன்னாடி கூட எங்க அத்தை எனக்கு ரிகர்சல் எடுத்து அனுப்புனாங்க.ஒரு இண்டர்வியூக்கு போனப்ப எனக்கு முன்னாடி ஒரு பலூன் இருந்துச்சு.அதை எடுக்கலாம்னு போனா ...மானத்தை ஏன் வாங்குறேனு அம்மா திட்டுறாங்க.சொல்லுங்க நான் பண்ணது தப்பா?

நிஷேஷ்(கவின்)

படத்துல இந்த முனீஸ் அப்பாவை ஒரு சீன்ல பாத்ரூம் கூட்டிட்டு போக சொல்வேன்.அங்க போனா ஆய் வருதுன்னு அடம் பிடிப்பேன்.அப்புறம் எனக்கு அவர் போட்டிருக்குற டிரஸ் கலர்தான் வேணும்னு அடம் பிடிப்பேன்.கடைசியா அவரு போதுமா...போதுமான்னு எல்லாத்தையும் கழட்டிடுவாரு செம காமடியா இருக்கும்.அதே மாதிரி ரியலா சேட்டை பண்ணினா வீட்ல செம பரேடு தான்!

-பொன்.விமலா, படங்கள்: பா.காளிமுத்து

பசங்க-2 டீமின் கலகல வீடியோவை காண:


Do you like the story?

Please Appreciate the Author by clapping!