என் 15 ஆவது படம்தான் எனக்குத் திருப்புமுனை - அனுஷ்கா பேட்டி

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா. இஞ்சி இடுப்பழகி, பாகுபலி, சிங்கம் உள்ளிட்ட படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளிவருவதே இவரை முன்னணி நடிகையாக இருப்பதற்குக் காரணம். ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அனுஷ்கா.

சினிமாவில் அடுத்த கட்ட திட்டம் என்ன?

என்னை சினிமாதான் நடிகையாக இந்த சமூகத்துக்கு அடையாளப்படுத்தியது. அந்த சினிமா துறைக்கு திருப்பி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பணம் தேவையான அளவில் இருந்தால் போதும். அதிகமாக வேண்டாம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கத் திட்டமிட்டு இருக்கிறேன். வழக்கமான அனுஷ்காவை இனிமேல் பார்க்க முடியாது.

உங்களின் பலம்? பலவீனம்?

எந்த ஒரு செயலையும் நிதானமாக யோசித்து செய்வேன். எனது பலமே என் பொறுமை தான். சிறு சிறு விஷயத்துக்கெல்லாம் வருத்தப்படுவது எனது பலவீனம்.

உங்களது பொழுதுபோக்கு?

என்னைப் பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளைச் சேகரித்து வைப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

சக்ஸஸ்கான சீக்ரெட் என்ன?


கள்ளம் கபடம் இல்லாமல் என்னிடம் மற்றவர்கள் பழக வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். பொய் பேசுபவர்களை அறவே பிடிக்காது. அவர்களை விட்டுத் தள்ளியே இருப்பேன். கஷ்டப்பட்டு உழைத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். இதுதான் என்னுடைய வாழ்க்கை சூத்திரம்.

உங்களுக்குப் பிடித்த இந்திய நடிகர்கள் யார்?

எனக்கு பிடித்த நடிகர் அமிதாப்பச்சன். நடிகைகளில் ராணி முகர்ஜி, கஜோல் ஆகியோரை பிடிக்கும். என் வாழ்க்கையில் மறக்கமுடியாத படம் நான் நடித்த ‘அருந்ததி.’ அந்தப் படம்தான் எனக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இது அவருடைய பதினைந்தாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி, எப்போ கல்யாணம்?

என்னைச் சந்திப்பவர்கள் உங்கள் திருமணம் எப்போது? என்று கேட்கிறார்கள். அதுபற்றி உறுதியாகச் சொல்ல முடியாது. நேரமும், பொருத்தமான மாப்பிள்ளையும் அமையும்போது என் திருமணம் நடக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!