வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (30/01/2016)

கடைசி தொடர்பு:13:34 (02/02/2016)

’’குஷ்பு என் அக்கா.. அவங்களுக்கு முத்தம் கொடுத்தா தப்பா?’’ - செம ஸ்மார்ட் மாதவன்

இறுதிச்சுற்று என்ன சொல்லிக் குடுத்துச்சு?

”இறுதிச் சுற்று அப்படின்னு ஒண்ணு இல்லவே இல்லன்னு சொல்லிக் குடுத்துச்சு… எல்லா முடிவுக்குப் பின்னாடியும் ஒரு தொடக்கம் இருக்குன்னு சொல்லி குடுத்துச்சு… இன்னும் சொன்னா படத்தோட மறைமுகமான மெஸேஜ் கூட அதுதான்!” - கலகலவென பேசுகிறார் மாதவன்.

 ’’ரங் தே பசந்தி, 3 இடியட்ஸ், தனு வெட்ஸ் மனு இப்படி பல ஹிட் படம் குடுத்தும் இந்தியில பெரிய மார்க்கெட் பிடிக்க முடியலையே?

 ”எனக்கும் அந்த சந்தேகம் இப்பவும் இருக்கு. ஏன்னு எனக்கே தெரியல….இப்பவும் பெரிய பட்ஜெட் பெரிய படம்… பார்க்கலாம். சேஞ்ச் ஓவர் கிடைக்குதான்னு!”

வேட்டை மாதிரி படம் பலமா? பலவீனமா?

 ”அத நீங்கதான் சொல்லணும்… இன்னும் சொன்னா என் நண்பர் லிங்குசாமிக்காகதான் அந்தப் படம் ஒத்துக்கிட்டேன்!” 

ஏன் தனி ஒருவன் படத்த நிராகரிச்சீங்க?

 ”அப்போ நான் இறுதிச்சுற்று வேலைகள்ல இருந்தேன்… எந்தப் படமும் யாருக்காகவும் ஒத்துக்க முடியாத சூழல். எல்லாத்துக்கும் மேல தமிழ்ல வேற மாதிரி ரீஎண்ட்ரி குடுக்கணும்னு நினைச்சேன். அதுதான் இப்போ இறுதிச்சுற்று!”

சமீபத்துல பாத்து வியந்த படம் எது?

 ”பாகுபலி… மத்த எந்தப் படமும் பெரிசா இம்பேக்ட் குடுக்கலன்னு சொல்லல… நான் பார்க்கல!”

வாவ்! வாட் எ ஹீரோ….இப்படி நீங்களே பார்த்து பொறாமைப்படற ஹீரோ யாரு?

“கண்டிப்பா கமல் சார் தான்…என்ன மனுஷன்ங்க அவரு…லெஜெண்ட்…

 பிடிச்ச ஹீரோயின்?

 ”ஓ க்ரஷ் வேற பிடிச்ச ஹீரோயின் வேறல… எனக்கு இப்போ தீபிகா படுகோனே ஆக்டிங்னா கொஞ்சம் இஷ்டம்!”

 இந்த நாலு வருஷத்துல சினிமா ஃபீல்டும் சரி , ஆடியன்ஸும் சரி எங்கையோ போயிட்டாங்களே… ஃபேஸ்புக், ட்விட்டர் சினிமா பார்க்கற முறையவே மாத்திடுச்சே..அத எப்படி சமாளிக்கப் போறீங்க?

" அவங்களுக்கு ஒரு ஸ்டெப் முன்னாடி இருக்கேன்… கண்டிப்பா அதுல நம்பிக்கை இருக்கு. இன்னும் சொன்னா ஃபேஸ்புக் , ட்விட்டர் சமுதாயத்தோட ஒரு பெரிய ஆயுதம்!”

 ஆனா அதே ஃபேஸ்புக் ட்விட்டர் ஒரு படத்த ஈஸியா காலியே பண்ணிடுதே?

 ”அப்போ அந்த படத்துக்கு சக்தி இல்லன்னு அர்த்தம். நல்ல படங்கள்ல அவங்க காலி பண்றதில்ல… அத நான் நம்பறேன்…இன்னும் சொன்னா இன்னைக்கு யாரும் யார பத்தியும் எந்த அவதூறும் சொல்ல முடியாது.. அடுத்த செகண்ட் நம்மள பத்தின ஒரு தவறான செய்தியாகட்டும், வதந்தியாகட்டும் உடனே நாம நேரடியா பதில் சொல்லலாம். இப்படி ஒரு மீடியம் கண்டிப்பா இருக்கணும்!”

 குஷ்புவுக்கு நீங்க முத்தம் குடுத்து பெரிய சர்ச்சையாச்சே…ஒரு திருமணமான ஆணும் பொண்ணும் எப்படி முத்தம் குடுத்துக்கலாம்னு கேட்டாங்க…அதுக்கு உங்க பதில் என்ன?

 ”நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா ஒரே துறைல வேலை செஞ்சோம்…. ஃப்ரண்ட்ஸ் இதெல்லாம் நான் சொல்ல மாட்டேன்… அவங்க என் அக்கா.. இப்போ சொல்லுங்க அந்த முத்தம் தப்பா ,சரியா… இதுக்கு நான் பதில் சொல்லணும்னு நினைச்சிட்டு இருந்தேன்.. நல்ல வேள கேட்டீங்க!”

- ஷாலினி நியூட்டன் -

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்