ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

ஆவ்ஸம் தனுஷ், ஹியூமர் சிவகார்த்திகேயன், ஈஸிமேன் பாபி சிம்ஹா....கலகல கீர்த்தி சுரேஷ்!

முன்னாள் நடிகை மேனகா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ்குமாரின் மகளான கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சென்ற வருடம் ‘இது என்ன மாயம்’ படம் வெளியானது. பொங்கல் சிறப்பாக சிவகார்த்திகேயனுடன் ரஜினிமுருகன் வெளியாகவிருக்கிறது.  அடுத்தடுத்து கீர்த்தி சுரேஷ் முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

பாபி சிம்ஹாவுடன் பாம்பு சட்டை, பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷுடன் ஒரு படம் , மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் என செம பிசியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் மலையாளம், தெலுங்கு சினிமாக்களிலும்  நடித்து வருகிறார். இந்நிலையில் தான் ஒரு ஃபேஷன் டிசைனராகவே வரவேண்டும் என நினைத்து அதற்கான படிப்பும் படித்ததாகச் சொல்லும் கீர்த்தி கண்டிப்பாக ஃபேஷன் டிசைனிலும் நான் கால் பதிப்பேன் என்கிறார்.

சினிமாவில் நுழைந்தவுடனே  பெரிய படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தம் ஆகியுள்ளது குறித்து அவர் பேசுகையில், முதலில் நான் எனது படிப்பை முடிக்க வேண்டும் என்பதே என் பெற்றோர்களின் கனவு, நடிப்பு என் பாதையில் அதுவாகவே வந்தது நடிக்க ஆரம்பித்தேன். ஆனால் எடுத்த எடுப்பிலேயே எனது சினிமா பாதையில் பெரிய பெரிய வாய்ப்புகள் வருகின்றன. இது எதிர்பாராமல் நடப்பது தான்.

தனது ஜோடிகளான தனுஷ், சிவகார்த்திகேயன், பாபி சிம்ஹா குறித்து பேசுகையில், சிவகார்த்திகேயனுக்கு நல்ல திறமை. டைமிங் காமெடியில் கலக்குவார். முக்கியமான விஷயம் இருவருக்கும் நன்றாக தமிழ் தெரியும். எனக்கு அவரிடம் பிடித்த விஷயம் மிகவும் நேர்மையான, மற்றும் எதையும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் குணம் கொண்டவர்.

எனக்கும் நிறைய விஷயங்கள் சொல்லிகொடுக்கிறார். தனுஷ், எப்போதும் ஒரு ஷாட்டுக்கு முன் பயிற்சி எடுத்துக்கொள்ள மாட்டார். நான் நிறைய பயிற்சி செய்வேன். அவருடைய நடிப்புத் திறமையில் நான் நிறைய கற்றுக்கொள்கிறேன். மேலும் ஷூட்டிங்கின் போது நிறைய விஷயங்கள் பேசினோம், பாபி சிம்ஹாவுக்கு தான் எப்படி ஒரு சீனில் நடிக்கப் போகிறோம் என்பது அவருக்கே தெரியாது, ஆனால் ஷூட் ஸ்டார்ட் என்றவுடன் நடிப்பில் அப்படி ஆச்சர்யப்படுதுவார். மேலும் ஒவ்வொரு காட்சியின் போதும் என்னை நிறைய ஊக்குவிப்பார். எனக் கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!